ரௌத்திரம் பழகு!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.
இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழ் வானொலியில் திரு. முல்லை அமுதன் அவர்கள் இலக்கியப் பூக்கள் என்ற அற்புதமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கதை, கவிதை மற்றும் கட்டுரை என பல இடம்பெறுகின்றன.
இதில் எனது குரலில் பதிவான “ரௌத்திரம் பழகு” என்ற சிறுகதை ஒலிபரப்பானது. பாடல் வரிகளை நானே பாடியும் இருக்கிறேன். இதோ அந்த சிறுகதை.ரௌத்திரம் பழகு!….
இயற்கையை நினைத்துப் பார்த்தேன். வானுயரந்த மலைகளும் அற்புதமான பள்ளத்தாக்குகளும் சுட்டெரிக்கும் பாலைகளும் சுகம் தரும் சோலைகளும் பற்பல விதத்திலே இங்கு பரந்து கிடக்கின்றன. ஒருநொடி கண்மூடினேன் கற்பனையில் பார்க்கும்இடமெல்லாம் பாலைநிலம், மனம் சோர்ந்தது. திரும்பவும் கண்மூடினேன் பார்க்கும் இடமெல்லாம் பசுஞ்சோலை, மனம் மகிழ்ந்தது. மறபடியும் கண்மூடினேன் பாலை நிலமும் அதையடுத்து பசுஞ்சோலையும் வந்தன. அப்போது நான் வாழ்க்கையை உணர்ந்தேன். அறியாமல் நடக்கும் நீ தூங்கு என்று நண்பனிடம் நயமாகக்கூறி நித்திரை கொள்ளவைத்தேன். எனக்கு மட்டும், “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே”
மனதில் பாரதி சொன்ன பாடலின் சிலவரிகள் சிறகடித்துப் பறந்தன. அவை “காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்கு குணங்களும் பொய்களோ? என்று பாட்டாக வெளிவந்தது. சட்டென தொடையில் தட்டினான் நண்பன் வெண்ணிலவன். பெங்களூரிலிருந்து மதுரை சென்று கொண்டிருந்த பேருந்தில் வாகனம் வேகமாய் ஓடும் சத்தம்கூட வெளிப்புறமிருந்து மெதுவாகவே கேட்குமளவுக்கு உயர்தரவகை பேருந்து. இரவு பதினொன்று பத்தென்பதை எனது கைக்கடிகாரத்தின் முட்கள் அந்த சொற்ப வெளிச்சத்திலும் ரேடியத்தையின் மகிமையால் பளிச்செனக்காட்டியது. பயணிகள் பாதிப்பேர் வேற்றுலகில் வாழத்தொடங்கி விட்டதை அவர்களது வெவ்வேறு குறட்டை ஒலிகள் விதவிதமான லயத்துடன் வெளிக்கொணர்ந்தன. இந்த குறட்டையை நம் காதுக்கு இனிமையாக எல்லோரும் விட்டால் எப்படி இருக்கும்? என்று இயற்கைக்கு புறம்பாக எண்ணம் ஓட தொடையில் தட்டியவனைப்பார்த்து, “என்னடா நிலவா, ஏன் தொடையத் தட்டினாய்” என்றேன். “டேய் மகிழ், எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.நீ என்னவோ பின்னணிப்பாடகன் போல பாட ஆரம்பித்து விட்டாய்?” என்றான் வெண்ணிலவன். “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்றேன். “என்னாச்சு ஒசூரை தாண்டும்வரை ஒழுங்காகத்தானே இருந்தாய்?“ என்று கேட்டான் நண்பன். பேருந்து கிருஷ்ணகிரியைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. தப்புதாண்டா. என் நினைவின் வெளிப்பாடு பாடலாக வந்துவிட்டது. சில சமயங்களி்ல் இடம் பொருள் தெரியாமல் சில செயல்கள் நம்மை
சொன்ன வார்த்தைகள்தான். அப்படி என்ன சொன்னான்? “மகிழ் ஊருக்கு போகிறாய். மகிழ்ச்சியாக இருந்து விட்டு வா. அங்கும் போய் தமிழ், தமிழர்கள் என்று எண்ணியே நாட்களை ஓட்டி விடாதே” என்று அவன் சொன்னதுதான். எல்லோருமே ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறார்கள். எனக்கு மட்டும் என் மொழிக்கும் இனத்துக்கும் எவராவது தீங்கிழைத்தால் கோபம் வருகிறது. நம்மொழிக்கும் நம் இனத்துக்கும் வந்து சூழ்ந்திருக்கும் ஆபத்தை பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லையே, ஏன்? ஒரு சிலர்
என்று பாட்டில் சொன்னதெல்லாம் அப்போது உதவிக்கு வரவில்லை. நண்பனும் வேற்றுலகம் சென்று விட்டான். எனக்கு அவ்வுலகு செல்ல முடியாமல் இந்த மனிதர்களைப் பற்றிய சிந்தனை நெஞ்சில் தைத்த முள்ளாக நெருடிக் கொண்டிருந்தது. ஒரு சுவையுள்ள கனியை யார் சுவைத்தாலும் சுவை ஒன்றுபோலத்தானே இருக்கும்? கண்ணதாசன் ஒரு பாடலில் சொன்னதுபோல் “எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றேதான் சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை உன் சிந்தையிலேதான் பேதமடா” என்று மனிதர்கள் பலவிதமாக இருந்தாலும் கோபம்அன்பு என்று குணங்கள் ஏற்படும்போது அந்தந்த குணங்களைத்தான் வெளிப்படுத்துவார்கள். இவ்வாறு பலவற்றை நினைத்து என் நித்திரை கெடுமளவுக்கு என்ன ஆயிற்று? எல்லாம் வழியனுப்ப வந்த நண்பன் வரதன்“குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம”
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம”
என்கிறார்கள். இன்னும் சிலரோ
“கூந்தல் கருப்பு…ஆஹா, குங்குமம் சிவப்பு…ஓஹோ, கொண்டவள் முகமோ ரோஜாப்பூ ஆ… ஆ
“கூந்தல் கருப்பு…ஆஹா, குங்குமம் சிவப்பு…ஓஹோ, கொண்டவள் முகமோ ரோஜாப்பூ”
“கூந்தல் கருப்பு…ஆஹா, குங்குமம் சிவப்பு…ஓஹோ, கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ ஆ… ஆ
“கூந்தல் கருப்பு…ஆஹா, குங்குமம் சிவப்பு…ஓஹோ, கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ”
என்று பாடத்தொடங்கி இருக்கிறார்கள். மொழியும் இனமும் இருந்தால்தானே நாமிருப்போம். அதுவெல்லாம் போய்விட்டால் நாமெல்லாம் எங்கிருப்போம்? இதைப் பற்றியெல்லாம் யாரும் நினைக்க மாட்டேனென்கிறார்களே என்ற நினைவுதான் என் நித்திரையை கெடுத்துக் கொண்டிருந்தது. பேருந்து சேலத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. அந்த இருட்டிலும் நான் உறங்கவில்லை என்பதை உணர்ந்த நண்பன் என்னடா இன்னுமா தூங்கவில்லை என்று உரிமையோடு கடிந்தான். தூங்குறண்டா நீ தூங்கு என்று அவனைச் சமானப்படுத்தி தூங்கச்சொன்ன என் நினைவலகளில் பாரதி வந்தார். பாரதியின்கருத்தினை எத்தனை பேர் ஏற்றார்கள்? அவர் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் கருத்துக்களை சொல்லிக் கொண்டுதானே இருந்தார். அவரேயே யாரும் சட்டை செய்யாதபோது நானோ ஒரு சாதாரணமானவன் என்னைப்போல் எல்லோரையும் எதிர்பார்க்கலாமா என்று எண்ணியவாறே கண்ணயர்ந்தேன். மதுரை பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்க என்னை தட்டி எழுப்பினான் நண்பன். அங்கே பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கடையிலுருந்து அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
“கனக விஜயரின் முடிதனை நெறித்து கல்லினை வைத்தான் சேரன் மகன்,
ஆ…ஆஆஆஆ….ஆ கனக விஜயரின் முடிதனை நெறித்து கல்லினை வைத்தான் சேரன் மகன் இமயவரம்பினில் மீன்கொடி ஏற்றி இசைபடவாழ்ந்தான் பாண்டியனே” என்ற வரிகளைக் கேட்டதும் தமிழர் ரௌத்திரம் பழகித்தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்கஇருக்கையைவிட்டுஉற்சாகத்துடன் நானும் எழுந்தேன்.
-சங்கர சுப்பிரமணியன்