திரு.நடா மோகன் அவர்கள் நடத்தும் வானொலி
05.10.20 அன்று நடத்தப்பட்ட கலைச்சாரல் 53வது நிகழ்ச்சியில், பிரான்சில் வசிக்கும் எழுத்தாளர் திரு.சிவலிங்கம் விஜயரூபன் அவர்களை, அவர் மேற்கொண்ட „உறவுகள் ஒரு தொடர்கதை „ என்ற நாவல் தொடர்பாக சூம் வழியாக திருமதி.சரளா விமலராஜா அவர்கள் நேர்காணல் கண்ட போது,ஒரு இடத்தில் 20 எழுத்தாளர்களை இணைத்து எழுதிய தனது முயற்சியே முதல் முயற்சி என்ற கருத்துப்படக் கூறியிருந்தார்.
அவர் மேற்கொண்ட முயற்சியை மன்ப்பூர்வமாக பாராட்டும் அதே வேளை 20 எழுத்தாளர்களை இணைத்து எழுதிய தனது முயற்சியே முதல் முயற்சி என்பது தவறு என்பதை அவர் உட்பட அனைவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.2014ம் ஆண்டு, ஜேர்மனி, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், டென்மார்க்,நோர்வே, தமிழகம், இலங்கை, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களை இணைத்து’விழுதல் என்பது எழுகையே’ என்ற நாவலை தொடராக கிழமைக்கு ஒரு பகுதியாக பண்ணாகம் இணையத்தளம்(ஜேர்மனி) அக்கினிக்குஞ்சு இணையத்தளம்(அவுஸ்திரேலியா) யாழ் இணையத்தளம் (இங்கிலாந்து) கோட்டைக் கல்லாறு இணையத்hதளம்(கிழக்கு மாகாணம் ,இலங்கை) ஆகிய இணையத்தளங்களிலும் எனது முகநூலிலும் , என்னோடு இணைந்து பணியாற்றிய நண்பர் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்களின் முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் என்ற முகநூலிலும் 2015 ஆண்டு வரை பிரசுரித்திருந்தோம்.
அத்துடன் தொடர் வெளிவரும் போது எழுதியவர்கள் பற்றிய விபரத்துடன் அவர்களின் புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தோம்.எம்மை இவ்வாறு எழுதுவதற்கு தூண்டுகோளாக இருந்தது 1967ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமாகிய „நிழல்கள்’ என்ற நாவலை எழுதிய திரு.செங்கை ஆழியானும் திரு.செம்பியன் செல்வனுமேயாகும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்வதுடன்,திரு.செம்பியன் செல்வனும், திரு.செங்கை ஆழியானும் பேணராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற வேளை ஒருவர் மாறி ஒருவர் இத்தொடரை எழுதினார்கள் என்பதையும் அறியத்தருகின்றேன்.அதற்கு முன்னரே எஸ்.பொ,திருமதி.வள்ளிநாயகி என்ற குறமகள், திரு.கனக.செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, திரு.நாகராஜன் ஆகியோர் „மத்தாப்பு என்ற பெயரில் ஒரு நாவலை இணைந்து எழுதியிருந்தார்கள்.அக்கதை அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் அக்கிணிக்குஞ்சு இணையத்தளத்தில் மீள் பிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றது.இதைவிட „சிதைவுகளின் ஓர் உதிப்பு „ என்ற கதையை பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏழு பெண் எழுத்தாளர்களான ஆனந்தி, சிவமலர்,கோகிலா மகேந்திரன்,சிறீரஞ்சனி,மாவை பாரதி, அருண் விஜயராணி ஆகியோர் இணைந்து எழுதி அக்கதை வீரகேசரியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது
நாம் 26 எழுத்தாளர்களை இணைத்து எழுதிய வேளை டென்மார்க்கில் இருக்கும் எழுத்தாளர் திரு.ஜீவகுமாரனையும்,ஜேர்மனியிலிருக்கும் திருமதி.கீதராணி பரமானந்தம், திருமதி.நகுலா சிவநாதன் ஆகியோரைக் கேட்டிருந்த வேளை அப்போதிருந்த சூழ்நிலை காரணமாக அவர்களால் இணைந்து கொள்ள முடியவில்லை என்பதையும் இத்தருணத்தில் அறியத்தருகின்றோம்;.நாங்கள் இத்தொடரை தொடங்கிய வேளை புலம்பெயர் எழுத்துத்துறையில் இது முதல்முயற்சி புதுமுயற்சி என்று மட்டுந்தான் குறிப்பிட்டிருந்தோம். எனவே எழுத்தாளர் திரு.சிவலிங்கம் விஜயரூபன் அவர்கள் மேற்:கொண்டது எழுத்துத்துறையில் அவர் நேர்காணலில் கூறியது போல் முதல் முயற்சி அல்ல என்பதும், அவருக்கு முன்னரே நாங்கள் உட்பட பல எழுத்தாளர்கள் அதனை மேற்கொண்டிருந்தார்கள் என்பதை பணிவன்பாக அறியத்தருவதுடன்,வரலாறுகள் தவறான தகவல்கள் பதியப்பட்:டுவிடக்கூடாதே என்பதற்காக இம்முகநூலில் பதிவிடுகிறேன்.அத்துடன் திருமதி.கீதாராணி பரமானந்தம் அவர்கள்,26 எழுத்தாளர்களை இணைத்து எழுதிய நாவல் ஏற்கனவே இணையத்தளங்களில் பிரசுரமாகி உள்ளதை தெரிவித்திருந்தார்.
.அத்துடன் இன்னொரு தகவலாக இந்த நாவலை நூல் வடிவில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இலங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி.நிவேதா உதயராயன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறியத்தருகின்றேன்.
அன்புடன்
ஏலையா க.முருகதாசன்
06.10.20
நாங்கள் 2014 எழுதியதன் பின்னர் யாழ் இணையத்தில் உள்ள பத்து எழுத்தாளர்கள் சேர்ந்து 2015 இல் தொடர் எழுதினோம். யாழ் இணையத்தில் எவர் சென்றும் பார்க்கலாம். கற்பனையில் பொய்கள் நிறைந்த கதை எழுதுவதாக எண்ணி திருசிவலிங்கம் விஜயரூபன் சோற்றுக்குள் முழுப் பூசனிக்காயைப் புதைக்கப் பார்ப்பது அவரின் அறிவீனம். ஆதாரங்கள் விரவிக் கிடக்கும் இக்காலத்திலும் இப்படி சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
திரு. ஏலையா க. முருகதாசனின் எழுத்துக்கள் வலிமையும் ஆழமும் நிறைந்தவை. எதையும் ஆதாரமில்லாமலும் மேம்போக்காகவும்
எழுத மாட்டார். ஒன்று கேட்டால் ஒன்பது சான்றுகளை கொடுப்பவர்.
சான்றுகளை திரட்டுவதென்பது இவருக்கு கைவந்த கலை. கற்பனையாக எதையும் எழுதிவிடலாம். ஆனால் புள்ளி விலரங்களுடன எழுதுவதற்கு தனித்திறமை வேண்டும். அதில் இவர் திறமை கண்டு வியக்கிறேன்.
-சங்கர சுப்பிரமணியன்.
திரு.சங்கரசுப்பிரமணியம் அவர்களுக்கு மிக்க நன்றி.எந்த வரலாறாக இருந்தாலும் அவை உண்மையான ஆதாரங்களுடன் எழுதப்பட வேண்டும் எனபது எனத ஆழமான கருத்தாகும்:
சர்வதேசரீதியில் பரந்து வாழும் சுமார் 26 எழுத்தாளர்கள் இணைந்து பல இணையததளங்களிலும் பலரின் முகஙால்களிலும் வெளிவந்த “விழுதல் என்பது எழுகையே” தொடர் வெளிவந்தது தெரியாமல் பேசும் எழுத்தாளர் அவரை நேர்காணல் செய்பவர் இவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்கள்? இதே தெரியாத இவர்களுக்கு ஏனைய நாவல்கள் வெளிவந்தது எப்படி தெரியப்போகுது.இவர்கள் முகஙால்காரர் எழுதி புழுகி போகட்டும் விட்டுவிடுங்க ஏலையா.
து;ரை.சிவபாலன்