முகநூல்
சீமான் தம்பிகளுக்கும் கல்யாணசுந்தரம் ஆதரவாளர்களுக்கும்!
சீமானின் பேச்சுக்களை கேட்டுதான் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் பலர் இந்த அரசியலை ஏற்று நாம் தமிழரின் பின்னால் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார்கள்..
இக்கட்சிக்குள் வந்த பின்புதான் கல்யாணசுந்தரத்தை பலர் அடையாளம் காணுகிறார்கள்..
காரணம் கல்யாணசுந்தரம் மிக சிறந்த அறிவார்ந்த பேச்சாற்றல் கொண்டவர். அனைவரிடம் தன்னடக்கத்தோடு பேச கூடியவர் விவாத தளங்களில் எதிரே அமர்ந்திருப்பவர்கள் சற்று பயத்தோடுதான் பேசுவார்கள்.. அப்படியோரு எதிர்வினையினை ஆற்றக்கூடியவர் என்பதில் எனக்கு துளியளவும் மாற்று கருத்தில்லை..
இது அவர் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் வரைதான் அவர் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர் முன்பை போல இருக்கிறாரா என்பதைதான் தற்போது பின்வருமாறு பார்க்க போகிறோம்.
6 மாதங்களாக சீமானிடம் பேச முடியாத சூழலில் இருந்த கல்யாண் எப்படியாவது சீமானிடம் பேசிவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் சென்னை செல்கிறார். அவர் சென்னை செல்வது கட்சியில் முதன்மை பொறுப்பாளர்கள் பலருக்கும் தெரியாத நிலையில் தமிழ்கேள்வி யூடியுப் சேனல் வைத்திருக்கும் செந்திலுக்கு எப்படி தெரிந்தது. அப்படியானால் கல்யாண் கோவையிலிருந்து புறப்படும் முன் அழைபேசியில் முன்கூட்டியே செந்திலிடம் பேசியிருக்கிறார். சென்னை சென்ற கல்யாண் சீமானை சந்திக்காமல் நேராக செந்திலை சந்தித்து பேட்டி கொடுத்துவிட்டு அதன் பின்னர் பொதுசெயலாளர் ஐயா சந்திரசேகர் அவர்களை சந்தித்து பேசுகிறார்.. ஐயா சந்திரசேகருடனான இந்த சந்திப்பு சீமான் காதுக்கு செல்வதற்கு முன் தமிழ்கேள்வி கல்யாணின் பேட்டி சீமானின் கண்ணுக்கு சென்றுவிடுகிறது. சீமானை சந்திக்க சென்றவர் ஏன் செந்திலை சந்தித்து பேட்டி கொடுக்கவேண்டும் இதுதான் கல்யாண் செய்த முதல் பிழை. அதன்பிறகு இப்பிரச்சனை தீவிரமான பின் கல்யாண் கிட்டத்தட்ட 8 சேனல்களுக்கு சென்று பேட்டி கொடுக்கிறார். அதில் சில இடங்களில் சீமானை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தாலும் குறிப்பாக தம்பிகளின் நெஞ்சை நக்குவதை போலவே நிறைய பேசியிருந்தார். ஆனால் “இப்போதும் நாம் தமிழர் கட்சியை நான் நேசிக்கிறேன், அக்கட்சிக்கு எதிராக செயல்படமாட்டேன்” என்றும் சொல்லியிருந்தார். அவர் கட்சியை விட்டு வெளியேறிய பின்னும் உண்மையில் அந்த அக்கறையை கட்சி மீது வைத்திருந்தால் ஒரே கருத்துக்களை, நிலைப்பாடுகளை ஏன் 8க்கும் மேற்பட்ட சேனல்களுக்கு சென்று பேட்டி கொடுக்க வேண்டும். அதற்கு அவர் நடத்துகின்ற பயணி என்ற சேனலிலேயே காணொளி போட்டு விளக்கி பேசியிருக்கலாமே அதை ஏன் அவர் செய்ய மறுத்தார். அதில்தான் கல்யாணின் சூட்சம அரசியல் ஒழிந்து கொண்டிருக்கிறது.
சரி அதையெல்லாம் விடுவோம்! நாதகவிற்கும் கல்யாணுக்குமான பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பிறகு அவர் ஒவ்வோரு அரசியல் தலைவரையும் நேரில் சந்தித்தார் அது சாதாரண சந்திப்பாக இருந்தாலும் நாதக-கல்யாணின் பிரச்சனைக்கு தொடக்கப்புள்ளி போல் ஒரு காரணமாக இருந்த குகன்குமாரை சந்தித்து சமீபத்தில் ஒரு கூட்டமே போட்டார். இதே கல்யாண்தான் சில பேட்டிகளில் எனக்கும் குகன்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லையென சொன்னவர் இப்போது எப்படி அவரோடு நிற்கிறார். இப்போது தெரிகிறதா சீமான் ஏன் கல்யாணை வெறுத்ததற்கான காரணம்.. (இன்னும் பல காரணங்கள்கூட இருக்கலாம் அதில் இதுவும் ஓர் காரணம்)
இனி கல்யாண் செய்ய போகும் அரசியலை பார்ப்போம்!
கல்யாண் நாம் தமிழரை விட்டு வெளியேறினாலும் கூட நாம் தமிழருக்குள்ளே பயணிக்க கூடிய தம்பிகள் பொறுப்பாளர்கள் பலர் இன்னும் கல்யாணை நேசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்..
இந்த ஒன்றை ஆயுதமாக வைத்துகொண்டுதான் கல்யாண் சிறப்பாக காய் நகர்த்தும் வேலைகளை செய்கிறார்.. உதாரணமாக, அவர் நாதகவை விட்டு வெளியேறிய பின்னர் கொடுத்த பேட்டிகளில் நாம் தமிழர் மீது தான் இன்னும் அக்கறை வைத்திருப்பதை போலவும், நாம் தமிழர் தம்பிகளை நேசிப்பது போலவும் ஊடகங்களில் தொடர்ந்து நாடகமாடி கொண்டிருக்கிறார். மேலும், தான் மிக ஒழுக்கமானவன், நேர்மையானவன் என்று மிகைப்படுத்தி அவரே பேசிகொண்டிருக்கிறார். இதனால் திட்டமிட்டே அனைவரின் பார்வையிலும் தன்னை மகான் போல காட்டிகொள்கிறார். இவரின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளாத இலகு மனம் படைத்த தம்பிகள் சீமானோடு நாதகவில் பயணித்தாலும் கல்யாணை தொடர்ந்து நேசித்து கொண்டிருக்கின்றனர்.
கல்யாண் இன்னும் தொடர்ந்து இதுபோன்ற நாடகங்களை நிகழ்த்துவார் இன்னும் தன்னைத்தானே நல்லவனாக காட்டிகொள்வார்.. நாம் தமிழரின் மேல் அக்கறை இருப்பதை போல காட்டி மறைமுகமாக புதைக்கிற வேலையினை செய்வார்.. அவரின் இந்த மயக்கும் நாடகங்களை பார்க்கும் சீமான் தம்பிகள் பலர் உண்மை அறியாது கல்யாணின் ரசிகர்களாக மாறுவார்கள்.. அதுதான் கல்யாணின் இலக்கு காரணம் நாதக தம்பிகளை விட்டால் கல்யாணசுந்தரத்தின் பின்னால் யாரும் அணி சேரமாட்டார்கள்.. ஆகவே இருக்கின்ற தம்பிகளை தன் பக்கம் இழுக்கின்ற வேலை இனி கல்யாண் செவ்வணே செய்து முடிப்பார்..
இதில் வருந்ததக்க விசயம் என்னவெனில் கல்யாண் நாதகவை விட்டு சென்ற உடன் சிலபேர் கட்சியிலிருந்து வெளியேறி கல்யாணுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சீமானை இழிவாக பேசிவருகிறார்கள்..
ஒருபுறம் கல்யாண் தம்பிகளை கவர நாம் தமிழரை இன்னும் நேசிக்கிறேன் வெளியில் நின்று ஆதரவு தருவேன் என்று மயக்கி கொண்டிருக்கும் வேளையில் .. கல்யாணின் தீவிர ஆதரவாளராக இருக்கும் இவர்கள் ஏன் சீமானை வசைபாடுகிறார்கள்.. அதுவும் சீமானின் பிம்பத்தை உடைத்து கல்யாணின் பிம்பத்தை நாதக உறவுகளிடம் கட்டமைப்பதற்கான ஒருவித அரசியல்தான்..
ஆனால், தற்போது நாம் தமிழரில் இருக்கும் உறவுகள் யாரும் கல்யாணை விமர்சித்து பதிவுகள் போடுவதில்லை காரணம் எப்போதும் கல்யாண் தன்னை நல்லவர் போல நேர்மையாளன் போல காட்டி கொண்டிருப்பதுதான்..( வெளியேறிய பின்னும் நாம் தமிழரை நேசிக்கிறேன் என்று கூறும் வார்த்தைகள் உட்பட) அதனால்தான் கல்யாணை விமர்ச்சிக்க நாதக உறவுகளின் உள்ளம் மறுக்கிறது. அதுதான் கல்யாணுக்கு ப்ளஸ் பாய்ண்ட்..
இத்தனை சூட்சமத்தை அறிந்த பின்னர் நான் கல்யாணசுந்தரத்தின் ஆதரவாளர்கள், அல்லக்கைகள் அனைவருக்கும் சொல்லிகொள்ள விரும்புவது என்னவென்றால் கல்யாணசுந்தரத்தின் பிம்பத்தை நல்லமுறையில் நாதக தம்பிகளிடம் கட்டமைக்க சீமான் எனும் புரட்சியாளனின் பிம்பத்தை உடைக்க நினைத்தால்..
கல்யாணசுந்தரத்தின் பிம்பமும் என்னால் சுக்கு சுக்காக நொறுக்கப்படும்.. உங்களின் இந்த கவர்ச்சிகர நெஞ்சை நக்கி பேசும் அரசியலை விரைவில் சீமானின் தம்பிகளும் புரிந்து கொள்வார்கள்.. அதுவரை எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் நான் அனு அனுவாக கல்யாணின் இந்த போலித்தனமான பிம்பத்தை உடைத்தெறிவேன்..
இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்..
நாம் தமிழர் தம்பி தங்கைகளே இது சீமானுக்கான எச்சரிக்கை அல்ல உங்களுக்கான எச்சரிக்கை எக்காரணத்தோடும் நாம் தமிழரை கைவிட்டுவிட்டு சென்றுவிடாதீர்கள்.. நாம் தமிழர் கட்சி என்பது சீமானுக்கு மட்டுமானது அல்ல தமிழ் இனத்திற்கானது அதை அழிக்க சீமானே நினைத்தாலும் விட்டுவிடாதீர்கள்.
நன்றி.