Featureமுகநூல்

அன்புள்ள அண்ணாச்சி சாணக்கியனுக்கு!…. *கெளரி மனோகரி… ( கனடா )

கெளரிமனோகரியின் பகிரங்க கடிதம்!

வேதனையுடனும் வெப்புசாரத்துடனும் கனடாவில் இருந்து ஒரு கல்முனையாள் எழுதிக்கொள்வது!
எனது அறிமுகம் ஊடாக நான் உங்கள் ஆதரவாளர் என்று பொய் சொல்லவிரும்பவில்லை. நான் பாரம்பரிய தமிழரசுக்கட்சி குடும்பப்பின்னணியில் வந்தவள். அதன் தொடர்ச்சியாக எனது இரு சகோதரர்களை மாவீரர்களாக பறிகொடுத்தவள்.
அண்மைக்காலமாக தமிழரசு வழக்கொழிந்து போய் விட்டதனை புரிந்து கொண்டு கருணம்மானையும் பிள்ளையான் ஐயாவையும் ஆதரித்துவருபவள்.
ஆனாலும் தாங்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் எதிர்கொள்ளநேர்ந்த ஆபத்தையும் அவமானத்தையும் தாங்க மாட்டாத ஒரு தமிழச்சி தங்கையாக இதனை எழுதுகின்றேன்.
நீங்கள் தங்களது முகநூலில் அவ்வப்போது பதிவிட்டுக்கொண்டிருந்த ‘பாதுகாப்பாக உள்ளேன்’ என்கின்ற பதிவுகள் எவ்வளவு தூரம் தாங்கள் அங்கு அச்சத்துக்குள்ளாக நேர்ந்தது என்பதை எமக்கு உணர்த்தின.
முதலில் சுமந்திரன் குழுவினரே தங்களுடன் முரண்பட்டார்கள் என்றே எண்ணினேன். பின்னர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பல்கலைக்கழக மாணவர்கள் என்னும் போர்வையில் தங்களது வாகனத்தை உடைத்தது மட்டுமன்றி தங்களுக்கும் ஆபத்து ஏற்படுத்த துணிந்தார்கள் என்பதை அறியும்போது இரத்தம் கொதிக்கின்றது.
நான் தங்களுக்கு புத்தி சொல்லத் தகுதியானவளா என்று எண்ண வேண்டாம். எனக்கு தெரிந்த சிலவிடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
பாருங்கள் அண்ணா!
பொத்துவிலில் இருந்து நீங்கள் புறப்பட்டபோது வெறும் 27 பேர்தான் அங்கு நின்றார்கள். அவர்களை பல்லாயிரம் பேராக்கிய பெருமை உங்களுக்கே உரியது. முதல்நாள் ஊர்வலத்தில் பெட்டிப்பாம்பாக தங்களின் பின்னால் வந்த சுமந்திரனும் சுஹாஸ் என்பவரும் கிழக்கு மாகாண எல்லையைதாண்டியவுடன் எப்படி உங்களை ஊர்வலத்தின் பின்னாலே ஒதுக்கத் தொடங்கினார்கள் என்பதை நான் நன்கே அவதானித்தேன்.
உங்களுக்கு யாழ்ப்பாணத்தாரின் கட்சி மோதல்கள், இயக்க மோதல்கள், சாதி வசைகள், குத்துவெட்டுக்கள், எல்லாமே புதுசு ஆனால் வரலாறு பல விடயங்களை பதிவு செய்து வைத்துள்ளது. அரசியலில் உள்ள நீங்கள் அவற்றை கட்டாயமாக அறிந்து கொள்ளவேண்டும்.
எங்களது பெருமதிப்புக்குரிய தங்களது பாட்டனார் இராசமாணிக்கம் ஐயாவுக்கே அல்வா கொடுத்தவர்கள் யாழ்ப்பாணத்து அரசியல் வாதிகள்.
அவரும் தமிழரசு கட்சியை நம்பி ஏமாந்தவர்தான். 1965ஆம் ஆண்டு தேர்தலிலே அமைச்சு பதவி எடுப்போம் ‘உங்களுக்கும் ஒன்று’ என்று சொல்லி அவரையும் கை உயர்த்தவைத்து ஏமாற்றியவர்தான் செல்வநாயகம். டட்லி சேனநாயக்காவின் யுஎன்பி ஆட்சியை பாதுகாத்தமைக்கான கைமாறாக கிடைத்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சை திருச்செல்வத்துக்கும் பிரதி சபாநாயகர் பதவியை சிவசிதம்பரத்துக்கும் பகிர்ந்துகொண்டார். பின்னர் ‘தலைவர் பதவி’ என்று கொடுத்துவிட்டு ஒரு வருடத்தில் யாப்பை மாற்றி வருடத்துக்கு ஒரு தலைவர் என்று அதனையும் பறித்துக்கொண்டார்கள்.
இத்தனைக்கும் தங்களைப்போல் அரசியலில் குழந்தையாக அவர் தமிழரசு கட்சியில் சேரவில்லை. மண்டூர் சின்னப்பு உடையாரின் பேரனென்ற சமூக அடையாளம் கொண்டவர் அவர் . செல்வநாயகம் தமிழரசு கட்சியை தொடங்குவதற்கு முன்பே இலங்கையின் முதலாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். 1952ஆம் ஆண்டில் சுயேற்சையாக போட்டியிட்டு எம்பியாக இருந்தவர். அவரிடம் நடையாய் நடந்து தான் செல்வநாயகம் அவரை 1956ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் தமிழரசு கட்சியில் சேர்த்துக்கொண்டார். அப்படியிருந்த உங்கள் அப்பப்னுக்கே அல்வா கொடுத்தவர்கள் யாழ்ப்பாணத்தார்.
அதேபோல செல்வநாயகம் கட்சி தொடங்கிய அன்றிலிருந்தே வீடுவீடாக அவரை கூட்டிச்சென்று மட்டக்களப்பை அறிமுகம் செய்தவர் இராஜதுரை அவர்கள். அப்படி 25 வருடம் கட்சி வளர்த்தவரை எப்படி அமிர்தலிங்கம் போன்றவர்கள் ஒரே நாளில் துரோகியாகி கட்சியை விட்டு துரத்தினார்கள் என்கின்ற வரலாறுகளை நீங்கள் தேடித்தேடி படிக்கவேண்டும். அதற்கு 40 வருசத்துக்கும் பின்னர் அந்த செல்வநாயகத்தின் நினைவு தினத்துக்காக யாழ்ப்பாணம் சென்ற வயது முதிர்ந்த இராஜதுரை என்கின்ற பெருமகனாரை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ என்று செருப்பாலெறிந்து மானபங்கம் செய்தான் சிவாஜிலிங்கம் என்கின்ற நாறவாயன். அவர்களோடு இணைந்துதான் தங்கள் தற்போது அரசியல் செய்ய தொடங்கியுள்ளீர்கள்.
இருபதுவருடம் எத்தனையோ யுத்த சாதனைகளை படைத்த கருணாம்மானை திடீரென்று துரோகி பட்டம் கொடுத்து கொலைவெறி கொண்டு துரத்தினார்கள்.
எண்ணிப்பாருங்கள் கடந்த தேர்தலிலே ஒட்டுக்குழு ஓணான்குழு என்று பிள்ளையான் ஐயாவை திட்டி தீர்த்தீர்கள். இப்போது பார்த்தீர்களா யார் ஒட்டுக்குழுக்கள்? யார் ஓணான் குழுக்கள்? யார் உங்களின் எதிரிகள்? யார் தமிழரின் ஒற்றுமைக்கு ஆப்பு வைப்பவர்கள் என்பதை?
தமிழரசு கட்சிக்கு எதிராக அரசியல் செய்யும் கருணாம்மான் நினைத்திருந்தால் பொத்துவிலிலோ அக்கரைப்பற்றிலோ கல்முனையிலோ வைத்து இந்த ஊர்வலத்தையே தடுத்திருக்கமுடியும். பிள்ளையான் ஐயாவோ உங்களது ஊர்வலத்தை கண்டுகொள்ளவேயில்லை. கெளரவமாக அவரும் அவர் மக்கள் பணியுமாக படுவான்கரையெங்கும் சிவனேயென்று திரிகின்றார்.
இதிலிருந்து இணக்க அரசியல் செய்பவர்கள் அல்ல தமிழர்களின் துரோகிகள். அவர்கள் அவர்கள் வழியில் பயணிக்கிறார்கள்.ஆனால் தேசியம் பேசும் இந்த நடிப்பு சுதேசிகளே தமிழர்களின் துரோகிகள் என்பதை இன்றிலிருந்து நீங்கள் நன்றாக புரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். அடுத்தத்தேர்தலில் ஜனா அண்ணாவை போல உங்கள் சேவைகளை,அருமை பெருமைகளை சொல்லிவாக்கு கேளுங்கள். மாறாக துரோகிகளின் கூடாரத்துக்குள் இருந்து கொண்டு நம்மவரைப்பார்த்து துரோகி என்று பேசாதீர்கள்.
கூடியிருந்தே குழிபறித்த அந்த சுஹாஸ் கோஸ்டியின் குணத்தைப்பார்த்தீர்களா? உங்களை அடித்து துரத்தியது மட்டுமன்றி ‘துரோகி’ என்றும் அறிக்கை விட்டுள்ளார். இத்தனைக்கும் அந்த சைக்கிள் கோஸ்டிக்கு நீங்கள் முன் பின் பகை கொண்டவரும் அல்ல. அரசியல் போட்டியாளருமல்ல.
தமிழரசுகட்சியுடன் முரண்பாடு என்றால் ஏன் சைக்கிள் கோஸ்டி சுமந்திரனை குறிவைக்கவில்லை அவரின் வாகனத்தை உடைத்திருக்கலாமே? அவர்களால் சுமந்திரன் மீது கை வைக்க முடியுமா? அதெப்படி சாணக்கியனின் வாகனம் குறிவைக்கப்பட்டது?இவன் யார் மட்டக்களப்பான் இங்கே வந்து நினைவுக்கல் நாட்ட என்கின்ற எகத்தாளமன்றி வேறென்ன?
எனக்கு தங்களுடைய அரசியலில் உடன்பாடில்லை. ஆனால் எமது மாவட்ட மக்களின் விருப்பில் தெரிவான ஒரு தலைவன் என்கின்ற மதிப்பு என்றும் உண்டு. அந்த உரிமையில்தான் இந்த பகிரங்க கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன். அவர்கள் உங்களையல்ல மட்டக்களப்பு மக்கள் அனைவரையுமே அவமதித்திருக்கின்றார்கள்.
குறிப்பு * இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தங்களுக்கு தந்துள்ள துரோகி பட்டம் தமிழரசு கட்சியினரின் வாயால் வெளிவருவதற்கு கனகாலம் எடுக்காது.

அன்புடன்….

*கெளரி மனோகரி (கல்முனை)
கனடா.
         _____ ______ ______ ______ _______ ________ _______ _______

எனக்குப் பிடித்த பதிவு இது.உண்மையான விசயத்தை மூடிமறைப்பின்றி கட்டுரையாளர் எழுதியுள்ளார்.எப்பொழுது ம் எம்மையும் நாம் உரசிப் பார்க்க வேண்டும்.சுயவிமர்சனம் தேவை.தமிழரசுக்கட்சியில் குறிப்பாக திரு..அமிர்தலிங்கம் திரு.செ.இராஜதுரைக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதை மறுப்பதற்கில்லை.தமிழரசக் கட்சியோடு பயணித்தவர்களுக்கு அது தெரியும்.

கிழக்கு மாகாணத்துக்கு தமிழரின் தலைமைத்துவம் போய்விடக்கூடாதே என்பதற்காக தமிழரசுக் கட்சியில் சிலர் சதி செய்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

யாழ்ப்பாணத்து மேட்டுக்குடியினர் தமது கையிலேதான் தமிழரின் தலைமைத்துவம் இருக்க வேண்டும் என்று நினைத்தமை அறவழி அரசியலில் மட்டுமல்ல ஆயுதவழி அரசியலிலும் தொடர்ந்தது.

சாணக்கியன் போன்ற இளமையான துணிச்சலான அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் கவனத்திற்குள் வரக்கூடாது என்பதில் பலர் கவனமாக இருக்கிறார்கள்

தமிழர்கள் எடுத்த எடுப்பில் டக்கென்று துரோகிப் பட்டம் கொடுப்பதில் விண்ணாதி விண்ணர்கள்.வலிந்து துரோகியாக்கி துரோகிப் பட்டம் கொடுப்பவர்கள்.சிங்கள அரசியல்வாதிகளால் பிரச்சினை வந்ததற்கே தமிழ் அரசியல்வாதிகள் காரணம்.

ஏலையா க.முருகதாசன்.

—————  —————  ——————–  ——————

யார் இந்த இளைஞன் ? ஏன் இவன் தமிழ் மக்களின் கண்களிலும் தென்படவில்லை ?

 

எந்தவிதமான பின்புலமுமில்லாது ( பணம், பதவி, மாளிகை, சொத்து) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை P2P யின் இயங்கு தளத்திற்கு துணை நின்ற சகோதரன் மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் குணராசா குணசேகரன் கூட பெரு மதிப்பிற்குரியவனே ..
காரணம் சாணாக்கியனுக்கு கட்சி பேதம் பார்க்காது பாதுகாப்புக் கொடுத்தவன் அவன் , இதனை எத்தனை பேர் அவதானித்து இருப்பார்களோ தெரியாது , சில வேளை இவ் இளைஞன் யார் என்று கூட சிலர் கேட்கக் கூடும் அது தான் உண்மை .
இன்று சாணக்கியனை போற்றும் சமூகம் இந்த இளைஞனை யாரும் கண்டுகொள்ள மாட்டீர்கள் , ஏனென்றால் அவனிடம் பண பலம் இல்லை அது மட்டுமல்லாது இவன் ஒரு ஏழை ! பரபரப்பு இல்லாமல் மக்களிற்கான உன் உணர்வு அது ஈடு இணையற்றது , வெற்றிக்கு வழிசமைத்தவர்களில் நீயும் ஒருவன் ஆனால் உன்னை யாருக்கும் தெரியவில்லை அது தான் வடக்கு – கிழக்கு மக்கள் பலரின் ஏக்கம் .
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறும் அனைத்து போராட்டத் திலும் முன்னணியிலும் , பலத்த கோசம் எழுப்புவதிலும் செயல்பாட்டு ரீதியில் மக்களின் பணியில் இவர் முதன்மையானவர் , ஆனால் யாரும் பார்ப்பதில்லை காரணம் உங்களிற்குப் புரியும் . வாழைச்சேனை பிரதேச சபை பிரிவில் சேயேன் மற்றும் குணசேகரன் எதிர்ப்பினால் பிள்ளையான் தலை தெறிக்க ஓடியது அனைவருக்கும் தெரியும் ஆனால் அவர்களை யாரும் பார்ப்பதில்லை காரணம் உங்களிற்குப் புரியும் .

பணம் , பதவி , மாளிகை , சொத்து உள்ளவன் என்ன குற்றம் செய்தாலும் பி ன்னர் அவன் எதைச் செய்தாலும் தமிழ் சமூகம் பெரிதாக அங்கிகரிக்கும் , பெரிதாக செய்யும் ஏழையை சிறிதாகவும் தமிழ் சமூகம் மதிப்பதில்லை . எது எப்படியோ குணசேகரன் வருங்காலம் உனை வாழ்த்தும் அது மட்டும் தான் கூற முடியும் என முகநுால் பதிவில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் .

வாழ்த்துக்கள்

தம்பி என.

கடந்த பல ஆண்டுகளாக மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஒரு பிரதேச சபை உறுப்பினரை கூட மக்களால் தெரிவுசெய்யப்படவில்லை இவரின் நன்மதிப்பாலும் கலங்கமற்ற மக்கள் சேவையாலும் இந்த இளைஞன் மாத்திரமே தமிழ் தேசிய முன்னணியின் இருப்பை மட்டக்களப்பு பிரதேசத்தில் உறுதிப்படுத்தினான்.
இவனது தந்தை கூட இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவரே இருந்தும் இண்றுவரை எதுவித பயமும் இன்றி தன்னால் முடியுமான வகையில் தமிழ் தேசியத்துக்காக பாடுபடுகின்றான் இவனது பணி தொடர தமிழர்கள் அனைவரும் துணைநிற்போம்.
Kunarasa Kunasekaran
ஈழம் ஒரு பார்வை பதிவு

நல்

வாழ்த்துகள்

.

Loading

One Comment

  1. எனக்குப் பிடித்த பதிவு இது.உண்மையான விசயத்தை மூடிமறைப்பின்றி கட்டுரையாளர் எழுதியுள்ளார்.எப்பொழுது ம் எம்மையும் நாம் உரசிப் பார்க்க வேண்டும்.சுயவிமர்சனம் தேவை.தமிழரசுக்கட்சியில் குறிப்பாக திரு..அமிர்தலிங்கம் திரு.செ.இராஜதுரைக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதை மறுப்பதற்கில்லை.தமிழரசக் கட்சியோடு பயணித்தவர்களுக்கு அது தெரியும்.

    கிழக்கு மாகாணத்துக்கு தமிழரின் தலைமைத்துவம் போய்விடக்கூடாதே என்பதற்காக தமிழரசுக் கட்சியில் சிலர் சதி செய்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

    யாழ்ப்பாணத்து மேட்டுக்குடியினர் தமது கையிலேதான் தமிழரின் தலைமைத்துவம் இருக்க வேண்டும் என்று நினைத்தமை அறவழி அரசியலில் மட்டுமல்ல ஆயுதவழி அரசியலிலும் தொடர்ந்தது.

    சாணக்கியன் போன்ற இளமையான துணிச்சலான அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் கவனத்திற்குள் வரக்கூடாது என்பதில் பலர் கவனமாக இருக்கிறார்கள்

    தமிழர்கள் எடுத்த எடுப்பில் டக்கென்று துரோகிப் பட்டம் கொடுப்பதில் விண்ணாதி விண்ணர்கள்.வலிந்து துரோகியாக்கி துரோகிப் பட்டம் கொடுப்பவர்கள்.சிங்கள அரசியல்வாதிகளால் பிரச்சினை வந்ததற்கே தமிழ் அரசியல்வாதிகள் காரணம்.

    ஏலையா க.முருகதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.