முகநூல்

இன்னும் எத்தனை தலைமுறைக்கு எமது இனத்திற்கு இந்த அடக்குமுறை!…..

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகம் நாங்கள் புதிதாக உரிமை கொண்டாடவில்லை.இலங்கை சுதந்திரத்தின் பின் இன்றுவரை எம்மை அடிமை கொள்ள துடிக்கிறீர்கள் ஏன் உங்களுக்கு இந்த நாடு சொந்தம் இல்லை என்ற படியால்.நீங்கள் வந்தேறு குடிகள் வரலாறு கூறுகிறது.எங்களின் வரலாற்றை அழித்து உங்களின் வரலாற்றை எழுதாதீர்கள் எமது மண்ணில்.நாம் வடக்கு கிழக்கிற்கு சொந்தமானவர்கள் வரலாற்று ரீதியாக….
நாம் நமக்குள் பிரிவு அடைந்துள்ளோம் ஒன்றுபடமாட்டோம் வேட்டையாட முடியும் இலகுவில் என்று நீங்கள் வேட்டை நரிகள் போல் திட்டங்களை போடாதீர்கள்.இனத்தால் மொழியால் உணர்வால் நிச்சயம் ஒன்றுபடுவோம் கடந்த காலம் போல் உங்களை எதிர்க்கத் துணிந்த பொழுது தமிழர்கள் அனைவரும் ஒரு பாதையில் பயணித்தவர்கள் ஆரம்பத்தில்.இன்றும் ஒன்று படுகிறோம் தமிழர்களாக உங்களின் அடக்குமுறைக்கு எதிராக….
ஒரு நாய் குலைக்கும் பொழுது அதன் சத்தம் கேட்டு தனது இனத்தின் குரல் கேட்கிறது என்று பல நாய்களும் உரிமையோடு குறைக்கிறது அது இனத்தின் உணர்வு.உங்களுக்கு மிருகத்தின் உணர்வுகளை தெரியப்படுத்துவது சிறந்தது காரணம் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்கள் நீங்கள்.இன்று நீங்கள் வடக்கில் கொளுத்திய தீயை அணைப்பதற்கு கிழக்கிலிருந்து புறப்பட்டு உள்ளார்கள் வடக்கு நோக்கி இது தமிழ் இன உணர்வு….
எப்பொழுதுமே உங்களால் எங்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை எங்களை நீங்கள் அடக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புரிந்துகொள்கிறோம் மிகத்தெளிவாக.ஆகவே நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் வடக்கு கிழக்கு எமது தாயக பூமியாக அங்கீகரிக்கப்பட்டு எமது மண்ணையும் மக்களையும் நாங்கள் ஆளும் உரிமை எங்களுக்கு வேண்டும் என்பதை நீங்கள் உங்களின் செயல்பாட்டின் மூலம் எங்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறீர்கள்…..
இறுதியாக எம்மை அழித்து எமது வரலாற்றை அழித்து எங்களை அடிமை கொள்ள துடிக்கும் உங்களுக்கு நிச்சயமாக கூறுகிறேன்.நாங்கள் சுதந்திரமாக எமது மண்ணில் வாழப்போகிறோம் என்பதை.மீண்டும் உறுதியாக கூறுகிறேன் நாங்கள் அடிமைகளாக வாழ்வதற்கு பிறந்தவர்கள் இல்லை எப்பொழுதுமே…..
ஆதங்கத்துடன்
அரசியல் சாணக்கியன்….
Manikam Sinnathambi

அவர்களது பதிவு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.