முகநூல் பாவனையாளர்களுக்கு(என்னையும் சேர்த்து)
முகநூல் சொல்லும் சில ரகசியங்கள்..!
************************************
விழித்ததில் இருந்து உறங்கும்
வரையும் மனிதர்களின்
கண்களுக்கு நானே
நல் விருந்து.
என்மேலே..
நல்லதோ,கெட்டதோ வலையை
வீசிவிட்டு லைக்,கொமன்ஸ்
மீன்களுக்காக காத்துகிடப்பார்கள்.
ஒருவரின் படத்தை பார்த்ததுமே
வாழ்த்துக்கள்
எழுதுகிறார்கள்
மரணத்துக்கும் கூட
கவிதை,கட்டுரை ஒன்றும் விடாமல்
படிப்பார்கள் ஆனால் ஒரு லைக்
போடவோ கொமன்ஸ் எழுதவோ
மனம் வருவதில்லை சிலருக்கு.
கணினி விட்ட சிறு பிழையைக் கூட
தாங்கமாட்டார்கள். மொழி
அழிவதாக சொல்லுவார்கள்
பின்பு அவர்களே அந்த
பிழை விடுவார்கள்.
குடும்ப பிரச்சனைகளை என்
மேல் கொட்டி குப்பை
மேடாக்குவார்கள் சிலர்.
அழகான படங்கள் என்று
போடுவார்கள் பின்பு
அசிங்கபட்டதும் என்னை
குறைசொல்லியே ஏசுவார்கள்.
அனுமதி இல்லாமலே தங்கள்
குப்பைகளை மற்றவனின்
வீட்டுக்குள் திணிப்பார்கள்.
ஆக்கியோரை அகற்றிவிட்டு
தங்கள் ஆக்கங்கள்போலவே
போடுவார்கள் பின்
அவஸ்த்தையும் படுவார்கள்.
முகநூல் பார்பதில்லை என்று
ஏளனமாய் சொல்லுவார்கள்
முகத்தை என்னுக்குள்ளவே
வைத்திருப்பார்கள்.
பார்த்தவுடனவே பகிருங்கள்
என்று பயம் காட்டி
படங்களைப்போடுவார்கள்- சில
மூடர் நம்பிக்கையுள்ளவர்கள்.
குடுப்பங்களைக் குலைக்கவென
திருட்டுக்கணக்குகளில் திரை
மறைவில் என்னுக்குள் ஒளித்தும்
இருக்கிறார்கள் சில வஞ்சகர்கள்.
அறிவுரை சொல்லியே மற்றவரை
நோகடிப்பார்கள் தாங்கள்
அதிலிருந்து வேறுபடுவார்கள்.
நல்ல அறிவானவர்கள் என்னை
படித்து இயக்கத் தெதியாமல்
வெளியில் இருக்கிறார்கள்.
உலகத்தை படித்தவர்களாக
காட்டிக்கொள்வார்கள் உள்ளூர்
காரர்கள் அவர்கள் கண்களுக்கு
தெரிவதில்லை.
பல அறிஞர்களை உருவாக்கிய
வெள்ளை மனம் கொண்ட
அன்பான,பண்பான மனிதர்கள்
நிறைய என்னுக்குள் இருக்கிறார்கள்
அதனால்த்தான் நான் நீடித்து
வாழுகின்றேன்.
போற்றலும் தூற்றலும்
என்னுள் இருக்கும் -நீ
போய்க்கொண்டேயிரு..
உன் இலட்சியம் நோக்கி.
அன்புடன் -பசுவூர்க்கோபி-