Featureஇலக்கியச்சோலை

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மூத்தோர்!….. நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.

 

A.T.B.C வானொலியில் “சந்திப்போம் சிந்திப்போம்” என்ற நிகழ்ச்சியை நடத்தினேன். அதில் அன்பு என்பது பற்றிய ஒரு கலந்துரையாடல் நடத்தியபோது ஒரு இளைஞர் கூறினார், அறுபது தாண்டியவர்கள் வாழ்வை அனுபவித்தவர்கள்,அதனால் மேலும் வாழும் காலத்தில் இறை சிந்தனையில் கழிப்பதே நல்லது என்றார். அதை ஆமோதிப்பது போல ஒருவர் எனது தாயார் அப்படித்தான் வாழ்கிறார், மத சம்பந்தமான நூல்களை வாசிப்பார், தொலைக்காட்சியில் செய்திகளை மட்டுமே கேட்பார் என்றார். தனிப்பட்ட ஒருவர் மனநிலை எப்படியோ விமர்சிப்பதை விடுத்து புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மூத்தோர் நிலையை சிறிது பார்ப்போம்

வயோதிகம் எவர் வாழ்விலும் வரப்போகும் ஒன்றுதான். முதுமை என்பது இளமையில் இருந்த உடல் உறுதியை காலத்தால் இழப்பது. அதனால் பல உடல் உபாதைகள் ஏற்படும் அதற்கு மேலும் புலம்பெயர்ந்த நாடுகளிலே தமது பிள்ளைகளுடன் வாழ வந்திருக்கும் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. இந்த வயோதிகர்கள் மேலும் சில காலங்கள் இவர்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என சிந்திப்பது அதற்கான செயல்களை செய்வது சமூகத்தின் கடமை மட்டுமல்ல அதுவே மனிதாபிமானமும் ஆகும்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”

“தாயிற் சிறந்த கோயிலுமில்லை

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”

இவ்வாறெல்லாம் எமது முன்னோர் சொல்லி சென்றது நாம் எமது பெற்றோரை அவரது உண்மையிலே அவர்கள் தள்ளாமையிலே வாடும் போது கை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. உறவுகளுடன் கூடி வாழ்ந்தவர்கள், புலம்பெயர்ந்து பிள்ளைகளுடன் வாழ்வதால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. இவற்றை மூடி மறைக்காது நாம் விரிவாக ஆராய்ந்து அதற்கு நிவாரணம் தேட வேண்டியது அவசியமே.

புலம்பெயர்ந்த முதியோரின் முதல் பிரச்சனை அவர்களது சொந்த ஊரில் வாழ்ந்ததால் அவர்கள் நட்புறவுடன் அளவளாவி தாமே நினைத்த இடத்திற்கு போகும் வசதி உண்டு. ஆனால் இங்கு அவர்கள் அந்த நிலையில் இல்லை. அவர்கள் அதை இழந்த நிலையில் கூண்டுப் பறவையாகியதை நாம் மறுக்க முடியாது. தாம் விரும்பியபடி கோயில் கடை கண்ணி என நினைத்தபடி உலாவி வர முடியாமல் வீட்டில் அடைபட்டுக் கிடப்பவர் எத்தனைய பேர். இத்தனையும் தாங்கி வாழ வேண்டிய நிலை, அதனால் ஏற்படும் மன அழுத்தம் மனம் விட்டு பேச யாராவது கிடைத்தால் மனம் ஆறும். அதற்கும் அருகாமையில் யாரும் கிடையாது இவ்வாறாக இவர்கள் படும் துன்பங்கள் பல.

சிலர் தமது உள்ளக் குமுறலை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.அதை உங்களுக்கு தருகிறேன் .எனது பேரக் பிள்ளைகள் குழந்தைகள்ஆக இருக்கும் வரை அவர்களை வளர்த்து எடுக்க எனது உதவி தேவையாக இருந்தது அவர்கள் வளர்ந்ததும் எனது உதவி தேவையற்றதாகி விட்டது. இந்த சமயத்தில் நாங்கள் வேண்டாத பாரமாகிறோம். வேண்டாத பாரம் எப்பொழுதும் எரிச்சல் ஊட்டுவது இயற்கைதானே.

சென்னையில் இருந்து இங்கு மகளுடன் வாழ்ந்த ஒரு அன்னை யாரிடம் ஆஸ்ட்ரேலியா வாழ்வு எப்படி இருக்கிறது என கேட்டபோது அவர் கூறிய பதில் இது ஒரு High class jailஅல்லது House arrest ஓ போன்றது என்றார். அவர் வேடிக்கை போல் கூறிய போதும் அதன் உள்ளே பொதிந்திருக்கும் சோகத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?.

பிறிததொரு தாயார் கூறியதாக மகன் என்னிடம் கூறினார் “நீ என்னை இங்கு ஒரு வேலைக்காரியாக தானே வைத்திருக்கிறாய்” என்றாராம். ஆமாம் மகன் மருமகள் இருவரும் காலை 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி விடுவார்கள். பிள்ளைகளை பராமரிப்பது சமைப்பது இப்படி எத்தனை வேலைகள், அம்மா இவ்வாறு கூறியதும் உடனே சென்னைக்கு அனுப்பி விட்டேன் என்றார் மகன்

“எனது பதின்ம வயது (Teen age)பேரன் பேத்திகள் நாம் தம்முடன் வாழ்வதை அவ்வளவாக விரும்புவதில்லை.அவர்களுடன் வாழ்வதால் மகனும் மருமகளும் தங்களுக்குள் இருக்கவேண்டிய அன்னியோன்யத்தை இழக்கிறார்கள்.பெற்றவர்களை ஒரே வீட்டில் வைத்துக்கொண்டு அவர்களால் அந்நியோன்யமாக வாழ முடியாது. அதனால் தனித்து வாழ்வதையே விரும்புகிறேன் இருந்தும் இந்த பழக்கப்படாத ஊரில் விதவையாகி விட்ட நான் தனியே வாழ்வது எப்படி ? ” என தவித்தார் ஆங்கிலம் பேச தெரியாத தாயார்.

எனக்கு கீழ் வீட்டில் ஒரு அறை தந்துள்ளார்கள். என்னால் மாடிப்படி ஏறி முடியாது. அவர்கள் அதிகமாக கீழே வருவதும் கிடையாது. யாவரும் ஒன்றாக உணவு அருந்துவது ம்கிடையாது. நான் தனியாகவே சாப்பிடுவேன். ஏதோ தனிமையாக விடப்பட்டது போல் உணர்கிறேன்.எனது பதின்ம வயது (Teen age) பேரப்பிள்ளைகள் அவர்கள் நண்பர்கள் வரும்போது நான் அவர்கள் முன் செல்வதை விரும்புவதில்லை.

எழுபது வயதைத் தாண்டிவிட்ட நான் ஊரில் உள்ள சொத்தை விற்றுவிட்டு மகனுடன் அவுஸ்திரேலியாவில் வாழ வந்து விட்டேன். ஆனால் இப்பொழுது எனது மகன் குடும்பம் பெருத்து விட்டது. அவர்கள் வாழ இடம் வேண்டும் எனகு தனியாக வாழ்வதே மேல் என தோன்றுகிறது. எனது மகனுக்கு உதவவே அவர்களுடன் வாழ்கிறேன். எனது மனமும் உடலும் களைத்து விட்டது தனிமையை நாடுகிறது, அவர்களுக்கு பாரமாக வாழ விருப்பம் கிடையாது, தனியாக வாழ்வதற்கு என்னிடம் பணம் கிடையாது.

இங்கு வேறுபட்ட 6 மூத்தோரின் உள்ளக் குமுறலை கண்டோம்.

பேரப்பிள்ளைகளை வளர்த்தெடுக்கும்வரை அவர்கள் உதவியை பெற்ற சொந்தப் பிள்ளைகள், தமது பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோரை தமது குடும்பத்தில் ஒருவராக எண்ணுவது கிடையாது. அதாவது குடும்பம் என்பது கணவன் மனைவி அவர்கள் பெற்ற பிள்ளைகள் எனும் குறுகிய வட்டத்துள் அடக்கி விடுகிறார்கள். இதனால் பெற்றோர் ஏதோ ஒரு வெறுமையை அனுபவிக்கிறார்கள். அதேநேரம் பெற்ற பிள்ளைகளுடன் ஒட்டி உறவாட வேண்டிய நிலை. .பாசப்பிணைப்பு செய்வதறியாது தவிக்கிறார்கள். குடும்பத்தில் ஒருவராக வெளியே போகும்போதும் கூட்டி போவதில்லை . கூறும் காரணம் காரில் இடமில்லை .சமூக உறவுகளை இழக்கிறார்கள் பெற்றோர் . பலக சமூக உறவு கள் அவர்கக்ட்குப் கிடைப்பதில்லை. இவற்றால் ஏற்படும் தனிமை அவர்கள் மனதை பாதிக்கிறது இந்த பின்னணியில் உறவுகளை இழந்து புதிய பிரதேசத்திலே சூனியத்தை எதிர்கொள்கிறார்கள்.

வெளியே போவதற்கு பிள்ளைகளின் உதவியை கேட்க வேண்டும் என்ற காரணத்தால் வெளி இடங்களுக்கு போவதை கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் விரும்புவார்களோ என்ற தயக்கத்தால் தமது நண்பர்களை வீட்டிற்கு அழைக்கத் தயங்குகிறார்கள்.

அரசால் பல சமூக சேவைகள் வயோதிபரை அளிக்கப்பட்ட போதும் பல முதியவர்கள் இவற்றைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். பிள்ளைகள் தாம் இல்லாத சமயத்தில் முன்பு பழக்கப்படாத புதியவர் வீட்டிற்கு வருவதை விரும்புவதில்லை. இவற்றையெல்லாம் உணர்ந்த பெற்றோர் பலவகைகளிலும் படும் வேதனைகள் பெற்ற பிள்ளைகளை குறை கூற விரும்பாத மனம் உள்ளே வெதும்பி சாகாமல் சாவதை பிள்ளைகள் உணரவேண்டும்.

எமது சமூகத்தில் பெற்றோரோ தமது சுகங்களை எல்லாம் தியாகம் செய்து பல தொல்லைகளை அனுபவித்தும் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என உழைத்தவர்கள். அவ்வாறு பல தியாகங்களைச் செய்து எம்மை வாழவைத்த பெற்றோரை இறுதிக்காலத்தில் நிம்மதியாக வாழ வைப்பது நமது கடமை அல்லவா?

நாம் சென்னையில் வாழ்ந்த போது ஒரு அனுபவம் மிக்க பாட்டி கூறிய மணியான வாசகம் இது

“வாழ்வு என்பது இளையவராக பெற்றோருரடம் கடன் பெறுகிறோம் அதை வட்டியுடன் அவர்கள் முதுமையில் திரும்பக் கொடுப்பதே வாழ்வு”.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.