Featureமுகநூல்

திருவள்ளுவர் வழி நடப்போமா?….

தேவர், ஆசாரி, வன்னியர், கவுண்டர், பள்ளர், மீனவர், தமிழ் செட்டியார், தமிழ் முதலியார், கோனார், பறையர், தமிழ் முஸ்லீம், தமிழ் கிறிஸ்துவர்கள்,வெள்ளாளர், மூப்பனார் மருத்துவர், உடையார், நாடார், பிள்ளைமார்,வெட்டியான் ,வன்னான்
முக்குலத்தோர் ,கள்ளர் ,அகமுடையார் …..
அடேய் ஒற்றுமையாக இருங்க…. இல்லைனா கண்ட நாய் எல்லாம் வரும் சொன்னா!!
எங்க கேட்டா தானே…..இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போங்க…
அன்றைய தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் உலகத்திற்கே நெறி வகுத்துக் கொண்டிருந்தார். அவர் தாடியோடு இருந்தாரா, அவர் வீட்டுத் திண்ணையில் இருந்து அதை எழுதினாரா, மாளிகையில் இருந்து எழுதினாரா, அவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர், அவர் எந்த மதம், அவர் அடையாளம் என்ன, அவர் ஆண்ட பரம்பரையா, முற்றும் துறந்த சித்தனா, பித்தனா..? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் இழிவான தமிழ்ச் சூழலில் அவர் பிறக்கவில்லை.
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்..
அவர் படைத்த திருக்குறளில் எங்கும் ஒரு தெய்வத்தின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டுப் பதிவுகள் இல்லை, ஓர் அரசையோ ஆளும் வர்க்கத்தையோ உயர்த்தியோ தாழ்த்தியோ ஒரு பதிவும் இல்லை. இப்படி எந்த ஒரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்கக் கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.
எந்த ஒரு மதமும் போதிக்காத மனிதத்துடனும் , எந்த ஓர் அடையாளத்துக்குள்ளும் அடங்காத நடுநிலைமையுடன் எழுதப்பட்ட
இப்படி ஒரு பொது மறை நூலை வேறெங்காவது காண முடியுமா?
பிற்காலத்தில் நாற்பொருளில் மையம் கொண்ட தமிழர்கள் அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற அடிப்படையில் தம் வாழ்வியல் நெறியைக் கட்டமைத்தாலும், வீடு என்ற தனி மனித பகுத்தறிவுக்கு மட்டுமே புலப்பட வேண்டிய கருத்தியலையும் தவிர்த்து ஒரு நன்னெறி வகுத்த பெருந்தகை எங்கள் திருவள்ளுவர்.
இவ்வளவு தெளிவான ஒரு படைப்பைப் படைக்க ஒருவர் எப்பேர்ப்பட்ட ஞானியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். மதங்களின் வேத நூல்களில் இல்லாத பக்குவமும் தெளிவும் திருக்குறளில் இருக்கிறது.
அப்படி என்றால் அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும். இத்தகைய படைப்பைப் படைக்க அவறுக்கு எது ஊன்றுகோலாய் இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். மாளிகையிலும் திண்ணையிலும் இருப்பவரால் இப்படிப் பட்ட நூலை எழுத முடியுமா?
இதைப் படைத்தவர் கண்ட காட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்
அவர் சுற்றுச் சூழல்,
அவர் சொந்தங்கள்,
அவர் நண்பர்கள்,
அவர் கண்ட அரசர்கள்,
அவர் கொண்ட காதல்,
அவர் கற்ற கல்வி,
அவர் பெற்ற செல்வம்,
அவர் வாழ்ந்த மண்,
அவர் நெறி கற்ற ஆசிரியர்கள்,
அவர் மொழி கற்ற அறிஞர்கள்,
அவர் உண்ட உணவு,
அவர் கண்ட கனவு
எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்று எண்ணிப் பாருங்கள்.
எங்கிருந்தோ வந்த இலக்கியங்களையும், சித்தாந்தங்களையும் படித்துப் பூரிக்கும் நம்மவர்கள் நம் முப்பாட்டர் விட்டுச் சென்ற இச்செல்வத்தைப் புறக்கணிக்கலாமா…
இவறுக்கு அடையாளமாக மதம் இல்லை, சாதி இல்லை, வெறும் தமிழே இவர் அடையாளமாக இருக்கிறது. அன்று அவர் ஏந்திய அடையாளம் தமிழ் மட்டும் தான். ஆனால் இன்று நாமோ, மதம், சாதி, தேசம் என்ற கண்ட கண்ட அடையாளங்களை ஏற்றுப் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றோம், ஆனால் தமிழன் என்று சொல்ல மட்டும் தான் தயக்கம்,… தமிழன் என்று சொன்னால் அங்கே மதத்திற்கும் சாதிக்கும் வேலை இல்லாமல் போய் விடும், அங்கு ஒரு சமத்துவம் வந்து விடும் என்ற அச்சமா?
நான் தமிழன் என்ற திமிர் ஒவ்வொரு தமிழனுக்கும் வரும் வரை, திருவள்ளுவர் எம்மிடம் இருந்து அன்னியப்பட்டுத் தான் இருப்பார் போல…
திருக்குறள் படிப்போமா
#திருவள்ளுவர் வழி நடப்போமா !!!
🌹🌹🌹திருக்குறள் மாமணி திருக்குறள் நம்பி திருவள்ளுவர் விருது ச. ஸ்ரீதர்,பி.ஏ,. நிறுவனத்தலைவர், திருவள்ளுவர் சேவா சங்கம் வேலூர் மாவட்டம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.