கட்டுரைகள்

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம்!…. [ சுவை இருபத்திரண்டு ] ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

பலவித பயன்களை நல்கும் பனையின் நுங்கில் அதிஷ்டமும் இருக்கிறது என்றால் ஆச்சரிப்படுவீர்கள். அப்படி என்னதான் அதி ஷ்டம் இருக்கிறது என்று அறிந்திட ஆவல் மேலிடுகிறதல்லவா ! நுங்கினைக் கத்தி யினால் சீவும் பொழுது சாதாரணமாக மூன்று கண்களே காணப்படும். இதுதான் எல்லா நுங்கிலும் அமை ந்திருக்கும் பாங்காகும். ஆனால் சில நுங்குகளைச் சீவும் பொழுது மட்டுமே நான்கு கண்கள் அங்கு அமைந் திருக்கும்.நான்கு கண்களைக் கொண் ட நுங்குகள் கிடைத்தால் நல்ல அதிஷ்டம் என்று சொல்லுவது வழக்க மாய் இருக்கிறது. இதனை ” நுங்கு அதிஷ்டம் ” என்றுதானே அழைத்திடல் வேண்டும். அதிஷ்டம் உள்ள நுங் கினைத் தேடுவதுவதும் ஒரு அதிஷ்டம்தான். நான்கு கண்களே அதிஷ்டம் என்றால் அதிலும் அதிகமான கண்களை உடைய நுங்குகள் வாய்த்தால் இன்னும் அதிகளவு அதிஷ்டமும் வந்து அமையும் அல்லவா ! அப்படி அதிஷ்டம் தரும் வகையில் வந்து அமைவதுதான் ஏழு கண்ணுள்ள நுங்காகும். இப்படியான நுங்கு வாய்த்தால் அதுமிகவும் சிறப்பு என்று கருதப்பப்படுகிறது.

  இலங்கையில் – பனைகள் நிறைந்த செல்வமாக இருக்கின்ற பொழுதும் விற்கும் பொருளாக வரவில்லை என்பதை முன்னர் பார்த்தோம். ஆனால் இந்தியாவில் நுங்கு , விற்பனைக்கு உரியதாக இருக்கிறது என்ப தையும் பார்த்தோம். பனையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் எப்படியாவது அதற்குச் சமனாக நின்று விட வேண்டும் என்னும் எண்ணத்தை மட்டும் தென்னையானது மறவாமல் இருக்கிறது என்பதை அதன் ஒவ் வொரு நிலையிலும் காணக்கூடியதாகவே இருக்கிறது. வெய்யிலினால் அவதிப்படுவோருக்கு கை கொடு க்க நுங்கு வரும் வேளை  ,  அங்கு தென்னையின் இளநீரும் வந்து நின்று விடுகிறது. வருபவர்கள் இளநீரை வாங்குவதா நுங்கினை வாங்குவதா என்னும் நிலையினை – இளநீரின்  வருகை ஏற்படுத்தியே விடுகிறது. என்றாலும் நுங்கின் சிறப்பு சிறப்புத்தான்.காரணம் இளநீர் எந்தநாளும் கிடைக்கக் கூடியது. ஆனால் நுங்கு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியது ஆகும். அதனால் இளநீர் அருகில் இருந்தா லும் நுங்கினையே பலர் நாடுகிறார்கள். அந்தவகையில் தென்னை சற்று பின் வாங்கியே நிற்கும் நிலை ஏற் படுவதைத் தவிர்க்கமுடியாமல் இருக்கிறது. இதனைத் தென்னையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக் கிறது.

  களியக்காலிளைகுழித்துறைமார்த்தாண்டம்இரவிபுதூர்கடைசாமி யார் மடம்அழகிய மண்டபம்    தக்கலைபுலியூர்க்குறிச்சிவில்லுக்குறிதிங்கள் சந்தை,  நுள்ளிவிளை,  திருவிதாங்கோடு,   நெய்யூர் மாவட் டங்களில் சாலை ஓரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரை திறந்தே இருக்கும். இந்தக் கடைகளில் நுங்கும் இருக்கும். இளநீரும் இருக்கும். நுங்கினை அதிக மாக பணகுடிஉள்ளிட்ட நெல்லை மாவட்ட ங்களில் இருந்து வாங்கியே இங்குள்ள கடைக் காரர்கள் விற்று தங்களின் வருமானத்தை ஈட்டுகிறார்கள் என்பது நோக்கத்தக்கதாகும். கொட்டாரம் தொடக்கம் வில்லுக்குறி வரை சாலை ஓரத்தில் நுங்கு வியாபரம் இன்றுவரை தொடர்ந்தபடியே இருக் கிறது தமிழ் நாட்டில் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படியான  ஒரு நிலை யாழ்ப்பாணத்திலும் இல்லை. இலங்கையின் ஏனைய பாகங் களிலும் காணவே முடியாது. கன்னியாகுமரி மாவட்டங்களில் இருப்பவர்கள் நுங்கில் சர்பத்தையும் ஊற்றிச் சுவைத்தும் மகிழுகிறார்கள் என்றும் அறிந்திட முடிகிறது.

  நுங்கு வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியதல்ல. வருடத்தில் குறிப்பிட்ட மாதத்திலேதான் கிடைக்கிறது. அப்படிக் கிடைக்கும் நுங்கின் சுவையினைத் தொடர்ந்து சுவைக்கவே யாவரும் விரும்புகிறார்கள். அப்படி விரும்புகின்றவர்களுக்காக நுங்கினைப் பதப்படுத்தி அதனைத் தகரத்திலோ அல்லது போத்தல்களிலோ பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்யும் முறையும் இப்போழுது வந்திருக்கிறது. தாய்லாந்து நாடு குறை ந்த அளவில் பனையினைக் கொண் டதாக  இருந்தாலும் நுங்கினைப் பதப்படுத்தி விற்பனைக்கு வழி சமைத் திருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய விடயமாகும். கம்போடியாவில் பனையினை மிகவும் பிரியத் துடன் அந்த நாட்டு மக்கள் பாதுகாத்து வருகிறார்கள். அந்த நாட்டில் பனையிலேயே எங்கள் தமிழ் மொழி யில் ” நுங்கு சாறு ” என்று பொறிக்கப்பட்ட அறிவிப்பு இடம் பெற்றிருப்பதும் கருத்திருத்த வேண்டிய விடயம் எனலாம்.

  யாழ்ப்பாணத்தில் குறிப்பாக கீரிமலையில் 1970 ஆம் ஆண்டில் நுங்கினைப் பதப்படுத்தி தகரத்தில் அடைப் பதற்கான முயற்சி எடுக்கப்பட்டது.எடுக்கப்பட்ட முயற்சி வெற்றிகரமாக அமைந்திட வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு விட்டது. நாட்டில் ஏற்பட்ட பொருந் தாச் சூழ்நிலையால் அந்த முயற்சி தடைப் பட்டுப் போகும்படி ஆகியே விட்டது.பனைவளம் நிறைந்துள்ள யாழ்மண்ணில் இத்தொழில் சிறப்படைந்தால் நல்ல பயனினை அளிக்கும் அல்லவா !                                       
   நுங்கில் 89  விகிதம் நீர் இருக்கிறது.புரதம் 0.8 விகிதம் கொழுப்பு 0.07 விகி தம் காபோஹைத ரேற்று 21 விகி தம் நாற்பொருள் 0.9 விகிதம்சர்க்கரை 8.3 விகிதம்கல்சியம் 7.4 விகிதம் பொஸ்பரசு 11.8 விகிதம்பீனோல் 0.05 விகிதம்விற்றமின் C 5 விகிதம் என்னும் அளவில் நுங்கில் போசனையின் கூறுகள் காணப்படுகின்றன என்பது முக்கிய விடயமாகும்.

  நீண்ட காலத்துக்கு நுங்கினைச் சுவைத்து மகிழ்ந்திட வைப்பதற்கு பதப்படுத்தல் முறையே உகந்ததாக அமைகிறது எனலாம். நல்ல நுங்கு முதலில் தெரிவு செய்யப்படுகிறது. பின்னர் அவற்றை சுத்தமான நீர் கொண்டு கழுவப்படுகிறது. நுங்கினை அடைப்பதற்கான கண்ணாடிப் போத்தல்கள் தெரிவு செய்யப்பட்டு அப்போத்தல்களும் சுகாதார முறையில் பேணப்படுகிறது. சுத்தமாக்கப்பட்ட நுங்குகள் பதமான சீனிக்கரை சலுக்குள் இடப்படுகிறது. அதன்பின் அதனைத் தளர்வாக மூடி பொருத்தமான வெப்பநிலையில் சூடாக்கப்ப டுகிறது. அதன் பின் உடனடியாகவே குளிரச்செய்து போத்தல்களில் இட்டு இறுக்கமான மூடியால் அடைக் கப்பட்டு விற்பனைக்கு நுங்கு தயார் செய்யப்படுகிறது என்று நுங்கு பதனிடம் முறை சொல்லப்பட்டருக்கி றது. இந்த முறையானது யாழ்மண்ணில் ஒழுங்கான முறையில் இடம்பெறுமானால் பலருக்கும் நல்ல  வேலைவாய்ப்பும் கிடைக்கும். குறிப்பிட்ட காலத்தில் சுவைக்கும் நுங்கினை விரும்பிய பொழுதெல்லாமே சுவைத்தும் மகிழ்ந்திடும் வாய்ப்பும் அமையுமல்லவா !

     நுங்கு விரைவில் கெட்டுவிடும் தன்மையினைப் பெற்றிருப்பதால் அதனை உடனேயே சுவைப்பதுதான் உகந்தாக இருக்கிறது. என்றாலும் அந்தச் சுவையினைத் தொடர்ந்து சுவைத்திட எண்ணும் நிலையும் தற் போது ஏற்பட்டிருக்கிறது. நுங்கினைச் சுவைத்து மகிழவேண் டும் என்பதற்காகவே நுங்கினைப் பதப்படு த்தி வைக்கும் சிந்தனையும் உதயமாகியது எனலாம். தகரத்தில் அடைப்பதுகண்ணாடிப் போத்தல்களில் அடைப்பது என்னும் வகையில் நுங்கு நீண்ட நாட்க ளுக்குப் பாதுகாப்பாய் இருக்கவும் நுங்குப் பிரியர்க ளின் எண்ணத் தைப் பூர்த்தி செய்வதாகவும் அமைகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  நுங்கினைப் பொலித்தீன் பைகளில் சேமித்து வைத்தும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பாதுகாப்பாக வைத்தி ருக்கலாம் என்றும் அறிந்திட முடிகிறது.தோல் நீக்கப்பட்ட நுங்கினை வேகவைத்தோ அல்லது வேகவை க்காமலோ காற்றோட்டமுள்ள காற்றோட்டமற்ற பொலித்தீன் பைகளில் 50 செ  வெப்பநிலையில் பத்து நாட்கள் பழுதுபடாமல் வைத்திருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  நுங்குப் பிரியர்களுக்காக நுங்கினைப் பதப்படுத்தி சில பொருட் களும் வந்து அமைகின்றன.இந்த வகை யில் அமைந்த மூன்று பொருட்களைப் பார்ப்போம். முதலில்” நுங்கு உலர்பழம் ” என்பது வருகிறது. நுங் கினை இரண்டாகப் பிரித்து அதனைக் கூர்மையான கத்தியில் குத்தி எலுமிச்சைக் கரசலில் ஒரு மணி நேரம் அமிழ்த்தி வைத்திடல் வேண்டும்.அதன் பின் கத்தியிலிருந்து தனியாக எடுத்து தூய்மையான நீரில் வைக்க வேண்டும். ஏற்கனவே எலுமிச்சைக் கரசலில் இருந்த நுங்கில் எலுமிச்சை படியாமல் இருப்பதற்கே இப்படிச் செய்யப்படுகிறதாம்,இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நுங்குத் துண்டுகளை சர்க்கரைப் பாகில் ஒரு நாள் முழு வதும் நனைத்து வைக்கப்பட வேண்டும்.நனைப்பதற்கு முன்னர் சர்க்கரைப் பாகில் உணவுக்குரிய நிற மூட்டியைக் கலந்து விடல் வேண்டும். நனைக்கப்பட்ட நுங்குத் துண்டுகளை அடுத்தநாள் எடுத்த பின் னர்   சர்க்கரைப் பாகினை கொதிக்க வைக்க வேண்டும்.சர்க்கரைப் பாகின் கொதி அளவா னது  600 பிரிக்ஸ் இருக்க வேண்டும்.அதன் பின் சர்க்கரைப் பாகைக் குளிரவைத்து அதில் நுங்குத் துண்டுகளை 24 மணி நேரத் துக்கு நனைத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சர்க்கரைப் பாகின் அளவைக் கூட்டி 75 விகிதம் வரையில் ஒவ்வொரு நாளும் மாறி மாறி சர்க்கரைப் பாகினுள் நுங்கு துண்டுகளை நனைத்தெடுத்தல் வேண் டும்.இப்படி நனைத்தெடுப்பது ஒரு வாரம் வரை இடம் பெறல் வேண்டும்.அதன் பின் நனைந்த நுங்குத் துண்டுகளை பாகிலிருந்து எடுத்து கொதிநீரில் இட்டு ஒட்டி யிருக்கும் சர்க்கரைப் பாகை பிரித்தெடுக்க வேண்டும்.இவ்வாறு பெறப்பட்ட நுங்குத் துண்டுகளை நிழலில் உலர்த்தி சிறு துண்டுகளாக நறுக்கி பொலித்தீன் பைகளில் அடைத்து உலர்ந்த இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.இப்படியெல்லாம் செய்து வருவது தான் ” நுங்கு உலர் பழம் “

   இளம் நுங்கைத் தேர்ந்தெடுத்து அதனை கல்சியம் ஒக்சைடு கலந்த நீரில் நனையவிட்டுப் பின்னர் சுத்தமான நீரில் கழுவி அதன் பின்னர் சிட்ரிக் அமிலம் கலந்த நனைத்து பின் சுடு நீரால் கழுவி பின்னர் சர்க்கரைப் பாகில் கலந்து நூல் போன்ற தன்மை அடையும் வரை வேகவைக்க வேண்டும். பின்னர் சர்க்கரைப் பாகிலிருந்து நுங்குத் துண்டுகள் அனைத்தையும் வெளியே எடுத்து நிழலில் உலரவிட வேண்டும்.சர்க்கரைத் துகள்கள் நுங்கின் மேல் பகுதியில் ஒட்டிக்கொண்டு சுவையான மிட்டாய் ஆகிவிடுகிறது. காற்றோட் டமுள்ள இட த்தில் வைத்துப் பின்னர் சுவைத்து மகிழலாம். இதுதான் ” நுங்கு மிட்டாய் “

   நுங்கினைக் கொண்டு குளிர் பானம் செய்யலாம். நுங்குச் சாறு சர்க்கரைப் பாகுஎலுமிச்சைச் சாறு இவற்றை முறைப்படி கலப்ப தால் ” நுங்குச் சாறு ” பெறப்படுகிறது. நுங்கின் சாறுபால்சர்க்கரை,   ஏலக்காய்ஜாதிபத்திரிமுந்திரிப்பருப்பு இவற்றைக் கலந்து ” நுங்கு நீர் ” என்னும் சுவையான பருகும் பானமும் தயார் செய்யப்படுகிறது. இப்படியெல்லாம் செய்யும் முறைகள் இருக்கின்றன என்னும் செய்திகள் நுங்கின் பயன்பாட்டை மேலும் சிறப்பாக்கி இருக்கிறதல்லவா ! இப்படியெல்லாம் செய்வதும் இவற்றைத் தொழிலாக்குவதும் விருத்தி அடைந்தால் – ஏற்றுமதி வருமானமும் கிடைக்கும். பலருக்கும் வேலைவாய்ப்பும் கிடைத்திடும் நிலையும் உருவாகும் அல்லவா !

    நுங்கு சுவைத்து மகிழ்ந்ததோடு நின்று விடாமல் விளையாட்டுப் பொருளாகவும் அமைந்திருக்கிறது. கிரா மங்களில் விளையாடப்பட்ட பல விளையாட்டுகள் மறைந்து போய் , மறந்து போய்க் கொண்டே இருக்கிறது. கிராமப்புற விளையாட்டுக்களில் நுங்கும் தனது பங்களிப்பினை வழங்கி நிற்கிறது என்பதும் நோக்க த்தக்கது. சுவைத்த பின் நுங்கினைத் தூக்கி எறியாமல் அதனைக் கொண்டு ” நுங்கு வண்டி ” செய்து அதனை ஒரு விளையாட்டாக்கியதை மறந்துவிடல் கூடாது. வெட்டிய இரண்டு நுங்குகளை எடுத்து அவற்றை இணைப் பதற்கு நடுவில் ஒரு குச்சியை அச்சாணியாகச் செருகி அத்த நடுக் குச் சியைத் தொட்டு நிற்க கவர் உள்ள பெரிய தடியினை பயனாக்கி நுங்கு வண்டியை மேடு பள்ளம் என்று பாராமல் கிராமத்தில் சிறுவ ர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடுவதை நினைத்துப் பாருங்கள். நகரத்தில் இருக்கின்றவர்க ளுக்கும் அங்கிருக்கும் சிறுவர்களுக்கும் இந்த நுங்கு வண்டியையும் தெரியாது. ஏன் நுங்கையே தெரியாது. நுங்கு வண்டியை போட்டிக்கு ஓட்டி விளையாடும் பொழுது சிறுவர் களுக்குத் தனியான ஒரு உற்சாகம் பீறிட்டே  எழுந்து நிற்கும்.நுங்கு வண்டியினை சிறுபராயத்தில் ஓட்டி மகிழ்ந்தவர்களுக்கே அந்த ஆனந்தம் தெரியும்.

  கோவில் திருவிழாக் காலங்களில் அலங்கரிக்கும் வகையில் நுங்கும் இடம் பெறுகிறதுநுங்கினைக் குலை யாகவே அலங்காரத்துக்குக் கட்டுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது. அலங்காரமாய் அமையும் நுங்கு அருமையான உணவாயும் அமைகிறது ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் என்பதும் நோக்கத்தக்கது,   சுவைத்த பின் இருக்கும் நுங்கின் தோல்பகுதிகளை பனங் கோளை என்று அழைக்கிறோம்.இந்தப் பனங் கோளையினைக் கத்தியினால் சிறிது சிறிதாக சீவி யெடுத்து ஆடுகளுக்கும் , மாடுகளுக்கும் கொடு க்கப்ப டுகிறது. அவையும் அதனை ஆசையாகத் தின்று சுவைக்கின்றன. பனங் கோளைகளைச் சாப்பிட பின்னர் நல்ல சுவையான பாலையும் தந்து நாங்கள் பருகி மகிழ்திடவும் வைக்கின்றன. இத்தனைக்கும் அடிப்படை யாய் இருப்பது கற்பகதருவின் கொடையாய் இருக்கும் நுங்கு என்பதைக் கருதிருத்தல் அவசியமேயாகும்.

    

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

                                 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
                                       மெல்பேண் …. அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.