உளவு பார்க்கும் நிறுவனங்கள்!…. (பகுதி :18) ….. மௌனஅவதானி.
ஒரு நாட்டினை தமது ஆளுமைக்குள் கொண்டு வருவதற்கு, எந்த நாட்டினை இலக்காகக் கொண்டிருக்கிறதோ அந்த நாட்டினுடைய வளங்களைப் பற்றிய முழு விபரங்களையும் சுற்றுலா ஒற்றர்கள் மூலமுhகவும் கல்வியிலாளர்கள் என்ற தகுதியினைக் கொண்டுள்ள ஒற்றர்கள் மூலமாகவும் வல்லரசு நாடுகள் பெற்றுக் கொள்கின்றன.
வளங்களில் காடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.காடுகள் என்பன வெறும் மரங்களாலும், செடிகளாலும், கொடிகளாலும், புல்பூண்டுகளாலும் சூழப்பட்ட ஒரு பகுதி என சாதாரண மனிதர்களால் பார்க்கப்படுகின்றது.
ஆனால் காடுகள் என்பது மனிதர்களுக்குரிய சுத்தமான காற்றைக் கொடுப்பதுடன் நின்றுவிடாது நோய்தீர்க்கும் மருந்துகளையும் உணவுமாகி ஆரோக்கியத்தைக் கொடுத்து உயிரைக் காக்கும் மூலிகைகளின் தோட்டமென்று உறுதியாகச் சொல்லிக் கொள்ளலாம்.
இன்று மனிதகுலம் தனது உணவுக்காக பயன்படுத்திக் கொள்ளும் விலங்கினங்களினதும், ஊர்வனவற்றின் இறைச்சிகளாகட்டும், கடல்வாழ் உயிரினங்களின் ஊணாகட்டும் அவற்றை தவிர்த்துப் பார்க்கும் போது மரம், செடி, கொடி புல்பூண்டு போன்றவற்றிலிருந்து பெறப்படும் உணவுக்குப் பொருத்தமான உணவுப் பொருட்களே மனிதகுலத்தின் உணவுத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்கின்றன.
மனிதகுல வரலாற்றின் ஆரம்ப தோற்றம் பற்றிய ஒருமித்த கருத்து வரலாற்றாசிரியர்களிடம் இல்லவே இல்லை.இன்றுவரை, அதாவது இக்கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்நேரம் வரைகூட மனித தோற்றத்தின் ஆரம்பம் பற்றி எவருமே ‘இதுதான் ஆரம்பம்’ என அறுதியிட்டுக் கூறவில்லை. உயிரினத் தோற்றம் பற்றிய அத்தனை கோட்பாடுகளையும்,உயிரினத் தொடர் படிமுறை பரிணாம வளர்ச்சியையும் அதன் நீட்சியை அறிவியல் கேள்விக்குறியாக்கி வருகின்றன.
இக்கட்டுரையின் ஆரம்ப நிலைகளில பூமியில் நடமாடுகின்ற நடமாடாத உயிரினங்கள் அத்தனையும் பூமியலிருந்தும் காற்றிலிருந்தும் கிடைக்கும் வேதியல் பொருட்களாலெயே ஆக்கப்பட்டவை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.
மனித தோற்றமும் மனித பெருக்கமும் இனவிருத்திக் கொள்கைக்கு உட்பட்டதேயாகும்.உயிரின இனவிருத்திக்குட்பட்ட மரபணுத் தொடர் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.
மனிதனுடைய பிரதான உணவான மரம் செடி கொடி புல்பூண்டுகள் தந்த உணவுப் பொருட்கள் யாவும் உடல்கூற்றின்படி மரபணுத் தொடரோடு தொடர்புடையவை.
காடுகளில் காணப்பட்ட மரம் செடி கொடி புல்பூண்டுகள் மனிதர்களின் தேவை கருதி அவர்களின் உணவுப் பொருளாக அவர்களின் வாழ்வோடு இயைந்து இன்றியமையாத பொருட்களாகின.
ஒரு நாட்டினுடைய பொருளாதாரக் கட்டமைப்பில் காடுகளாகட்டும், மனிதனின் வாழ்வோடு இணைந்து கொண்ட மரம் செடி கொடி புல்பூண்டுகளாகட்டம் அவையும் ஒரு நாட்டினுடைய செல்வங்களே.
வளங்களில் நோயற்ற மனிதனும், உணவில் பஞ்சமில்லாத நிலையுமே அதிஉச்ச வளங்களாகும்.
உளவு நிறுவனங்கள் பல கட்டமைப்புகளைக் கொண்டவையாக இருக்கும்.பல்துறை விற்பன்னர்கள் அதில் அங்கம் வகிப்பார்கள்.அது ஒரு விஞ்ஞான ஆய்வுகூடம் போன்றது.
ஒரு நாட்டுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுக்கும் மரமு செடி கொடி புல்பூண்டுகள் போன்றவை எவ்வாறு அவை பொருளாதாரத்திற்கு துணை போகின்றது என்பதைக் கண்டறிவதில் சுற்றுலா ஒற்றர்களும் கல்வியில் ஒற்றர்களும் கவனம் செலுத்துவார்கள்.
ஒரு நாட்டை வறுமைப் பிடிக்குள் கொண்டு வருவதற்காக காடுகள் மீதும், மரம் செடி கொடி புல்பூண்டுகள் மீதும் அழிவினை ஏற்படுத்துவதற்காக இரசாயண முறையிலும் வண்டுகள் பூச்சிகள் மூலமும் நாசகார வேலைகளைச் செய்வார்கள்.
பொருளாதார வளத்தைக் கொடுக்கக்கூடிய காடுகளை அழிப்பதற்கும் மக்களளோடு இயைந்து வாழும் மரம் செடி கொடி புல்பூண்டு போன்றவற்றை உணவாகக் கொண்டு அழிப்பதற்கான சிறு உயிரினங்களான புழு பூச்சிகளை வண்டுகளை மரபணு மாற்றுமுறையில் உற்பத்தி செய்து அவற்றை ஒரு நாட்டுக்குள் விடுவார்கள்.
இவ்வகை உயிரினங்கள் காடுகளிலும் தோட்டங்களிலும் காணப்படும் மரங்களை உணவாகக் கொண்டு அழிக்கத் தொடங்கிவிடும்.
புழு பூச்சிகள் வண்டுகளில் காணப்படும் இரசாயணப் பதார்த்தம் மரங்களின் மரபணக்களுக்களைச் சிதைக்கின்றன.மரங்களின் மரபணுக்கள் சிதைக்கப்படும் போது ஒரு குறிப்பிட்ட மர வகை முற்றுமுழுதாக பூமியிலிருந்து அழிக்கப்பட்டு விடும்.
இலங்கையின் பொருளாதார வளங்களில் ஒன்றாகக் கருதப்பட்டு மூலிகை உணவுப் பொருளாகவும் கால்நடைகளின் உணவுப் பொருளாகவும் காணப்பட்ட முள்முருங்கை அழிக்கபட்டமை தற்செயலாக நடைபெற்றதல்ல, இலங்கையின் பொருளாதார வளத்தினை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் திட்டமிட்டு வல்லரசு நாட்டின் உளவு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட சதியாகும்.
(தொடரும்)