கவிதைகள்
தீக்கடைக்கோல்!…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
அன்னைத் தமிழுக்கும்
ஆசான் வள்ளுவனுக்கும் இக்கவியரங்கின் தலைவர் கவியருவி திரு. அப்துல் காதர் அவர்களுக்கும் ஈடற்ற கவிஞர் பெருமக்களுக்கும் உயிருக்கிணையான உலகத்தமிழர் அனைவருக்கும் ஊடகத் துணைபுரியும் தமெரிக்கா தொலைக்காட்சிக்கும் எல்லா அமைப்புக்களுக்கும் ஏற்றமிகு தில்லி கலை இலக்கிய பேரவைக்கும் ஐயம் திரிபர ஒப்பற்ற முறையில் ஓங்கி உரைத்திடுவேன் ஔவையுரைத்த அருந்தமிழில் அஃதாம் என் வணக்கம்.பாக்களாம் கவிதைப் பூக்களில் ஈக்களாய் மொய்க்கும் என்னிடம் தாக்கலாய் வந்து தந்த மலைப்பு தீக்கடைக்கோல் எனும் தலைப்பு எப்புறம் திரும்பினாலும் கடல்சூழ இப்புவியில் நான் வாழும் நாட்டில் தப்பாது காட்டுத்தீ பற்றி எரிவதால் இப்படி தீயுடன் தலைப்பு தந்தீரோ தீப்கடைக்கோல் எனக்கேட்டதும் முதன்முதலில் டீக்கடை கொதிகலன் வந்தது என் நினைவில் இன்று சூடாக்க உதவுகிறது தீக்குச்சி அன்று சூடேற்ற உதவியது தீக்கடைக்கோல் இருளில் வழிதெரியாது தவிக்கையில் மருளும் மக்கள் எவருக்கும் அந்நாளில் தருகின்ற நம்பிக்கையெனும் கீற்றாய் இருந்ததும் தீக்கடைக்கோல் அன்றோ தீ என்ற சொல்லைச் சொன்னாலும் அச்சொல் நாவைச்சுடுவதும் இல்லை தீக்கடைக்கோலை கூரையில் சொருகினாலும் அது கூரையை எரிப்பதும் இல்லை தோற்றுவிக்கும் முறை மாறினாலும் தோன்றுவதில் மாற்றம் ஏதுமில்லை தீக்கடைக்கோலில் மறைந்திருப்பதும் தீ தீக்குச்சியில் அடைபட்டிருப்பதும் தீ காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை கோலங்கள் மாறினாலும் குணங்கள் மாறவில்லை கடைந்தால் அன்று வந்ததும் நெருப்பு உரசினால் இன்று வருவதும் அதே நெருப்பு அன்று கண்டதும் அதே தீ தான் சச்சச்சா இன்று காண்பதும் அதே தீ தான் சச்சச்சா என்றும் உள்ளது ஒரே தீ தான் சச்சச்சா இருளை அகற்றவும் அதே தீ தான் ஆ…ஆ… இருளை அகற்றவும் அதே தீ தான் கோல் கடைந்தே தீ உண்டானது அன்று கோல் தேய்ந்து தீக்குச்சியானது இன்று உருளும் வாழ்க்கையில் தினமும் வரும் மாற்றங்கள் என்றும் நிகழும் கருப்பையினில் வளர்கின்ற மகவும் கருவாக குழாயில் மாறி உருவாகும் கருவியாயிருந்த தீக்கடைக்கோல் உருமாறியும் வந்தது தீக்குச்சியாய் அக்கினிக்குஞ்சு ஒன்றைக் கண்டேன் என்றான் தத்துவம் சொன்ன கவிபாரதி அக்குஞ்சு எதுவென எனைக் கேட்டால் தீக்கடைக்கோல் கொடுத்த தீப்பொறியே அழியும் தீக்கடைக்கோல் பொறியால் காடும் போக்கும் இருளையும் அப்பொறி தரும் ஒளி ஆக்கும் உணவையும் அதுதரும் நெருப்பும் அழிக்கும் உடலையும் சிதைநெருப்பாகியும் ஆட்டுக்கல் என்றாலே தெரியாதபோது கடைக்கோல் எனக்கு எவ்வாறு தெரியும் தீக்கடைக்கோல் எவ்வாறு தெரியும் ஐயா? என்றான் மாணவன் இன்று ஆசானிடம் ஆட்டுக்கல்லில் நாம் அரைக்க ஆட்டுக் கல்லோ மாவரைக்கும் என்பதை நீ முதலில்அறிவாய் தீக்கடைக்கோலை கடைந்தால் தீப்பொறி தெறித்துக் கிளம்பும் என்பதும் அறியென்றார் ஆசான் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிறது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள் என்பதுதான் இங்கே கவியரங்க புரட்சி
கேளடா மானிட என்றான் பாரதி கேளாத சமுதாயத்தை நோக்கி வெள்ளை நிறத்திலொரு குட்டி சாம்பல் நிறத்திலுமொரு குட்டி எல்லாமே பூனைக்குட்டி என்றான் மக்களை மட்டும் ஏன் பிரித்தார் மனம்மாறாது திரியும் இம்மாந்தர் சாதி சொல்லி மக்களை பிரித்த மக்களிடம் பாரதி சொன்னாலும் மக்களோ சாதியாகவே பார்த்து மாறாது இன்னும் வாழ்கின்றனரே தீக்கடைக்கோல் தந்த தீயும் தீக்குச்சி பற்றவைத்த தீயும் வேறென சொன்னால் சரியோ அவன்பெற்ற அக்குழந்தையும் இவன்பெற்ற இக்குழந்தையும் இணைவது தவறெனில் முறையோ தீயுண்டாக்க தீக்கடைக்கோல் போல நோயாம் சாதிக் கொடுமைகள் தீர்க்க ஏதுமொரு கோலிங்கு ஆக்கிட உளதோ தீதேதுமின்றி தீரவும் இங்கு வழியுளதோ -சங்கர சுப்பிரமணியன்.