உளவு நிறுவனங்கள்!… (பகுதி:16)…. மௌனவதானி.
ஒவ்வொரு நாடும் உளவு நிறுவன ஒற்றர்கள் தமது நாட்டுக்குள் எந்த வடிவத்தில் நுழைகிறார்கள் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.
வல்லரசு நாடு அல்லது வல்லரசு நாடுகள் எனக் காணப்படுகின்ற நாடுகள் ஒவ்வொன்றும் மற்ற நாட்டு இரகசியங்களை அறிந்து கொள்வதற்கான காரணத்தில் முதன்மை வகிப்பது பொருளாதாரப் போட்டியே.
தனமனிதன் ஒருவன் எப்படி தான் சமூகத்தில் முக்கியத்துவமானவன் என மற்றவர்கள் நினைக்க வேண்டும் நம்ப வேண்டும் என அதற்கான தன்னைச் சுற்றிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டுமென்று விரும்புகிறானோ அது போலவே வல்லரசு நாடுகளும் தங்களுக்குள் எந்த நாடு சர்வ வல்லமை உள்ள நாடு என்பதில் போட்டா போட்டி போட்டுக் கொண்டு தமக்கான வல்லரசுச் சூழ்நிலையை உருவாக்குகின்றன.
அதனால் வல்லரசு நாடுகளே ஒருவருக்கொருவர் பனிப்போர் யுத்தத்தை நடத்தி வருகின்றன.ஒரு நாட்டினுடைய பொருளாதாரக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்கான அனைத்து வேலைகளையும் தமது உளவு நிறுவனங்களின் ஒற்றர்கள் ஊடாகச் செய்து வருகின்றன.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் கண்காணிப்புகளுடன் கூடிய விமான நிலையங்கள் துறைமுகங்கள் ஊடாக, வேலை செய்பவர்களாகவும் சுற்றுலாவுக்கு வருபவர்களாகவும் ஒற்றர்கள் உளவு பார்க்க வேண்டிய நாட்டுக்குள் நுழைந்து விடுகிறார்கள்.
அவர்களின் தோற்றத்தை வைத்து அவர்கள் ஒற்றர்கள் என்பதை ஒரு போதுமே கண்டுபிடிக்க முடியாது.தமது நாட்டு இரகசியங்கள் எவ்வாறு வெளியே செல்கின்றன என்பதை மிகுந்த அவதானிப்புக்கு பிறகே அறிய முடிகின்றது.
ஒற்றர்கள் தமக்குள் எவ்வித பரபரப்பும் காட்டாது இயல்பாக நடந்து கொள்வார்கள். அவர்கள் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடிகூட நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும்.
அந்தக் கண்ணாடி பேசுபவரின் குரலையும் பேசும் விடயத்தையும் மிகத் தெளிவாகப் பதிந்துவிடும்.பார்ப்பதற்கு சாதாரணமான கண்ணாடி போல தோற்றமளிப்பினும் அக்கண்ணாடி அதிநவீன தொழில் நுட்பத்தைக் கொண்டதாக இருக்கும்.
இன்னும் சொல்லப் போனால் பார்க்கும் பொருட்களையும் பெசும் குரல்களையும் உடனுக்குடன் உளவு நிறுவனத்திற்கு அனுப்பிக் கொண்டேயிருக்கும்.யாருமே சந்தேகப்படாதவாறு ஒற்றர்கள் தமது மூக்குக் கண்ணாடி ஊடாக அனுப்பிக் கொண்டிருப்பார்கள்.
முன்னைய கட்டுரைகளில் தொழிற்சாலைகள், பல்வேறு திணைக்களங்கள், சுற்றுலாப்பயணிகளாக வருவோர், அமைச்சர்கள், அமைச்சுகளில் வேலை செய்யும் அதிகாரிகள், விடுதிகளில் பணிபுரியும் முகாமையாளர்கள், சாதாரண பணியாளர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் எப்படி தமது நாட்டு இரகசியங்களை உளவு பார்க்கும் நாட்டுக்கு கடத்துகிறார்கள் என்பதை எழுதியிருந்தேன்.
ஒற்றர்களாக செயல்படுபவர்களில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் வெளிநாட்டுப் பேராசிரியர்கள் துறைசார் கல்வியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
ஆனால் அனைத்து வெளிநாட்டுப் பேராசிரியர்களோ கல்வியியலாளர்களோ ஒற்றர்களாக இருப்பதில்லை.அவர்களில் சிலர் உளவு நிறுவனங்களுக்காக பணியாற்றுபவர்களாக இருப்பார்கள்.
ஒரு நாட்டினுடைய கல்விக் கொள்கையை சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது.ஒரு நாட்டினுடைய அனைத்து வளர்ச்சிகளிலும் அந்நாட்டு மக்கள் பெறும் கல்வியே முக்கிய முதலீடாகின்றது.
வல்லரசுத்தன்மையுள்ள நாடுகளின் கல்வி அலகுகள் மிகவும் நவீனத்துவமும் நுட்பத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.
சமூகப் பொருளாதாரக் கட்டுமாணங்களில் புதிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு சிந்தனைப் பரிணாமம் பெற்ற கல்வியியற் கொள்கை வழிவகுகின்றது.
முன்னைய பகுதிகளில் சுட்டிக்காட்டிய பொருளாதாரக் கட்டமைப்புக்கு மூலவேராக இருப்பது அந்த நாட்டினுடைய நில நீர் வளங்களேயாகும்.
நீர் வளங்களினதும் அதன் பயன்பாடுகள் பற்றி விபரிக்கச் சென்றாலோ அல்லது நில வளங்கள் பற்றி விபரிக்கச் சென்றாலோ அவை யாவும் பல பிரிவுகளாக நீண்டு கொண்டே செல்லும்.
ஒரு கட்டுரை சொல்லும் விடயத்தை வாசிக்கும் சாதாரண வாசகன்கூட எளிதில் புரிந்து கொள்ளுமளவிற்கு எழுதும் எளிமைத்தன்மை வேண்டுமென்பதாலே இக்கட்டுரையில் உள்ளடக்கமாக இருக்கும் உளவு நிறுவனங்கள், ஒற்றர்கள் எவ்வாறு ஒரு நாட்டினுள் செயல்படுகிறார்கள் என்பதை இலகுவாகச் சொல்லவே இக்கட்டுரை முயற்சிக்கிறது.
அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்களில் தாம் வாழும் நாட்டை உளவு பார்ப்பவர்பவர்களும் இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்;.எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டுமா என்ற நிலைக்கு இந்த உலகம் தள்ளப்பட்டுவிட்டது என்பது உண்மையே.
ஒரு பெரும் சனக்கூட்டத்தில் அனைவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் தம்மை யாரென்று காட்டிக் கொள்ளாது சனத்தோடு சனமாக நின்று கோப்பிக்கடையில் கோப்பிக் குடித்துக் கொண்டிருக்கும் தமையிர் நீள வளர்த்து
ஆங்காங்கே பச்சை குத்திக் கொண்டு நிற்கும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை யாருமே கண்டு கொள்ளமாட்டார்கள்.
ஒற்றர்களாக பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களை கல்வி பெறும் மாணவர்களால் கண்டறிய முடியாது.இத்தகு பேராசிரியர்களின் பணியே எத்தகைய கல்வியை தான் பணியாற்றும் பல்கலைக்கழகங்கள் கொடுக்கின்றன.இக்கல்வியின் முனைப்பாக அந்த நாடு தன்னை எப்படி வடிவமைத்துக் கொள்கின்றது என்பதேயாகும்.
உளவு பார்க்கும் பேராசிரியரகள்; தான் பணியாற்றும் வேற்று நாட்டின் கல்வி எத்கையது என்பதை தனது உளவு பார்க்கும் நாட்டுக்கு அறிவித்துக் கொண்டேயிருப்பார்கள்.
இந்த அறிவிப்பை பெற்றுக் கொண்ட உளவு பார்க்கும் நாடு, தனது ஒற்றர் அனுப்பிய தகவல்களை வைத்துக் கொண்டு, இக்கல்வியியலால் அந்த நாடு எவ்விதமான வளர்ச்சியைப் பெறும் என்பதை அணுவணுவாக ஆராய்ந்து அதற்கமைய திட்டத்தை வகுப்பார்கள்.
ஒற்றர்களாக பணியாற்றும் பேராசிரியர்கள் மிகச்சிறந்த கல்வியிலாளர்களாக இருப்பதை உளவு நிறுவனங்கள் உறுதிப்படுத்திக் கொள்கின்றன.
நுட்பமான கல்வியும் அதனால் பெறும் அறிவுஜீவித்தனமுமே ஒரு நாட்டை வளமிக்க நாடாக,வல்லமை பொருந்திய நாடாக உருவாக்குவதற்கு வழிவகுக்கின்றது.
ஒரு நாட்டில் கொட்டிக் கிடக்கும் வளமிருந்தால் மட்டும் போதாது அந்த வளத்தைக் கொண்டு வல்லமை உள்ள நாடாக உருவாக்குவதிலேயேதான் மாணவர்களாக கற்றுக் கொண்ட கல்வியை பணியாளர்களாக, அதிகாரிகளாக, விஞ்ஞானிகளாக தம்மை ஆக்கிக் கொண்ட அந்நாட்டு பிரஜைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.
நுட்பமான அறிவியலாலேயே இது சாத்தியமாகும்.ஆபிரிக்கண்டத்தில் உள்ள நாடுகளின் பலவற்றில் நீர் நில கனிம வளங்கள் அபரிதமாக இருந்த போதும் வல்லமை அற்ற நிலையால் உதவி என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நாட்டு உளவு நிறுவனங்கள் மூலம் இயலாமையைக் கண்டறிந்து அதுசார்ந்து திட்டமிட்டு உதவி, ஆதரவு என்ற போர்வையில் அவர்களின் வளங்களைச் சுரண்டி வருகிறார்கள்.
ஒரு நாட்டில் அந்த நாட்டிற்கு தேவையான மிதமிஞ்சிய கனிவளங்களோ,விவசாயத்திற்குரிய நில வளமோ, அபரிதமான நீர்வளமோ இருந்தாலும் அந்த வளத்தை தகுந்த முறையில் பயன்படுத்தி தனது மக்களின் வாழ்க்கையை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கு அறிவுசீவிகள் தேவைப்படுகிறார்கள்.
வளம் என்பது இன்றைய உலகம் கையாளுகின்ற, மக்கள் மத்தியில் இருக்கின்ற பணப்புழக்கம் அல்ல.பணம் ஒரு ஊடகம் அவ்வளவுதான் அதன் அடிப்படை நிலை அதுதான்.
மனிதவாழ்வு பூமி சார்ந்தது.பூமியின் நிலம்சார்ந்தும் நீர்சார்ந்தும் காடுகள் சார்ந்தும் அவற்றிலேயே சார்புநிலை கொண்டிருக்கின்றது.
இந்த வளங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சிந்தனை தேவைப்படுகின்றது.
அறிவுசீவித்தனம் மூலமே இது சாத்தியமாகும்.இச்சாhத்தியத்தைக் கொடுப்பது கல்வியே.
கல்வி என்ற பலமான அத்திவாரத்திலேயே ஒரு நாடு கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றது.
கல்வியியல் வரலாற்றை உற்று நோக்கினால் அல்லது அதனோடு பயணித்து வருபவர்களுக்கு, அக்கல்வியியலுக்குள் நடந்த பரிணாம வளர்ச்சியை கண்டு கொள்ள முடியும்.
அணுவைக் கோடியாகப் பிரித்து அந்த ஒவ்வொரு பிரிவையும் தனித்தனி அலகாகக் கொண்டு அது போன்று அங்கு ஒரு கல்வியைக் கொண்டு வரும் பொழுது வியப்படைய வைக்கும் வளர்ச்சியில் நாடு விசுவரூபம் எடுக்கின்றது.
இது பொதுவானது அல்ல.தனித்தனியானது.ஒரு நாட்டின் சமூகத்திற்கான பொருளாதாரம், கலை, இலக்கியம், தொழில்நுட்பம், மருத்துவம், ரசியல்; புதிய கல்வியியற் சிந்தனை இருக்கும்.(உதாரணங்கள்:அரசியல் விஞ்ஞானம், அரசியல் nலைக்கட்டமைப்பு, அரசியல் மருத்துவம், அரசியல் தொழில்நுட்பம்,இன்னும் பல)
ஒரு நாடு இத்தகு கல்வியைக் கொடுக்கின்று பல்கலைக்கழகங்களை உருவாக்குகின்றன.
இப்பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பிக்க பல கல்விமான்களை, துறைசார் விற்பன்னர்களை வெளிநாட்டிலிருந்து பல்கலைக்கழகங்கள் அழைக்கின்ற போது
துறைசார் தகுதியுடைய உளவு நிறுவன ஒற்றர்கள்; பல்கலைக்கழகங்களுக்கு கற்பிக்க அனுப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
ஒரு நாட்டின் கட்டமைப்பின் அனைத்துத்துறைகளிலும் ஒற்றர்களும் வருவது போல பல்கலைக்கழகங்களுக்குள்ளும் நுழைந்துவிடும் தகுதிமிக்க ஒற்றர்கள் தாம் பணியாற்றும் நாட்டு கல்விப் பிரிவுகளை நோட்டமிடுவார்கள்.
பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்கள் சித்தியடைந்தவுடன் தமது வாழ்வுக்கான வருவாயைத் தேடும் நோக்கத்தைக் கொண்டிருப்பினும் அம்மாணவன் பெற்ற அறிவின் ஆற்றலை அந்த நாடு பயன்படுத்தத் தொடங்கும்.
எனவே ஒரு நாட்டினுடைய பாரிய வளர்ச்சியில் அம்மாணவன் பெற்ற கல்வியறிவு முதன்மை பெறுகிறுது.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியென்பது நாளாந்தம் தன்னை புதுப்பித்துக் கொள்வதிலேயே தங்கி நிற்கின்றது.
ஒரே நாட்டில் ஒரேவிதமான பொருளை உறபத்தி செய்யும் தொழிற்சாலைகள் தமக்குள் போட்டி போடுகின்றன.
பொறுப்பிலிருக்கும் பணியாளரிடமிருந்து புதிய சிந்தனையை வழிகாட்டலை தொழிற்சாலை நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.தனது நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு அப்பணியாளனும் தனது அறிவை பயன்படுத்தத் தொடங்குகின்றான்.
மூளையின் கதவுகளைத் திறந்துவிடுகின்ற சிந்திக்க வைக்கும் கல்வியைக் கொடுக்கின்ற பல்கலைக்கழகங்களின் கல்விசார் அடிப்படைத் தரவுகளை கல்வியாளனாக பணியாற்றும் வெளிநாட்டு ஒற்றன் சேகரித்து தனது நாட்டுக்கு அனுப்பிக் கொண்டேயிருப்பான்.
கல்வி சிதைந்தால் நாடு சிதைவடையும்.
(தொடரும்)