முகநூல்
கடந்த முப்பது ஆண்டுகால அரசியலில் சசிகலா!….
கடந்த முப்பது ஆண்டுகால அரசியலில் சசிகலாவைப் போல ஊடகங்களாலும், ஊடகவாதிகளாலும்,
அரசியல்வாதிகளாலும்,
இந்திய அதிகார வர்க்கத்தாலும்..
தாழ்வும், இழிவும், அவமரியாதையும் #செய்யப்பட்டவர் வேறு எவரும் இருக்க முடியாது..
அதுவும் ஒரு பெண்ணாக
அதை சமாளித்திருப்பது
வியக்க வைக்கிறது.
வேலைக்காரி,
எடுபிடி,
பாத்திரம் கழுவ வந்தவள்,
கைநாட்டு,
கொலைகாரி,
சதிகாரி,
லெஸ்பியன் இன்னும்
எத்தனை எத்தனையோ பட்டங்கள்.
நானே முதுகளத்தூர்
துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கியை பிடித்தது வேண்டுமானால் ஜெயாவாக இருக்கலாம்,
ஆனால் ட்ரிக்கரை அழுத்தியது
சசி என்று எழுதினேன்.
#ஒருபுறம் ஆரிய ஊடகங்கள் ஜெயாவின் அராஜகங்களை எல்லாம் சசியின் மீது கட்டியது,
மறுபுறம் ஜெயாவை நேரடியாக தாக்க பயந்த திராவிட ஊடகங்கள்
கேரக்டர் அசாசினேட் செய்தார்கள்.
ஜெயாவே சொன்னது போல #ஜெயாவின் சுமைதாங்கித்தான் சசி.
முதல் குற்றவாளி இறந்து,
வழக்கும் நீதிமன்றத்தில் இறந்து, பின்னர் வழக்கு மீண்டும் திடீரென்று உயிர்த்தெழுந்து
நான்கு ஆண்டு காலம்
அவரை சிறையில் #தள்ளியதெல்லாம்
கொடூரத்தின் உச்சம்.
எத்தனையோ அரசியல்வாதிகள் சிறைவாசத்தின் பெரும்பான்மை நாட்களை இதயக்கோளாறு,
சிறுநீரக, நுரையீரல் கோளாறு என மருத்துவமனைகளில் சமாளிக்க சசியோ அதை சிறையிலேயே கழித்தார்.
அப்போதும் கூட வன்மக்காரர்களின் #வன்மம் அடங்கி இருக்கவில்லை, பாஜக அரசின் மாநிலத்தில்
அவர் ஷாப்பிங் சென்றார் என்று பரப்பினார்கள்.
ஜெயா அதிகாரத்தில் இருந்தவரை சசியின் உறவினர்கள்
தஞ்சை மற்றும் பிறபகுதிகளில் செய்த அடாவடியை ரசித்திருக்கவில்லை.
தமிழ்த் தேசிய தளத்தில் ‘எம்.என்’னோடு அண்ணன் முத்துக்குமார் உட்பட பலரும் மிகவும் நெருக்கம் பாராட்டி இருந்தும் அவர்கள் அரசியல்
என்னை கவர்ந்ததில்லை.
இந்தியத்தின் கோர முகமான
அவரை வன்மத்தோடு டார்கெட் செய்தபோதுதான்
அது என்னை
அவரை நேசிக்க வைத்தது.
சசியின் போராட்டம் #அதிமுகவை காப்பது மட்டுமாக இருக்காது,
அது மறைமுகமாக தமிழர் அரசியலை கிள்ளுக்கீரையாக்கி, ஜனநாயகத்தை படுகொலை செய்து,
அதை நினைத்தபடியெல்லாம் பந்தாடும் இந்தோ-ஆரியத்திடமிருந்தும் #காக்கும் போராட்டமாக இருக்கும்.
அவர் பயணித்த கட்சிக்கும்,
அவர் நேசித்த தோழிக்கும் உண்மையாக இருந்து
இந்த வயதிலும் தன் வாழ்வின் நான்கு ஆண்டு காலத்தை சிறையில் கழித்த சசி அதிமுக வரலாற்றில்
தியாகத் தலைவிதான்.
இந்த அரட்டல்,
உருட்டல்களையெல்லாம்
பல ஆண்டுகளாக கடந்துதான் வந்திருக்கிறேன் என்று அவர் சிறைசெல்லும் முன் வெகு எதார்த்தமாக பேசியது ரசிக்க வைத்தது.
அது தொடர்ந்தால்…
இனி வரும் காலங்களில் அவரின் போராட்டமும், வெற்றியும்
தமிழக அரசியலில் அவருக்கென தனியிடத்தை பெற்றுத்தரும்.
பலருக்கும் இன்ஸபிரேஷன்’னாக இருப்பார்.
மறைவிற்கு பிறகு ஜெயாவிற்கு பக்கம் பக்கமாக ‘வெற்றிக்கதை’
ரைட்-டப்கள் எழுதி கொண்டாடிய ஊடகங்கள் சசிக்கும் எழுதுமா என உறுதியாக சொல்ல முடியாது,
ஏனெனில் அதற்கு(முன்) இம்மண்ணில் தமிழர் அரசியல் மலர்ந்திருக்க வேண்டும்.
Krishna Muthukumarappan