முகநூல்
அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் Kamala Harris அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தமிழன் ஆண்டான் உலகை என்று எல்லாம் பெருமை பேசி, இப்பொழுது கமலா ஹாரிஸ் உப ஜனாதிபதி ஆனதும் தமிழச்சி அமெரிக்காவின் உப ஜனாதிபதி என்று பெருமைப்படுகிறார்கள், ஆரவாரம் செய்கிறார்கள்.
அவரை பாராட்டுவதில் வாழ்த்துவதில் தப்பில்லை. ஆனால் அவரை தமிழச்சி என்று அடையாளப்படுத்துவது ஒரு நகைப்பாக இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு தமிழச்சி என்ற எந்த அடையாளமும் இப்பொழுது இல்லை. இனிவரும் அவரின் சந்ததியும் அந்த அடையாளத்தை கடைபிடிக்க மாட்டார்கள். அல்லது அதை மறந்து விடுவார்கள்.
இதற்காக ஏன் இவ்வளவு தமிழ் என்ற ஆரவாரம் செய்ய வேண்டும்? அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு மீடியாவும் அவரை தமிழ் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இந்தியாவின் தெற்கு பின்புலம் என்றுதான் குறிப்பிட்டார்கள். அத்துடன் அவர்களில் யாரும் இந்தியரையோ அல்லது தமிழரையோ இதுவரை திருமணம் முடிக்கவில்லை. ஆபிரிக்கர்களையும் யூதர்களையும் தான் திருமணம் முடித்துள்ளார்கள்.
இனம், மதம், மொழி, ஜாதி என்பதை கடந்து வாழ்ந்துள்ளார்கள். இந்திய ஜாதிய கட்டமைப்புக்கு அப்பால் தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் குடும்பங்களை பாராட்டி மதிப்பளிக்க வேண்டும். அதனால்தான் இன்று அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக kamala Harris வந்துள்ளார். மீண்டும் இதயபூர்வமான வாழ்த்துக்கள் KAMALA HARRIS!!