ஐயா, எனக்கு டெல்லி வரை வருவதற்கு பணம் இல்லை. தயவுசெய்து பரிசை போஸ்ட் மூலம் அனுப்பவும்..!
பத்மஶ்ரீ விருது பெற்றவர் அரசுக்கு கடிதம்..!
3 ஜோடி உடைகள், கிழிந்த ரப்பர் செருப்பு, உடைந்த மூக்கு கண்ணாடி, வைப்புத்தொகையாக 732 ரூபாய்க்கு உரிமையாளர் திரு ஹல்தார் நாக்.
இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது..!
கோஸ்லி மொழியின் பிரபல கவிஞர் இவர்.!
இதில் சிறப்பு என்னவென்றால் இதுவரை இவர் எழுதிய கவிதைகள், 20 காவியங்கள் எல்லாம், அவர்கள் வார்த்தைகளிலேயே நினைவு கூர்கிறார்..!
அவர் எழுதிய ‘ஹல்தார் நூலகம்-2’ தொகுப்பு சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.
கசங்கிய உடை, பழுப்பு வேட்டி, துண்டு, பனியன், வெறுங்காலுடன் வாழும் வைரத்தை தான் மோடி அரசு பத்மஸ்ரீக்கு பரிந்துறைத்ததே தவிர டிவி சேனல்களில் தேடப்பட்டு அல்ல..!
ஹல்தார் நாக் :
உடியா நாட்டுப்புற கவிஞர் ஹால்தார் நாக் பற்றி அறிந்தால், நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்..!
ஹல்தார் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தவர்.
10 வயதில் பெற்றோர் இறந்த பிறகு மூன்றாம் வகுப்பில் படிப்பை விட்டுள்ளார்..!
அனாதை வாழ்க்கை வாழ்ந்து, உணவகங்களில் பாத்திரங்களை சுத்தம் செய்யும் வேலையை பல ஆண்டுகள் செய்துள்ளார்.
பின்னர் ஒரு பள்ளியில் சமையலறை பராமரிப்பு வேலை கிடைத்துள்ளது. சில வருடங்களுக்கு பிறகு வங்கியில் இருந்து ரூ. 1000 கடன் வாங்கி பேனா பென்சில் விற்பனை செய்யும் சிறிய கடை வைத்துள்ளார்.! இதுதான் அவருடைய பொருளாதாரம்..!
இப்போது வாருங்கள் அவருடைய இலக்கியச் சிறப்பை பார்ப்போம். .!
ஹல்தார் 1995 உள்ளூர் ஒடியா மொழியில் ′′ ராம்-ஷபாரி ′′ என்ற மதச் சூழல்களைப் பற்றி மக்களிடம் சொல்லத் தொடங்கியுள்ளார். உணர்ச்சிகள் நிறைந்த கவிதைகளை எழுதி மக்கள் மத்தியில் வழங்கியிருக்கிறார். அவர் அறிவாற்றல் மற்றும் எழுத்தாற்றலால் கவரப்பட்ட மக்களால் வெளியுலகத்திற்கு கொண்டுவரப்பட்டார்..!
அவர் கவிதைகளும் காவியங்களும் மிக சிறப்பானவைகள்..!
அவருக்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்காக பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி விருது வழங்கினார்.
அதுமட்டுமல்ல 5 ஆராய்ச்சியாளர்கள் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஹல்தார் நாக் அவர்களின் புத்தகங்களை 5 மாணவர்கள் தங்கள் இலக்கியத்தில் PHD செய்து வருகின்றனர்.
நாம் புத்தகங்களில் இயற்கையை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால்
பத்மஶ்ரீ ஹல்தார் நாக் இயற்கையில் இருந்து புத்தகங்களை தேர்ந்தெடுத்தார். ..!
மதிப்பு மிக்க ஹல்தார் நாக் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..!
வாழ்க வளமுடன்..!
S. K. Babu வின் பதிவு.