கவிஞர் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்!…. ( படைப்பாளி )…. இந்தியா.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப்பணியில் மனிதநேயக் கவிஞர் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்.
1970 முதல் இவர் எழுதிய மரபுக்கவிதைகள் பல குயில்,தீபம்,முல்லைச்சரம்,கலைமகள்,சுந்தர சுகன், கவிதை உறவு, காவியப்பாவை, தமிழ் மூவேந்தர் முரசு என பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளது. பல மெல்லிசைப்பாடல்கள் சென்னை மற்றும் திருச்சி வானொலி நிலையங்கள் ஒலிபரப்பின.
வங்கிப்பணியில் இருக்கும்போதே, கவிகோ அப்துல் ரகுமான் – கவிராத்திரி, சுரதா, இரா.சோதிவாணன் போன்றோர்களின் தலைமையில் கவியரங்க நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
1995 ல் தமிழ் ஹைக்கூ கவிதைகளால் ஈர்க்கப்பட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேலான ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.
1999 ல் இவரது முதல் ஹைக்கூ கவிதைநூல் “மனிதநேயத் துளிகள்“ வெளியிடப்பட்டது. இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு
“The Smile of Humanity “ என்ற நூலும் வெளியானது.
இவரது ஹைக்கூ கவிதைகள் பல கல்லூரி மாணவ மாணவிகளால் ஆய்வுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவரது பெரும்பாலான ஹைக்கூ கவிதைகளை முனைவர் கவிஞர் மித்ரா அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரைகளில் எடுத்தாண்டு உள்ளார்.
இவரது ஹைக்கூ கவிதைகள் பல மலையாளம், தெலுங்கு, பிரஞ்சு, ஹிந்தி மற்றும் ஜப்பானிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவில் இடம்பெறும் ஹைக்கூ கவிதைகளில் கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் ஹைக்கூ கவிதைகளும் இடம்பெற, ஜப்பானில் உள்ள Akita International Haiku என்ற அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
ஹைக்கூ கவிதைகள் மட்டுமின்றி இவரது புதுக்கவிதைகள் பல பாவேந்தரின் அடியொற்றி இயற்றப்பட்டுள்ளதால் 1991 ல் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவொன்றில் பாரதிதாசனாரின் புதல்வர் கவிஞர் மன்னர் மன்னன் அவரின் கரங்களால் “ பாவேந்தர் பட்டயம் “ வழங்கப்பட்டது.
செய்யாறு தமிழ்ச் சங்கத்தில் நிறுவனத் தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றி, ஈரோடு தமிழன்பன் தலைமையில் மாபெரும் ஹைக்கூ கவியரங்கம் , விசுவின் அரட்டை அரங்கம், புஷ்பவனம் குப்புசாமி அனிதா தம்பதியினரின் நாட்டுப்புற நல்லிசைக் கச்சேரி, திண்டுக்கல் ஐ லியோனி பட்டிமன்றம் என பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நிகழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இவருக்கு செய்யாறு தமிழ்ச் சங்கத்தினரால் “மனிதநேயக் கவிஞர் “ எனும் விருது வழங்கப்பட்டது.
டிசம்பர், 2016 ல் வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற கவிஞர் தொடர்ந்து தனது தமிழ்ப் பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளார். தனது முகநூலிலும் பல்வேறு தமிழ் இணையங்களிலும் இவரது கவிதைகள் வந்தவண்ணம் உள்ளன. அண்மையில் நிலாமுற்றம் எனும் தமிழ் இனைய குழுமம் இவருக்கு “ நிலாக் கவிஞர் “ எனும் விருதினை 25.09.2016 அன்று கும்பகோணத்தில் நடந்த விழாவில் வழங்கியது.. இவ்வாண்டு 2016 மித்ரா துளிப்பா (ஹைக்கூ) விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டு கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு விழுப்புரத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 வது இலக்கிய விழாவில் கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் கவிதைத் துறையில் சிறந்து விளங்கும் முகத்தான் “ கவிச்சுடர் “ எனும் விருது கவிமாமணி சேலம் பாலன் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் இவரது படைப்புகள் கணையாழி, இனிய உதயம், கவி ஓவியா, புதுப்புனல், அருவி, பாவையர் மலர், பாலம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து வெளியாகும் தென்றல் மற்றும் பல்வேறு தற்கால தமிழ் இலக்கிய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இவரது “ மனசெல்லாம் …” எனும் இரண்டாவது ஹைக்கூ நூல் சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
மேலும் கவிஞரின் ஆய்வு நூல் “ காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் “மற்றும் நவீன கவிதை நூலொன்றும் எதிர்வரும் மே அல்லது ஜூன் 2017 ல் வெளியிடப்பட உள்ளது. இவரது கவிதைகளை நிலாமுற்றம், தமிழமுது கவிச்சாரல், படைப்பு, டாக்டர் ஜீவாவின் கவிதைப்பூங்கா, தினமணி கவிதைமணி, ஹைக்கூ உலகம், ஈகரை, செய்யுட்கலை சூடிகை மற்றும் பல முகநூல் குழுமங்களில் இடம்பெற்று கவித்தாமரை, கண்ணதாசன் சான்றிதழ் பல பெற்றுள்ளது.
தொடர்புக்கு:
கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்,
மனிதநேயக் கவிஞர்,
சமூக சிந்தனையாளர் ,
நெ. 62, பத்தாவது தெரு,
ஜெயச்சந்திரன் நகர்,
மேடவாக்கம்,
சென்னை: 600100
91-9443259288 http://haikusmile.blogspot.in/ http://haikukavithaigal.blogspot.in/ http://kavithaivaasal.blogspot.in/ https://www.facebook.com/kavanurkalyanasundaram
பெரும் மதிப்புமிகு கவிச்சுடர் கல்யாணசுந்தரம் அவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.