முகநூல்

இணையத்தளமொன்றில் ஒரு செய்தியை வாசித்தேன்!…. ஏலையா முருகதாசன்.

!

அந்தச் செய்தி இதுதான் .திரு.மாவை சேனாதிராசாவுக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தை தனது தந்தைக்கே கொடுக்க வேண்டும் என்று அவரின் மகனும் இன்னும் அவரின் ஆதரவாளர்களும் நிர்ப்பந்தமான கோருதலை வைப்பதாக அந்தச் செய்தி இருந்தது.
மூன்று நாட்களுக்கு முந்தி திரு.மாவை சேனாதிராசா அவர்கள் வாழ்நாள் முழுவதும் இனப்பற்றுடன் தமிழர் உரிமைக்காக உழைத்தவர் எனபதைக் கோடிட்டுக் காட்டி அவர் நாடாளுமன்றத்துக்கு போவதை மக்கள் நிராகரித்துள்ளார்களே தவிர தமிழரசுக் கட்சியிலிருநது அவரை நிராகரிக்கவில்லை என்பதை பதவிட்டிருநதேன்.
தமிழத் தேசியக் கூட்டமைப்பிலாகட்டும் வேறு று தமிழர் சார்ந்த கட்சியிலாகட்டும் அவர்கள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நாடாளுமன்றத்தில் தாம் செய்ய வேண்டிய அரசியலை சரியாகச் செய்கிறார்களா என்பதையும் அதுவல்லாது பொதுநிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கு கொள்ளும் போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் அவர்களின் உடல்நிலை சார்ந்த துடியாட்டம் கம்பீரம் எவ்வாறு இருக்கின்றது எனபதையும் மக்கள் கணக்கெடுக்கிறார்கள்.
அதுவுமல்லாமல் காலம் காலமாக தாயகத்திலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அவர்கள் வரும்போது ஒரே விசயத்தையே பேசிக் கொள்வதையும் மக்கள் கவனிக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தக் கவனிப்பு மீதான மக்களின் சிந்தனை யாரை .இனி நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற முடிவுக்கு மக்களை வர வைக்கின்றது.
திரு.மாவை சேனாதிராசா அவர்களின் உழைப்பு அளப்பரியது என்பதை எவருமே நிராகரிக்க முடியாது.
ஆனால் அவரின் வயதடிபபடையில் அவர் இனி ஆறுதலாக எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் மகிழ்ச்சியாக ஒரு அரசியல் மூதறிஞராக தமிழரசுக் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்பதற்கமைய அவரை நாடாளுமன்றத்துக்க அனுப்புவதை மக்கள் தவிர்த்திருக்கிறார்கள்.
திரு.சம்பநதர் அவர்கள் திரு.மாவை சேனாதிராசா அவர்கள் திரு.விக்னேசுவரன் அவர்கள் கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்களாக இருந்த போதும் திரு.விக்னேசுவரன் அவர்கள் இதுவரை நாடாளுமன்றத்திற்கு செல்லாதவர் என்பதுடன் அவர் ஏதோ சாதித்துக் காட்டுவதாக இப்படிப் போகலாம் அப்படிப் போகலாம் எனச் சொல்கிறாரே அனுப்பித்தான் பார்ப்போமே எனத் தெரிவு செய்து உள்ளார்கள் .
வடக்கு மாகாண சபை முதல்வராக இருந்தும் எதையுமே செய்யாதவர் என்று தெரிந்தும் அவரை அனுப்பாது விட்டால் அவரே ” அனுப்பியிருந்தால் சாதித்துக் காட்டியிருப்பேன் என்று அவர் சொல்வதற்கு மக்கள் இடம் கொடுக்காதவாறு அனுப்பியிருக்கிறார்கள். அவரால் எதுவுமே செய்ய முடியாவிட்டால் மக்கள் கேள்வி கேட்கவும் தயாராகவே இருக்கிறார்கள்.
எனது பதிவில் தேசியப்பட்டியல் ஆசனத்தை திருமதி.இர.சசிகலா அவர்களுக்கு கொடுப்பது நல்லது எனப் பதவிட்டிருநதேன்.அவருக்கு கிடைக்க வழிவகுப்பதே தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முடிவாக இருப்பதற்கு கிழக்கிலிருந்து ஒருவரை அதற்கு தேர்வு செய்ய வேண்டுமென்ற பலமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கிளயுள்ளன.
இது ஒருபுறம் இருக்க அனைத்து இலங்கைக்கும் பொதுவான கருத்தாக தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை நாடாளுமன்றத்துக்கு தேசியப்பட்டியல் ஆசன வழியாக அனுப்புவது சனநாயகத் தவறு என்ற கருத்து வலுப்பெறறு வருகின்றது .அது தமிழருக்கும் பொருந்தும்.
பல ஆண்டுகளாக நாடாளுமன்றப் பிரதிநித்தித்துவத்தை வகித்த திரு.மாவை சேனாதிராசா அவர்கள் அவர் பெற்ற தோல்வியின் அடிப்படையில் போதுமென்ற மனநிலையில் அவர் தன்னை அதறகான ஒருவராக எந்த நிர்பந்த நிலையிலும் சலனப்படடுப் போகாமல் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு தன்னைத் தயார்படுத்தாமல் இருப்பதே நற்பண்பாகும்.
அவரின் மகனுக்கும் தெரிய வேண்டும் தனது அப்பா பலமுறை நாடாளுமன்றம் சென்றவர்தானே என்பது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இளந்தலைமுறையினர் வேணுமெனடு பிரச்சாரம் மேற்கொணட திரு.மாவை சேனாதிராசா அவர்களின் மகன் தனது தநதையை எநதத் தலைமுறையென்று தெரியாமலா இருக்கிறார்.
திரு.மாவை சேனாதிராசா அவர்களைத் தவிர்த்து கிழக்கிலா வடக்கிலா அந்த ஒரேயொரு ஆசனம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.