கவிதைகள்
“கம்பனும் வால்மீகியும் ஓர் ஒப்பீடு” …. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.
கம்பன் விழா-2021 பன்னாட்டு கவியரங்கில் “கம்பனும் வால்மீகியும் ஓர் ஒப்பீடு” என்ற தலைப்பில் வழங்கிய கவிதை! அன்னைத் தமிழ்தொட்டு அனைவருக்கும் வணக்கம்.
நான் கவிதை ஏர்பூட்டி உழ இருக்கும் கழனி
ஒப்பீடாய் கம்பனும் வால்மீகியும் எனும் கழனி உழும்போது கலப்பையின் கொழுபட்டு மண்புழுக்கள் வலியால் துடிப்பதுண்டு உழவன் மண்ணை பதப்படுத்தவே உழுகிறான் மண்புழுக்களை வதைசெய்ய உழுவதில்லை நிரந்தரமாய் இங்கு ஏதுமில்லை பரந்து விரிந்த இந்நாட்டினிலே திருடனாக வாழ்ந்தவர் மனம்மாறி திருந்தி வாழ்ந்துமே துறவியானார் இப்படி ஒரு துறவியை நான்கூற அப்படியா என்று கேட்போர்க்கு தப்பாக நானேதும் சொல்லவில்லை இப்புவியில் அவர் வால்மீகியாம் வாய்வழி கதையாக பல்லாண்டாய் செவிவழி கேட்ட கதையினையே தொகுத்து வழங்கினாரே வால்மீகி வந்தது வடமொழியில் இராமகதை சடையப்ப வள்ளலாம் செல்வந்தர் அடைக்கலம் கொடுத்து ஆதரித்த கவியில் தனக்கென ஒருவழிகண்ட கவிஞனாய் நின்றவராம் கவிகம்பர் வடமொழி வால்மீகி இராமாயணமதை திடமாக தழுவிநின்று நூலேற்றிடவே தமிழில் வந்தது கம்ப இராமாயணமாய் அமிழ்தினை சொரிந்ததே வழிநூலாய் புத்தரெனும் பெருந்துறவி வாழ்ந்தார் மொத்தமாய் எதிர்த்தார் வேள்விதனை மெத்தனமாய் விலங்குகளை தீயிலிட்டு அத்தனையும் வீடு பெறுமென்றார் சிலர் விலங்கினை தீயில்தள்ள வீடுபேறெனில் உமக்கும் கிட்டும் தீயிறங்கும் என்றார் புத்தர் வேள்விசெய்தோர் புத்தரை வெறுத்து நின்றார் வால்மீகியி்ல் பௌத்தர்கள் அரக்கரானார் கம்பர் காலத்தில் பௌத்தம் அழியவுமே வம்பாக சமணரும் கழுவேற்றப் பட்டார் எஞ்சியதோ வைணவமும் சைவமும்தான் மிஞ்சியது யாரென்பதே அன்று போட்டி சோழரும் சைவத்தை தழைக்க வைக்க வாழவைத்தார் வைணவத்தை கம்ப கவி வகைசெய்தும் சைவம் வீழ்ந்திடவில்லை திகைத்தே சிவபக்தரை அரக்கரென்றார் இராமன் சிவதனுசை ஏற்றி முறித்தார் இராமனே சிவபானங்களை அழித்தார் சிவன் அழிக்கும் கடவுளாக மாற்றப்பட்டார் சிவசூலத்தை நெஞ்சில் பாய்ச்சினாலும் அழியாநெஞ்சுடைய இராவணனை இராமன் தனது அம்பால் பிளந்துகாட்டி மானிடனாய் சிவனை மிஞ்சியும் நின்றார் வால்மீகி வழிசெய்தார் பௌத்தம் அழிந்தது கம்பன் துணைநிற்க வைணவம் தழைத்தது இருவருமே தத்தம் கடமையைச் செய்தே இராமனால் வைணவத்தை வாழ வைத்தார் சீதையின் சிறையெடுப்பு இல்லையெனில் சிறப்பாரோ கம்பனும் வால்மீகியும் இங்கு சிறையெடுப்பென்பது இரண்டிலும் உண்டு முறைதனில் முரண்பட்ட முரண்பாடுமுண்டு வால்மீகியில் சீதையின் சிறையெடுப்பில் இராவணன் சீதையைப்பற்றி இழுத்தான் சீதையை அணைத்தபடி போர்செய்தான் வெட்டிவீழ்த்தினான் ஜடாயுவை வான் நின்று ஓவியங்கள் பலவுண்டு இதனைச் சொல்ல சீதை இராவணன் பிடியிலிருந்ததைக் கூற வால்மீகி சீதையை பெண்ணாய் கண்டதாலே இராவணன் சீதையைப்பற்றி சிறைசெய்தான் கம்பரோ முற்றிலும் முரண்பட்டு நின்றார் தமிழர் பண்பென்று அதைக் காத்து நிற்க பூமியை பெயர்த்தே சீதை சிறையெடுப்பு இராவணன் சீதையைப்பற்றி இழுக்கவில்லை தமிழர் பண்பென தனித்து நின்றபின் தவறாக ஏன் தடம் புரண்டும் விட்டார் சீதையைத்தேட அநுமனை அனுப்பி அவலமாய் அங்க அடையாளம் சொன்னார் செப்பென்பன் கலசமென்பன் செவ்விளநீரும் தேர்வனென செப்பியதும் அநுமனிடம் ஏற்புடையதோ தசரதன் மடிந்ததை தனயனுக்கு சொல்ல பெண்களொடு படகில் சென்ற பொழுதில் கற்பனையில் கண்டதும் தமிழர் பண்போ இராமனை மானிடனாய் வால்மீகி கண்டான் இறைச்சி மதுவுண்ட கதையும் சொன்னான் இராமனை தெய்வமாய்த் தொழுத கம்பன் சீதையை மட்டும் அதீத கற்பனை செய்தான் நன்றி, வணக்கம். -சங்கர சுப்பிரமணியன்.