31-05-2021- இதற்கான பதில்,விளக்கம் , மறுப்புகள்,ஆய்வுகள் ,தரவுகள் ஆகியவற்றை இலங்கை தமிழர்கள் தருவது நல்லது .[ஈழத்தமிழர்களும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களும்,கேரளா தமிழர்களும்]இலங்கையில் கொஞ்சம் மலையாளிகள் இருந்தனர் அவர்களும் இலங்கை தமிழர் சமூகத்தில் கலந்து விட்டனர் என்பதை பல நூல்கள் ,கட்டுரைகள் மூலம் உணர்ந்துள்ளோம்.[உதாரணமாக 2012 செப்டம்பரில் கொழும்பு கொடகே சாகித்திய அகாடமி விழாவில் பங்கேற்ற எமக்கு எழுத்தாளர் அஸ்மின் அவர்கள் எழுதிய “அறுவடை கனவுகள்” என்னும் நாவல் நூல் தரப்பட்டது.அதில் மலையகத்தில் வாழ்ந்து தமிழ் சமூகத்தோடு முற்றிலும் ஒன்றி போன ஒரு மலையாளி பற்றிய செய்தி உள்ளது.அதே போன்று மட்டகளப்பு கோவில் விழாக்களுக்கும் கேரளா பண்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றிய கட்டுரை பத்து ஆண்டுகளுக்கு முன்பே படித்துள்ளேன்]
பேச்சு மொழி – அங்கனை – இங்கனை – அவடத்தில – இவடத்தில- பேந்து – பின்னை -என்ட மோளே -என்ட மோனே – கள்ளம் -இப்படி பல வார்த்தைகள் –
உணவுப்பழக்கம் – புட்டு – இடியப்பம் – பால் அப்பம் -ஈரப்பலா (கடைச்சக்கை) ராசவள்ளி கிழங்கு கஞ்சி – தேங்காய் பால் – சமையலுக்கு தேங்காய் எண்ணெய் – (கட்டாஞ்சாய்) தேனீர் –
உடை வகை – லுங்கி – பெண்கள் அரை கவுண்-இலங்கைப் பெண்களின் உடை எப்படியோ அப்படி –
ஆலய வழிபாடு – வேட்டியுடன் தான் கோவிலுக்குள் செல்ல முடியும் – ஆன்மீகத்தில் அதிக அக்கறை –
பேரூந்து – சிகப்பு நிறம் (CTB) மணியடித்து நிறுத்த நீளமான கயிறு _
ஈழவர் – ஈழவர் என்ற சமுதாயத்தினர் வாழ்கின்றனர் – அவர்கள் பனையை ஈழம் என்று கூறுகின்றனர் – இவர்கள் பனையை நம்பி வாழும் பனைத்தொழிலாளிகளாகவுள்ளனர் –
பெயர்கள் – கருணாகரன் – கிருபாகரன் – பிரபாகரன் – மனோகரன் – சச்சிதானந்தன் – பரமானந்தம் – சிவஞானம் _ கந்தையன் – பரமேஸ்வரன் – கணேசன் – மகேஷ்வரி – பூங்கோதை – செல்லம்மா – பொன்னம்மா – காமினி – புஸ்பராசா – புஸ்பராணி – பூங்கோதை- சசிகரன் (கரன் என்பதை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் கர் என்றே முடிப்பார்கள் – சுதாகர்) இப்படி பல ஒற்றுமையுள்ள ஆதாரங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளேன் – இலங்கை வாழ் தமிழர்களில் பலர் தமிழக பூர்வீகம் கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் – மற்றவர்கள் மலையாளிகள் என்பதே உண்மை –