உளவு நிறுவனங்கள் பகுதி!…11…. பெண் ஒற்றர்கள்….. வள்ளிமகன்.

உணவு உற்பத்திப் பொருட்கள் ஏன் அதிகளவு முக்கியத்துவம் பெறுகின்றெல்லாம் அது உயிருக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றிமையாததாகும்.
சிலவேளைகளில் துறைசார் பெண் ஒற்றர்களை இப்பணியில் ஈடுபடுத்துவார்கள்.தயாரிப்புகளில் தவறுகளை ஏற்படுத்த முடியாதபடி ஆண் சுதேச அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருக்கும் பட்சத்தில், சதேச அதிகாரியின் மனப்பலவீனம் என்ன என்பதைக் கண்டறிவதில் வெற்றியானது அச்சுதேச அதிகாரி பெண்ணின் நட்பை அவள் அருகிருக்கும் சுகத்தை விரும்புவராக இருப்பின் பெண் ஒற்றர்களை அவர்கள் பயன்படுத்துவார்கள்.
பெண் ஒற்றர்கள் தம்மை இழக்காமல் தமக்கிட்ட பணியைச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
அழகான கம்பீரமான பெண்களையே ஒற்றர்களாக உளவு நிறுவனங்கள் பயன்படுத்தும்.அதற்குக் காரணம் உண்டு.பெண்சபலபுத்தி உள்ள அதிகாரிகள் இத்தகு பெண்களோடு பேசுவதற்கு விரும்புவார்கள.;
இதனைப் பயன்படுத்திக் கொள்வது பெண் ஒற்றர்களின் திறமையாகும்.ஒரு உணவு உற்பத்தி நிறுவனத்தோடு பணிநிமித்தமாக தொடர்பு கொள்ளும் பெண் ஒற்றர்களுக்கும் ஆண் ஒற்றர்களுக்கு வழங்கப்படுவது போன்ற பயிற்சிகளை உளவு நிறுவனங்கள் வழங்கியிருக்கும்.
ஒரு நாட்டினுடைய செயல்பாடுகளை தனது ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்வதில் காட்டும் அக்கறையை உணவு உற்பத்திச் தொழிற்சாலைகளிடத்தில் ஏன் காட்டுகின்றன இது சாதாரண விடயந்தானே இதனை உளவறிவதனால் உளவு நிறுவன நாட்டுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகின்றது என்று இக்கட்டுரையை வாசிப்பவர்கள் இக்கட்டுரை தொடர்பாக விமர்சனங்களை வைக்கலாம்.
ஆனால் முன்பு பலமுறை சுட்டிக்காட்டியது போல உணவு உடலின் ஆரோக்கியத்தொடு சம்பந்தப்பட்டது என்பதுடன் உடல் வளத்துடன் சம்பந்தப்பட்டதுமாகும்.
சில வேளைகளில் பெண் அதிகாரிகளை அவர்களுக்குத் தெரியாமலே ஒற்றர்களாக பயண்படுத்தும் முறையும் உண்டு.உணவு உற்பத்திச் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவை சந்தைப்படுத்த அதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த வரும் பெண் பணியாளர்கள் அவ்வுணவு தயாரிக்கப்படுவதற்கு பயன்படுத்தப்படும் வேதியல் பொருட்கள் பற்றியும் சரக்கு வகைகள் பற்றியும் தெரிந்து கொள்வதை முக்கிய பணியாகவும் முதன்மைப் பணியாகவும் அறிந்து கொள்வார்கள்.
பொருட்களை கொள்வனவு செய்து சந்தைப்படுத்தலக்கான பேச்சுவார்த்தை ஒரு புறம் நடந்து கொண்டிருக்கையில் அப்பொருளின் உள்ளீட்டினை அறிந்து கொள்ளலும் சமாந்தரமாக நடைபெறும்.
அறிக்கைகள் என்பன வளர்ச்சியடைந்த நாடுகளில் மிகவும் மக்கியமான விடயமாகும்.ஆண் ஒற்றர்களைவிட பெண் ஒற்றர்கள் இதில் சாதுரியமாக நடந்து கொள்வார்கள்.
நீண்ட பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமான மக்களால் அதிகமாக வாங்னகப்பட்டு வந்த உணவுப் பொருட்கள் விற்பனையில் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக அதிகளவு முன் வைக்கப்படுவது அப்பொருட்களில் அளவுக்கு மீறிய அதாவது சமநிலைக்கு மீறிய வேதியல் பொருட்களே என்பதாகும்.
இந்த நிலை ஏன் எட்டியது என்றால் சுதேச தரக்கட்டுப்பாட்டுக் கூடங்களில் நடக்கும் ஊழல்களேயாகும்.இதற்கு பொதுவான பெயராக ஊழல் என்ற பெயரைக் கொடுத்த போதிலம் இந்த ஊழல் ஏன் நடக்கிறது இது கண்காணிக்கப்படவில்லையா என்றால் கண்காணிப்பையும் மீறி நடக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு.
அதிகளவு மக்களால் வாங்கப்படும் ஒரு உணவுப் பொருள் திடீரென மக்களால் புறக்கப்பணிவதற்கு அதன் தரமே காரணமாகிவிடுகின்றது.
எதோஒரு வடிவத்தில் உணவு உற்பத்தித் தொழிற்சாலைக்குள் புகுந்து கொள்ளும் உளவு நிறுவன வலைப்பின்னல் செயல்பாடு உணவு உற்பத்தியின் ஆரம்ப நிலையிலிருந்து அப்பொருள் மக்கள் பாவனைக்குப் போகும் வரை கண்காணித்துக் கொண்டேயிருக்கும்.
தரக்கட்டுப்பாடு அல்லது தரக்கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்தும் உளவு நிறுவன ஒற்றர்கள் அணிந்துள்ள வேடம் என்பது அத்துறைசார்ந்த அதிகாரி பணியாளர்கள் என்தேயாகும்.
தரக்காட்டுப்பாட்டு பணியிலிருக்கும் அழகான சிரிப்பும் கலகலவென்ற சுபாவமும் கொண்ட பெண்களின் அருகிருத்தலையும் அவர்களின் சூடான மூச்சுக்காற்றறையும் அவர்கள் பூசிக் கொண்ட வானைத்திரவிய வாடையையும் விரும்பிக் கொள்ளும் அதிகாரிகள் தம்மை அறியாமலே அவர்களின் வலையில் விழுந்து விடுவார்கள்.
சந்தைப்படுத்தலுக்கென ஒரு நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்டம் பெண் அதிகாரிகூட தான் அறிந்து வைத்திருக்கமாட்டார். அவருக்கு அதிகாரியாக இருப்பவரே ஒற்றராக இருப்பார்.அதனால் இவர் கொடுக்கும் அறிக்கையின்படி இவரை அனுப்பிய அதிகாரி அடுத்த உணவு உற்பத்தித்தரைச் சிதவை ஏற்படுத்த ஆரம்பிப்பார்.
அதன் ஒரு திட்டமாகவே தரக்கட்டுப்பாட்டுக் கூடத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களையே ஒற்றர்களாக பயன்படுத்துவர்.சிலர் தங்களை ஒற்றரென அறிந்து வேலை செய்வர்.சிலர் அறியாமலே வேலை செய்வர்.
பணிக்காகக் கொடுக்கப்படும் சம்பளத்தைவிட பன்மடங்கு பணம் இவர்களுக்கு உளவு நிறுவனங்கள் கொடுக்கும்.தம்மால் முடிந்தவரை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை தம்மை உடல் ரீதியாக இழக்காமல் தரச்சிதைவை ஏற்படுத்தவே பெண் பணியாளர்கள் முயற்சிப்பர்.
சில வேளைகளில் உணவு உற்பத்தித் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி பெண் பணியாளர் வளைந்து கொடுப்பது போல தோன்றினால் தம்மோடு விடுமுறையைக்கழிக்க
அழைப்பதும் உண்டு.சில வேளைகளில் இது நட்பு என்ற ரீதியிலும் வேலை நிமித்தம் என்ற போர்வையிலும் இவை நடைபெறும்.
தரக்கட்டுப்பாட்டுச் சிதைவை தொழிற்சாலை தேசிய உணர்வு உள்ள அதிகாரிகளால் கண்டுபிடிக்கும் பட்சத்தில் தவறு இழைத்தவர் பெண் ஒற்றர்,பணியாளர் என்ற போர்வையில் பணி செய்த அவர் வேலையிலிருந்து நிறுத்தப்படுவார்.ஆனால் அது அவரைப் பாதிக்காது.உளவு நிறுவனம் அதைவிட பலமடங்கு பணத்தைக் கொடுப்பது மட்டுமல்ல இன்னொரு உணவு உற்பத்தி நிறுவனத்தில் அவருக்கு அதே பணியை உளவு நிறுவனங்கள் எடுத்துக் கொடுக்கும் வல்லமை உண்டு.
ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட அத்தனை உற்பத்திப் பொருட்களும் குப்பையில் கொட்டப்படுவதால் பல இலட்சக்கணக்கான பணத்தை அத்தொழிற்சாலை இழக்கின்றது. இந்த இழப்பு தொழிற்சாலையை பொருளாதார ரீதியில் ஈடாட வைக்கும்.
(தொடரும்)
![]()