கடவுள் முதலில் ஒரு நாயைப் படைத்தார். படைத்து “ வீட்டு வாசலில் நாள் பூரா உட்கார்ந்து அங்கு வருவோர், போவோரைப் பார்த்துக் குரைப்பதுதான் உன் வேலை. இதைச்செய்து கொண்டு 20 ஆண்டுகள் நீ வாழ்வாய்” என்றார்.
ஆனால் அந்த நாயோ “ இந்த மாதிரி வேலையை 20 ஆண்டுகள் செய்வது மிக கடினம். என்னுடைய வாழ்க்கையிலிருந்து 10 ஆண்டுகளை நான் உங்களுக்கே திருப்பித் தந்து விடுகிறேன். எனக்கு 10 ஆண்டுகளே போதும் “ என்றது.
கடவுள் “சரி” என்றார்.
இரண்டாவது நாள்கடவுள் குரங்கைப்படைத்தார். “ ஜனங்களை உன்கோணங்கித்தன சேஷ்டைகளால் உற்சாகப்படுத்து. அதுதான் உன் வேலை. அதற்கு நான் உனக்கு 20 ஆண்டுகள் ஆயுள் தருகிறேன்” என்றார்..
குரங்கு சொன்னது” 20 வருடம் நான் கோணங்கித்தனம் செய்து கொண்டு இருக்க முடியாது. அந்த நாய் செய்தது போல நானும் என்னுடைய ஆயுளில் 10 வருஷங்களை உங்களிடமே திருப்பித் தருகிறேன்” என்றது
கடவுள் “சரி” என்றார்.
மூன்றாம்நாள் கடவுள் பசுவைப்படைத்தார். படைத்து “ நீ நாள் பூராவும் வயலுக்குப்போய், வெயிலில் காய்ந்து குட்டிகளைப் பெற்றெடுத்து அவைகளுக்கும் உன் எஜமானருக்கும் பால் கொடுத்து அவன் குடும்பத்தையும் உன் குடும்பத்தையும் காப்பாற்ற உனக்கு நான் 60 ஆண்டு ஆயுள் தருகிறேன்” என்றார்.
“அப்படிப் பட்ட கடினமான வாழ்க்கையை நான் 60 வருஷம் வாழ்வது எனக்குக் கஷ்டம். 20 வருட ஆயுள் எனக்குப்போதும். மீதமுள்ள 40 ஆண்டுகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்றது.
கடவுள் சம்மதித்தார்.
நான்காவது நாள் கடவுள் மனிதனைப்படைத்தார். படைத்து மனிதா” நன்றாக சாப்பிடு, தூங்கு, விளையாடு, கல்யாணம் செய்துகொள், சந்தோஷமாக வாழு. அதற்கு நான் உனக்கு 20 ஆண்டு ஆயுசு தருகிறேன்” என்றார்
உடனே மனிதன் திகைத்தபடி “என்ன ? 20 வருஷங்கள்தானா? போதாது. எனக்கு இப்போது நீங்கள் கொடுத்த 20 வருடங்களுடன் பசு திருப்பிக்கொடுத்த 40, குரங்கு திருப்பிக் கொடுத்த 10, பிறகு நாய் திருப்பிக் கொடுத்த 10 எல்லாவற்றையும் சேர்த்து குறைந்த பட்சம் மொத்தம் 80 வருடங்களாகவாவது ஆக்குங்கள்” என்றான்.
கடவுளும் “சரி. நீ கேட்டபடியே கொடுக்கிறேன்” என்றார்.
இப்போது புரிகிறதா
நாம் ஏன் நம் முதல் 20 ஆண்டுகளில் சாப்பிட்டு, தூங்கி, விளையாடி சந்தோஷமாக இருக்கிறோம்,
அடுத்த 40 வருடம் நாம், வெயில், மழை என்று பாராமல் குடும்பத்தை காப்பாப்பாற்றுவதற்காக மாடாய் உழைத்து ஓடாய்த்தேய்ந்து போகிறோம்,
அதற்கு அடுத்த 10 ஆண்டுகள் நம் பேரக்குழந்தைகளுடன் அவர்களை மகிழ்விக்க குரங்கு சேஷ்டைகள் எல்லாம் செய்கிறோம்,
கடைசி 10 ஆண்டுகள் வாசல் திண்ணையில் உட்கார்ந்து வருவோர், போவோரை சந்தேகத்தோடு பார்த்து வீட்டுக்கு காவல்நாய் போல் செயல் படுகிறோம் என்று?
இதுதான் வாழ்க்கை.
Jayasankar Karupaiya.