இலக்கியச்சோலை
“எண்ணமெல்லாம்” கவி நூல் வெளியீடு!
12.12.21.Swiss Bern ல் கவிஞன் “இன்பம் அருளையாவின்” 144 பக்கத்தையும்+19 மரபு +30 புது+20 இசை கவிதைகளையும் உள் வாங்கிய “எண்ணமெல்லாம்” கவி நூல் நேரம் பிந்திய போதும்! சிறப்புற நடைபெற்றது.
திருமதி நிர்மலாதேவியின் தலைமையுரையுடன்+சிவகீர்த்தி+முருகவேள்+ஆதிலட்சிமி ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. ஒரு சிலர் நூலைவிட்டு வெளியில் சென்றதை அவதானிக்க முடிந்தது.
பரதம்+பாட்டு+மஜிக் என கடகண்ட நிகழ்வாக அரங்கேறியது.மாணவி அம்பிதாவின் பாட்டு மிக சிறப்பு.அவரின் ஒரு நிமிட வாழ்த்துரை எனை கவர்ந்தது.
அரங்கில் பாடிய அத்தனை பாடல் வரிகளும் நூலாசிரியர் வரைந்ததே. அனைத்து பாடல்களும் எனை கவர்ந்தன.திரு.இன்பம் எளிமை கொண்டவராக காணப்பட்டார்.
“அரிக்கன் லாம்பின் ஒளியில்..பேனா முனையும்,வரைபவரும்” பொறித்த அட்டைப்டம் மிக மிக சிறப்பு.
நூலாசிரியர் மேடையில் *உரை நிகழ்த்த தவறியது!* மனவெளியில் ஒரு வெறுமையை ஏற்ப்படுத்தி நின்றது.
அம்பலவனின் மஜிக் சபையை கட்டிப்போட்டது.
நூல் வெளியீட்டை நிகழ்ச்சியின் இடையில் வைத்திருப்பின் மெருகேறியிருக்கும்.
இது ஒரு ‘கடகண்ட’ நிகழ்வாகவே அமைந்திருந்தது.
அறிவிப்பாளர் அதிக நேரத்தை தின்று, தனது திறமையை.. பறை சாற்றியது பலருக்கு சலிப்பை கொடுத்து நின்றது.
பொதுவாக நல்ல நிகழ்வு.
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா.