ஆரம்ப காலத்தில் தமிழ் ஆயுதப் போராட்ட குழுக்கள் சிறிய அளவிலான
எண்ணிக்கையுடைய குழுக்களாகவே
இருந்தன.
அவ்வேளை இந்தியாவின் உதவி மட்டும் இல்லாமலிருந்திருந்தால்
சகல விடுதலை அமைப்புக்களையும்
இலங்கை அரசு இல்லாமல் ஒழித்திருக்கும்.
உதாரணமாக ஜே.வி.பி
யினை கூறலாம். இந்த அமைப்பிற்கு உலக நாடுகளின் ஆதரவு இருந்த போதும் அயல் நாட்டு ஆதரவு இருந்திருக்கவில்லை.இதனாலேயே
அவர்களின் விடுதலை போராட்டம் ஒடுக்கப்பட்டது.
அத்துடன் இந்தியா எம்மை “ வா.. வாவென” கூப்பிட்டு இராணுவப் பயிற்சிகளை தரவில்லை. நாமாகத் தான்
இந்தியாவிடம் உதவி கோரி சென்றோம்
ஆனால் உதவிசெய்த நாட்டிற்கு நாம்
என்ன செய்தோம்?…
அவர்களுக்கு விசுவாசமாக எந்தவொரு
சந்தர்ப்பத்திலும் நாம் இருக்கவில்லை.
இந்தியாவை மீறி வெளிநாட்டு பயிற்சி
வெளிநாட்டிலிருந்து ஆயுத இறக்குமதி
இந்தியாவிற்குள் போதைப் பொருள் வியாபாரம் கடத்தல் கொள்ளை கொலை நக்சலைட்டுகளுக்கு பயிற்சி
வழங்கியமை அவர்களுடன் சேர்ந்து
இயங்கியமை “ வங்கம் தந்த பாடம் “
என்று இந்தியாவை விமர்சித்தமை.
இதைவிட இயங்கங்கள் தமக்கிடையே
மோதியமை. இறுதியாக C. I.A உளவாளிகளென அன்ரன் பாலசிங்கத்தையும் சந்திர காந்தனையும்
இந்தியா குற்றம் சாட்டியமை.
இத்தனைக்கும் பிறகு இந்தியா
எப்படி நம்மை முற்று முழுதாக நம்பும்?
இந்தியா ஆயுதம் தராமல் விட்டிருந்தால்
இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடந்திருக்காது.
இந்தியா தான் ஒரு ஜனநாயக நாடென
தன்னை காட்டிக் கொண்டாலும்..
அது ஒரு ஜனநாயக நாடு அல்ல.
உதாரணமாக காஷ்மீர் பஞ்சாப் நாகலாந்த் மக்களை இன்னும் அடக்கி
ஒடுக்கியே ஆள்கின்றது
வங்கதேசத்திற்கு என்ன நடந்ததென
இவர்களுக்கு தெரியாதா?
நாம் ஒரு ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை
இனம்.இந்திய தமிழ் நாட்டு மக்களை
விட்டால் எமக்கும் நாதி கிடையாது.
அப்படியிருக்க நாம் எப்படி இந்தியாவுடன் முட்டி மோத முடியும்?..
அனுசரித்து விசுவாசமாகத்தானே சென்றிருக்க வேண்டும்.
அப்படி நாம் விசுவாசமாக நடந்திருந்தால் ஒரு வேளை எமக்கு
இந்நேரம் ஒரு மாநில சுயாட்சியாவது
கிடைத்திருக்கும்.
இந்தியா என்றுமே எமக்கு தமிழீழம்
பெற்று தருவோமென சொன்னது கிடையாது. இது எமது தலைவர்களின்
மனக்கோட்டை.
ஆனால் இந்தியாவிற்கு எங்கள் மூலம்
இலங்கையில் காலூன்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தது.
அது அவர்களின் ஞாயமான எண்ணமே.
ஒடுக்கப்பட்ட மக்கள் அனுதாபத்துடனும்
தமக்கு விடுதலையை பெற்றுத் தருபவர்களுக்கு விசுவாசமாகவும் இருந்து தான் தமக்கென ஒரு நாட்டை
பெற்றுள்ளார்கள்.
உதாரணமாக கிழக்கு தீமோர்( அவுஸ்ரேலியா)கொசோவா (அமெரிக்கா)தென்சூடான்( அமெரிக்கா)
எரித்திரியா( மேற்குலக நாடுகள்)
உண்மையாகவும் விசுவாசமாகவும்
செயல்பட்டதன் விளைவே இவர்களுக்கு
விடுதலை கிடைத்தமையாகும்.
ஆனால் இவற்றிற்கு சுதந்திரம் பெற்று
கொடுத்த நாடுகளோ.. முதலாளித்துவ
அடக்கு முறை கொண்ட நாடுகள்.
இவர்கள் மூலம் தமது விடுதலையைப்
பெற்றுக்கொண்ட நாடுகளின் போராட்ட
குழுக்களின் தலைவர்கள் தம்மை ஒரு ஆளுமை மிக்க தலைவர்களென்று ஒருபோதும் அலட்டிக்கொண்டதில்லை
இராஜதந்திரம் தூரநோக்கு பார்வை
விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மை
இதுவே இவர்களின் தாரக மந்திரமாகும்
உலகில் எந்த வல்லரசு நாடுகளும் தனது
நலம் சாராமலும் தனது வெளியுறவுக்கொள்கை பாதுகாப்பு நலன் இவற்றை மீறி எதையும் ஒருபோதும் செய்யாது.
இதுவே யதார்த்தம்.
எமது விடுதலை இயக்க தலைவர்கள்
இந்தியாவை சரியாக கையாளவில்லையென்பதே எனது கருத்தாகும்.
ஏன்? பெண்ணடிமை சாதியம் சமத்துவம்
பாட்டாளி வர்க்கம் என பேசிய எமது
விடுதலை இயக்கத் தலைவர்களே! அவற்றை தமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கவில்லை.
ஒரு தலைவராவது ஒடுக்கப்பட்ட பெண்ணையோ பாட்டாளிவர்க்க அறிவுகுறைந்த பெண்களையோ திருமணம் செய்யவில்லை.
இவர்களனைவரும் மேட்டுக்குடி பட்டதாரி பெண்களையே திருமணம் செய்தார்கள்.சாதாரண பாமர மக்களே இவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென
நினைத்தார்கள்.
ஒருவேளை இவர்களால் தமிழீழம்
கிடைத்திருந்தால் மீண்டும் ஒடுக்கப்பட்ட
மக்கள் தமது விடுதலைக்காக ஒரு போராட்டம் நிகழ்த்த வேண்டி வந்திருக்கும்.
இந்தியா எமக்கு செய்தது துரோகமே!
இயக்கங்களை தண்டிப்பதாக நினைத்து
ஈழத்தமிழர்களை தண்டித்தது வரலாற்றுப்
பிழை.
வரலாறு இதை என்றோ ஓர்நாள் இந்தியாவிற்கு ஞாபகப்படுத்தும்.