ஜனநாயக வேடம் தரித்து நிற்கும் திருவாளர் பிள்ளையான் என்கிற அறிவாளி கிழக்கில் முஸ்லீம் ஆயுத குழுக்கள் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்க முயலுகின்றார்கள் என புது கதை ஒன்றை சொல்லி இருக்கிறார்
வடக்கு கிழக்கில் இயங்கிய முஸ்லீம் தமிழ் ஆயுத குழுக்களை இலங்கை இராணுவத்தினரும் பாதுகாப்பு அமைச்சும் தான் போஷித்து வளர்த்து வந்தார்கள் என்பதை திருவாளர் பிள்ளையான் அவர்கள் மறந்து விட்டார் போல இருக்கின்றது.
திருவாளர் பிள்ளையான் அவர்களை வழிநடத்திய புலனாய்வு பிரிவை சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதரண அவர்கள் தான் முஸ்லீம் ஆயுத குழுக்களை மகிந்த ராஜபக்சே யுகத்தில் போஷித்த பிரதான அதிகாரி என்பது திருவாளர் பிள்ளையான் அவர்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது
குறிப்பாக 2004 ஆம் ஆண்டில் கருணா பிள்ளையான் குழு உருவாக்க பட்ட பின்னர் முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கான பிரதான ஆயுத முகவராக கருணா/ பிள்ளையான் குழுக்களே கிழக்கில் இருந்தன
அதே போல மாளிகாவத்தையில் இயங்கிய/இயங்குகிற பாதாள உலக கோஷ்டியின் ஆயுத முகவராகவும் கருணா குழு இருந்தது .
இந்த குழுக்கள் எல்லாமே கோத்தபாயா ராஜபக்ச அனுசரணையில் தான் இயக்கப்பட்டன. திரு கோத்தபாயா அவர்களுக்கும் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கும் தெரியாமல் எந்த தமிழ் முஸ்லீம் குழுக்களும் கிழக்கில் இயங்க வில்லை
வாழைச்சேனையில் கூட ஒரு முஸ்லீம் ஆயுத குழுவை கருணா குழு தலைமையில் இலங்கை புலனாய்வு பிரிவு 2005-2006 ஆம் ஆண்டு உருவாக்கி இருந்தார்கள்
குறிப்பாக தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் இலங்கை புலனாய்வு துறை ஊடான நிதியில் மட்டுமே தங்கி இருக்க முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கு பாகிஸ்தான்,ஈரான் போன்ற நாடுகளில் இருந்தும் நிதி வசதிகள் வழங்கப்பட்டன என்பதும் திரு கோத்தபாயா ராஜபக்சே அவர்களுக்கு தெரியும்
இதனால் தான் பிள்ளையான் குழு உட்பட்ட தமிழ் ஆயுத குழுக்களை வர்த்தர்களை கடத்தி பணம் பறிக்க திரு கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் அனுமதி அளித்து இருந்தார் .
இதன் பின்னணியில் தான் பிள்ளையான் குழு கொழும்பு உட்பட தென்பகுதிகளில் நூற்றுக்கணக்கான வர்த்தகர்களை காசுக்காக கடத்தினார்கள் . இவர்களில் பலர் வெலிக்கந்தை எனும் இடத்தில கொன்று புதைக்க பட்டர்கள்
விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் கூட பேச்சுவார்த்தை மேசைகளில் ஆதாரங்களுடன் மேற்குறித்த விவகாரங்களை எல்லாம் அம்பலப்படுத்தி இருந்தார்
அதே போல கிழக்கு மாகாணம் எங்கும் கொலை கடத்தல் என குற்ற செயல்களில் ஈடுபட்ட கருணா /பிள்ளையான் குழு உறுப்பினர்களுக்கு முஸ்லீம் ஆயுத குழுக்கள் மூலமாகவே இலங்கை பாதுகாப்பது அமைச்சு அடைக்கலம் வழங்கின.
இது தவிர மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் ஜிகாத்திற்கு துணையாக “ஒசாமா, சதாம், …” என்று ஒவ்வொரு முஸ்லீம் பகுதிகளிலும் “மதத்தின் பெயரால்” கும்பல்கள் உருவாக்கப்பட்டன.
இதில் “ஒசாமா” எனும் கும்பலுக்கு, லண்டனில் இருந்து செய ல்படும் மற்றைய ஒட்டுப்படைகளான “ஈ.என்.டி.எல்,எப், கருணா” குழுக்களுடன் நெருங்கிச் செயல்பட்ட “பஷீர்” என்பவரே தலைமை தாங்கினார்.
அதே போல திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் ஜிகாத் குழுக்கள் உருவாக்கப்பட்டன .
நொக்ஸ் குழு, ஜெட்டி குழு ,ஒசாமா குழு என்பன திருகோணமலையில் இருந்து இயக்கப்பட்டன .
இதுமட்டுமல்லாது மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் அம்பாறை மாவட்டப் பகுதிகளில் மட்டும் 18 முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் இயக்கப்பட்டன. இதில் அம்பாறையில் செயல்பட்ட முஜாகதின் என்கிற ஆயுத குழு முக்கியமானது.
இன்றைக்கு கிழக்கில் கோத்தபாயா ராஜபக்ச அவர்களோடு சேர்ந்து இயங்கும் அதாவுல்லா அமைச்சராக இருந்த பண்டா குழு என்கிற பாதாள உலக கோஷ்டியுடன் சேர்ந்து இயங்கியவர்களில் ஒருவர் என்பது திருவாளர் பிள்ளையான் என்பவருக்கு தெரியாதா ?
இந்த குழு தான் கருணா குழு ஒசாமா குழுக்களுக்கு இடையே ஆயுத பரிவர்த்தனை செய்த கோஷ்டி ஆகும் .
ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் சூத்திரதாரியாக கருதப்படும் சஹாரான் கூட இலங்கை பாதுகாப்பு அமைச்சின் Pay List இல் இருந்தார் என்பதை சிங்கள அதிகாரிகளே ஒத்து கொள்ளுகின்றார்கள் .
குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இன்றைய ஆட்சியார்களும் அவர்களின் நண்பர்களாக கருதப்படும் நிசங்க சேனாதிபதி போன்றோர் இருக்கிறார்கள் என்பதே கத்தோலிக்க சமூகத்தின் கருத்தாக இருக்கிறது
இது மட்டுமல்லாது ஜமாஅத்தே இஸ்லாம், தெளஹீத் ஜமாஅத், தாப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தே முஸ்லிம் ஆகிய நான்கு வகையான இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு பரந்த அளவில் செயல்படுவதை அமெரிக்கா தூதுவர் அவர்கள் கூட தன்னுடைய நாட்டுடன் மேற்கொண்ட செய்தி பரிவர்த்தனையில் உறுதி படுத்தி இருந்தார்.
இந்த குழுக்களும் கருணா/பிள்ளையான் ஒட்டுக்குழுக்களிடம் ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் செய்தன, இந்த விவகாரங்கள் எல்லாம் கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் ஏற்பாட்டிலேயே நடை பெற்றன என்பதையும் அ ம் பலப்படுத்தி இருந்தார்
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் மட்டக்களப் பு, காத்தான்குடி மற்றும் அம்பாறை மாவட்டப் பகுதிகளிலும் ஆயுத வன்முறைச் சம்பவங்களும் தாக்குதல் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்றன .
இவ்வாறான தாக்குதல்களில் ஆயுதம் தரித்த சில கருணா /பிள்ளையான் குழுவினரும் முஸ்லிம் குழுவினரும் ஈடுபட்டிருப்பதாகப்பொலிஸ் தரப்பு விசாரணைகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சம்பவங்களை இயக்கியது ராணுவம் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இவ்வாறு வடக்கு கிழக்கில் இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் வன்முறைகளின் பின்னணியில் சிறிலங்காப் புலனாய்வாளர்களின் சதிக்கரங்கள் இருந்த சந்தர்ப்பங்கள் ஏராளம் இருக்கின்றன.
ஆனால் இந்த சம்பவங்கள் எவற்றுக்கும் அப்பாவி தமிழ் முஸ்லீம் மக்களுக்கும் சம்பந்தமில்லை .
சிங்கள அரசியல் வாதிகளின் தேவைகளுக்கு , இராணுவ நலன்களுக்காக தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களை உருவாக்கி சமூக முரண்பாட்டை ஏற்படுத்தியது இலங்கை இராணுவ அதிகாரிகள் தான் என்பதை யாரும் மறைக்க வேண்டியதில்லை
மகிந்த ராஜபக்சே காலத்திற்கு நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லீம் ஆயுத குழுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் . முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்களும் அண்மைய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றில் இதனை ஏற்று கொண்டு இருக்கிறார்
இன்றைக்கு பிள்ளையான் என்கிற அறிவாளி மூலம் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்க முஸ்லீம் ஆயுத குழுக்கள் முயலுகின்றார்கள் என கதை எழுதுவதும் இலங்கை புலனாய்வு அதிகாரிகள் தான் என்பதை சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்
இலங்கை பொருளாதார ரீதியாக பலவீனம் அடையும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சிங்கள மக்களை சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக ஏவி விடும் நோக்கில் சிங்கள அரசுகள் கையாளும் 50 ஆண்டுகால தந்திரங்களில் இதுவும் ஒன்றாகும்
ஆகவே இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு எதிரான எந்த தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களும் இயங்கவில்லை என்பதே உண்மை . கிழக்கில் இயங்கும் சகல முஸ்லீம் தமிழ் குழுக்களும் இலங்கை புலனாய்வு துறையிலும் அவர்கள் நலனுக்காக மட்டுமே இயங்கப்படுகின்றன .
குறிப்பாக ஈஸ்டர் குண்டுவெடிப்பு போன்ற கொடூரங்களுக்கு பின்னணியிலும் சிங்கள ஆட்சியாளர்களின் நலன்களே இருக்கின்றன
உண்மையில் இலங்கையில் முஸ்லீம் தேசம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை முஸ்லீம் சமூகத்திற்கு இருக்கின்றதோ அல்லது இல்லையோ என்பது பற்றி யாருக்கும் தெரியாது
ஆனால் அப்படியான கருத்துருவாக்கம் ஒன்றை செய்ய வேண்டிய தேவை ராஜபக்சே குடும்பத்திற்கு இருக்கின்றது . அரசியலில் தங்களை தற்காத்து கொள்ளுவதர்க்காக இவ்வாறான கதைகளை பய்னபடுத்த முயற்சிக்கிறார்கள்