கவிதைகள்
தலைமுறை தவறுது!… ( கவிதை ) …. ரூபன் சிவா… பிரான்ஸ்.

முட்டாள்கள் வாழும் தேசமடா ![]()
முன்னேறத் தெரியாத கூட்டமடா
கூத்தாடி படியேற வாழ்த்துமடா
குடும்பத்தை வீதியிலே நிறுத்துமடா ….
பாட்டாளி வர்க்கத்தை பாருங்கடா
பட்டினியால் வாழ்வதனைக் கேளுங்கடா
பச்சப்புள்ளை பாலுக்காக ஏங்குதடா
பாவியளே வீண்விரயம் தானடா
பால்வாங்க காசுதான் ஏதடா
பல்லிளித்துக் காட்டாமல் கூறடா
பண்பாடு உனக்கிருக்கு தெரிந்திடடா
பாவியரே அறிவிருந்தால் திருந்திடடா
தமிழினத்தின் வரலாற்றைக் கேட்டிடடா
பாரதியும் பாடிவைத்தான் படித்திடடா
பழிச்சொல்லை வாங்காமல் வாழ்ந்திடடா
பாரினிலே தமிழினத்தை உயர்த்திடடா …..
கவிஞர், எழுத்தாளர்
ரூபன் சிவா
பிரான்ஸ்
![]()