முகநூல்
பிரபாகரனும் ஈவெராவும்!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை
தங்களுக்கே
நெருக்கமானவராக – தலைவராக வரித்துக் கொள்வதில், உரிமை கோருவதில்
பெரியாரிய- திராவிடக் கருத்துடைய கட்சிகளுக்கும் தமிழ்த்தேசியம்
பேசுபவர்களுக்கும் கடும் போட்டி
நிலவி வருகிறது.
தங்களுக்கே என நிறுவ
முயல்வதன் காரணமாக காரசாரமாக வாதப்பிரதிவாதங்கள் நாள்தோறும் நடந்துவருகிறது.
புலிகள் தமிழகத்தை பின்தளமாகக் கொண்டு இயங்கத் தொடங்கிய காலந்தொட்டு அவர்களை ஆதரித்து இயங்கிவந்தவர்கள் (அதிமுக – திமுக தவிர்த்த) திராவிடக் கட்சியினரே.
பயிற்சி தொடங்கி
ஆயுதத் தயாரிப்பு வரையில்
இக்கட்சிக்காரர்களின் தலைவர்களே நேரடியாக உதவி வந்தனர்.
அரசு நெருக்கடி
செய்த காலங்களிலும் துணிந்து இடையறாது உதவினார்கள்.
பல வழக்குகளில் கைதானார்கள்.
பணம் சொத்துக்களை
புலிகளுக்காக இழந்தார்கள். புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட பின்பும் புலிகளின் மீதான ஆதரவை எப்போதும் விலக்கிக் கொண்டதும் இல்லை.
அதன் காரணமாக புலிகளின் அன்பிற்கும் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக இவர்களே இருந்தார்கள்.
ஈழத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்கள் இந்தப் பெரியாரிவாதிகள். இன்றுவரையிலும் புலிகள் அமைப்பினால் மதிக்கத்தக்க தலைவர்களாக இவர்கள் இருந்து
வருகின்றனர் என்பது உண்மையே.
ஆனால்,
புலிகளின்
இனவிடுதலைக் கருத்தியலில்
திராவிட இயக்க – பெரியாரியல்
கருத்துக்கள் எங்கும் எந்தவிதத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தொடக்கத்தில்
சோசலிக்கருத்துக்களைப் பேசியதிலிருந்து தமிழீழ அரசு
அமைவது வரையிலான
எந்த ஒரு கோட்பாட்டு ஆவணங்களிலும் பெரியார் கருத்துக்கள் இம்மியும் இடம்
பெறவில்லை.
பெரியாரின் எந்த ஒரு மேற்கோளைக் கூடப் பயன்படுத்தியதில்லை.
இயக்கம் பின்னடைவைச் சந்தித்ததுவரையிலான
நிலவரம் இதுதான்.
புலிகள் இன வரையறுப்பைப் பொறுத்தவரை
திராவிட இன வரையறுப்பின் அடிப்படையை
ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு ஈழத்துச் சாதிய சமூக அமைப்பை
ஆரிய வருகை, நால்வருண சமூக அமைப்பு வழியாக திராவிட சமுதாயத்தில் சாதியம் நுழைந்தது போன்ற கருத்துக்களின் அடிப்படையில் பகுப்பாய்வைச் செய்யவில்லை.
(பார்க்க: சாதியமும் புலிகளும் பக் 76. ஆன்டன் பாசிங்கம்)
பெரியாரின் அடிப்படைக கருத்தான ஆரிய – பார்ப்பன மேலாதிக்கக் கருத்தை தமிழீழ மண்ணுக்குப் பொருத்தமற்றதாகவே பார்த்தனர்.
ஆயுதப் போராட்டத்திற்கான வழிகாட்டிகளாக சேகுவாரா, ரெஜிடெப்ரே, மாசேதுங், அமில்கார் காப்ரால் போன்றவர்களைப் பின்பற்றி ஈழத்தின் பிரத்தியேக தன்மைக்கானதாக மாற்றியமைத்த புலிகள் இனம் என்ற முன்னிறுத்தலில்..
பெரியாரால் விலக்கப்பட்டிருந்த
மொழி, மரபு, தொன்மை என்பவற்றையே கோட்பாட்டு ஆவணங்களில் முன்வைத்திருந்தனர்.
இனத்திற்காகவும்
இயக்கத் தலைமைக்காகவும் உயிர்விடும் வீரப்பண்பு, தியாகியான போராளிகளின் நினைவு கூர்தல், வழிபாடு வரை சடங்குகள்
அனைத்தையும் சங்ககால வீரயுக மரபைப் பின்பற்றியே செய்துவந்தனர்.
அறக்கருத்துக்களுக்காகத் திருக்குறளையே முன்வைத்தனர்.
பார்ப்பன அடிமை என
பெரியாரியல்வாதிகளால் சொல்லப்பட்ட இராசராச சோழனை பேரரசை ஒன்றை உருவாக்கிய தமிழன் என்ற பெருமித வகையில் முன்னிலைப்படுத்தினர்.
விடுதலைப் புலிகள் என்ற பெயரையும் கொடியில் புலிச் சின்னமும்
சோழப் பாரம்பரிய பின்புலத்திலேயே உருவாக்கினர்.
தமிழ்மொழி, இனம், மரபு, பண்பாடு தொன்மை போன்ற கருத்தாக்கங்களே புலிகளின் அடிப்படைக் கருத்தியலாகும்.
சுருக்கமாகச் சொன்னால்
தொழில் நுட்பத்தில் நவீனமும் பண்பாட்டில் தொன்மையும் என்பதாகவே புலிகளின் பார்வை இருந்து வந்துள்ளது.
பெரியாரியல் வாதிகள் புலிகளின் நமன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதும் நம்பகமான ஆதரவாளர்கள் என்பது உண்மை என்றாலும் பெரியாரால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்த கருத்துக்களே புலிகளின் கருத்துக்களாக இருந்துள்ளது.
பிரபாகரன் அவர்களை கருத்தியல் உரிமை கோருவதற்கு இயலாத நிலமையே உள்ளது
திராவிட இயக்கவாதிகளுக்கு உள்ளது.
காளிங்கன்
கலைச்செல்வம் சண்முகம் அவர்களது பதிவு. மீள்பதிவு.