Featureமுகநூல்

`எஞ்சாயி, என்சாமி` பாடல் பறையும் செய்தி என்ன?..

இப் பாடலின் தொடக்கத்தில் பறை இசையுடனேயே பாடல் தொடங்குகின்றது. #பறை என்றாலே அதன் நோக்கம் செய்தி சொல்லுவதுதானே – இதோ பாடல் பறையும் செய்தி. செய்தியினைச் சொல்லுவது பாடலாசிரியர் அறிவு. இந்த வள்ளியம்மா- அறிவு ஆகியோரின் முன்னோர் #ஆதிக்குடிகள். இந்த நிலத்தினை உழுதும், இசைத்தும் பண்படுத்திய பெருங் குடிகள். பின்பு, பார்ப்பனியத்தினை ஏற்காமையால் ஒடுக்கப்பட்ட `வர்ணம் அற்றோர்`, அதனால் நிலமற்றோர். ஆங்கிலேயர் ஆட்சி வந்த போது ஆசை காட்டப்பட்டு, இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள். அங்கும் காட்டைக் களனியாக்கியது அதே பூர்வக்குடிதான். அங்கு அட்டைகளும் ஆங்கிலேயர்களும் உறிஞ்சி எடுத்த இவர்களின் குருதி போக, எஞ்சியதனை விடுதலையடைந்த இலங்கைப் பேரினவாத அரசும் உறிஞ்சி எடுத்தது. இவர்களது குருதியில் மலையகம் செழித்தது, இலங்கையின் பொருளாதாரமும் செழித்தது, ஆனால் இவர்களோ லயன்களுக்குள் (சிறு கொட்டில்கள்) அடைக்கப்பட்டிருந்தனர். எந்தச் சொத்துகளுமில்லை. இந்த நிலையுடன் பாடலில் வரும் பின்வரும் வரிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

…………………………………………………….
“நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் சேழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே”
………………………………………………………….
நாடு சற்று முன்னேறியதும் {அப்போது எல்லாம் இவர்களின் உழைப்பில் விளைந்த தேயிலை-இரப்பர் என்பனதான் முதன்மையான நாட்டு வருமானம்}, இனவாதம் தலை தூக்கியது. சிங்களவர்கள் இனவாத நோக்குடன் இவர்களின் குடியுரிமையினைப் பறித்தனர் {அப்போது சில தமிழர்களும் சாதிய மிதப்பில் இதற்கு ஒத்துழைத்தனர், பின்னர் சிங்களவரிடம் அடியும் வாங்கினர்}. அவ்வாறு நாடு கடத்தப்பட்டு வந்தவர்தான் வள்ளி (வள்ளி அம்மையார்).
…………………………………………………………………………….
“என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே”
…………………………………………………………..
இலங்கையில் இனம் காரணமாக `நிலம்` மறுக்கப்பட்டவர்கள், தமிழகத்திலும் `சாதி` காரணமாக நிலமற்றவர்களாகவே தொடர்ந்தார்கள். `வள்ளி`யம்மையார் தனது பேரனைக்(அறிவு) கூப்பிடும் சொல்தான் `என் சாமி`. அதற்கான எதிர்ப்பாற் சொல்தான் `என்சாயி` {அது Enjoy அல்ல}.
இன்னமும் பல வள்ளிகளும், அறிவுகளும் மலையகத்திலுமுள்ளார்கள், நாடு கடத்தப்பட்டு தமிழகத்திலுமுள்ளார்கள், இன்னமும் பெரும் வலியுடன் உள்ளார்கள்.
👉பாடலின் இறுதி வரிகளைப் பாருங்கள்.
……..
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
………
🧐எல்லோருமே ஒன்றானால் நாடு வளம் பெறும் (மும்மாரி). காட்சியமைப்பிலும் ஒரு இளம் பெண் (சீமாட்டி) பாட்டியின் (வள்ளியம்மை) கைகளைப் பற்றிப் பிடிப்பது போல நிறைவுறும்.
🙏சாதிகளை ஒழித்து (ஒளித்து அல்ல) ஒன்றுபடுவோமா? எமது ஆதிக்குடி சொன்னது `யாதும் ஊரே யாவரும் கேளிர்`.🙏

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.