முகநூல்

அமெரிக்காவின் ஒரு நீதி!…. படித்ததில் பிடித்தது.

பதினைந்து வயதான சிறுவன்
குற்றவாளி .!
ஒரு கடையிலிருந்து ஆகாரம்
திருடியதாக கையும் களவுமாக
பிடிக்கப்பட்டபோது, காவலாளியிடம்
இருந்து தப்பிக்க முயற்சிக்கும்
இடையி்ல் கடையிலிருந்த அல்மாாி
கீழே விழுந்து உடைந்தது.
குற்றம் செய்த குழந்தையோடு
நீதிபதி வினவினாா்..
நீ உண்மையாகவே திருடினாயா ?
ஆம் ! .Bread chess pocket .
அந்த குழந்தை கீழே பாா்த்து பதில்
சொன்னது.
நீதிபதி : நீ எதற்காக திருடினாய் ?
குழந்தை : எனக்கு அது தேவைப் –
பட்டது ..
நீதிபதி : பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லாவா. ! ..
குழந்தை : கையில் பணம் இல்லை ..
நீதிபதி : வீட்டிலுள்ளவா்களிடம் கேட்டு வாங்கியிருக்கலாமல்லவா..
குழந்தை : வீட்டில் அம்மா மட்டுமே உள்ளாா். அவா் நோயில் படுத்துகிடக்கின்றாா் ஒரு வேலையுமில்லை அவருக்காக
திருடினேன் ..
நீதிபதி : நீ வேலை ஒன்றும் பாா்க்க
வில்லையா ?
குழந்தை : நான் ஒரு காா் கழுவும்
இடத்தில் வேலைப் பாா்த்து
கொண்டிருந்தேன். ஒரு நாள் என்
தாயாரை கவனிப்பதற்காக நான்
விடுமுறை எடுத்ததால் என்னை
அந்த வேலையிலிருந்து நீக்கி
விட்டனா்.
நீதிபதி : நீ யாரிடமாவது உதவி
கேட்டிருக்கலாமல்லவா ?
குழந்தை : நான் காலையில் வீட்டை
விட்டு இறங்கி ஐம்பதிற்கும் அதிகம்
ஆட்களிடம் நடந்துசென்று வேலை
கேட்டேன் யாரும் எனக்கு வேலை
தரவில்லை. நான் நம்பிக்கை
வைத்தது எல்லாம் அஸ்தமித்தது.
இறுதியில் இதை செய்யவேண்டிய
சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.
பிறகு வழக்கின் வாக்கு வாதம்
முடிந்தது.
நீதிபதி தீர்ப்பு அறிவிக்க
தொடங்கினாா். இது மிகவும்
உணா்ச்சிபூர்வமான திருட்டு.
ரொட்டி திருடிய குற்றம் என்பதில்
சந்தேகமில்லை. இந்த குற்றத்திற்கு
நாம்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்
என்னையும் சோ்த்துதான். நீதி
மன்றத்திலுள்ள அனைவரும்
குற்றவாளிகளே !
அதனால் நீதி மன்றத்திலுள்ள
ஒவ்வொருவரும் நான் உட்பட
அனைவரிடத்திலிருந்தும் பத்து
டாலா் வசூலிக்கப்படவேண்டும்.
இதை கொடுக்காமல் இங்கிருந்து
வெளியே யாரும் செல்லக்கூடாது.
இதை கூறிய நீதிபதி பத்து
டாலரை எடுத்து மேசை மீது
வைத்தாா். பிறகு பேனாவை
எடுத்து தீர்ப்பு எழுத ஆரம்பித்தாா்.
பட்டினியால் திருடிய அந்த குழந்தை
மீது மனித சினேகம் இல்லாத
விதத்தில் நடந்தும், அவன் மீது குற்றம் சுமத்தி
போலீஸில் ஒப்படைத்து கொடுத்தமைக்காக
கடை முதலாளிக்கு ஆயிரம் டாலா்
அபராதம் விதிக்கப்பட்டது.
24 மணிக்குள் அபராத தொகை கட்டவில்லை என்றால்
கடை முத்திரை போடப்பட்டு
நிரந்தரமாக மூடப்படும் என்று
நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பின்னா் நீதிமன்றத்தில் வசூலித்த
அபராதத் தொகை முழுவதும். அந்த குழந்தைக்கு நீதி மன்றம்
வழங்கியது.
நீதிபதியின் தீர்ப்பை கேட்டு நீதி
மன்றத்தில் ஆஜா் ஆன அனைவரும் திகைத்து நின்றனா்.
ஆனந்த கண்ணீா் வடித்தனா்.
நீதிபதியின் தீர்ப்பை கேட்டு ஆச்சரியப்பட்டு நீதிபதியை மீண்டும், மீண்டும் உற்று பாா்த்து
கொண்டிருந்தான் அந்த சிறுவன்.
நீதிபதி தன்னில் மறைத்து வைத்த
கண்ணீர் அவரை அறியாமல்
கண்ணிலிருந்து வழிந்து விழுந்தது.
நேர்மைபும், நியாயமும் நிறைந்த
மனித சினேகித நீதிமான்கள்
நீதி பீடத்தின் தராசை துல்லியமாக்கி நாம்மோடு வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறாா்கள்.
(திருநாவுக்கரசு திருநாமசிங்கம்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.