-
கருத்துச் சொல்ல உரிமை உண்டு. ஏற்பதும் விடுவதும் எங்கள் உரிமைஉங்கு தலித் மக்களுக்கு உங்கள் நாட்டவர் பல கொடுமைகள் செய்கிறார்கள்.போனகிழமை 4 தலித்துக்களை குழி துப்பரவு செய்ய கட்டாயப்படுத்தியதால் நாலு நபர்களும் மூச்சுத்திணறி இறந்து விட்டார்கள்.அதை கவனியுங்கள்.இலங்கையர்களை விட தமிழ் நாட்டுத்தலைவர்கள் பலர் இலங்கயருக்காக உழைப்பவர்கள் .இந்தியாவின் அனுசரணை இன்றி எவரும் ஒன்றும் செய்ய இயலாது முருகதாசன் அய்யா நீங்கள் வெளி நாட்டு சம்பந்தி .உங்களின் பிள்ளைகளிற்கு நாட்டுப் பற்றிருந்தால் யாராவது உறவுப்பாலம் அமைத்திருக்கலாம் .வெளி நாடுத் தமிழர்கள் காணிகளை விற்று படிப்படியாக தங்கள் அடையாளங்களை தொலைத்து கொண்டு தான் இருக்கிறார்கள் .லண்டன் வாழ் தமிழர் இலங்கையில் உள்ள சிங்கள உறவுகளுக்கு காணிகளை பகிர்ந்து அளித்த சம்பவங்களும் உண்டு .அடிப்படைத்தேவை அற்ற ஏதிலிகள் இலங்கையில் அன்றாடம் காச்சிகளாக இருக்கிறார்கள் .வெளி நாட்டில் வாழ்பவர்கள் இலங்கையில் பல தொண்டுக்களை செய்கிறார்கள் .வெளி நாட்டில் வாழும் பலர் இலங்கையை ஒரு ஊர் உலாத் தளமாகவே நினைக்கிரர்ர்கள் .சுவிஸ் வாழ் தமிழர்கள் sk நாதன் போன்றோர் போதனாவைத்திய சாலைக்கு உபகரணங்களை வழங்கியிருக்கிறார்கள் .வணக்கம் ibc இலங்கையில் சேவை செய்கிறது .பல சமூக நிறுவனங்கள் சேவை செய்கின்றன கம்பன் கழகம் thiru நந்த குமார் அவுஸ்திரேலியா வில் இருந்து பல தொண்டுகளை செய்கிறார் .இப்படி தொண்டு செய்யும் பலரின் விபரங்கள் தெரியும் .இவர்கள் மனிதர்கள் .முருகதாசன் ஈனவும் விடாமல் நக்கவும் விடாமல் இருக்காதீர்கள் .வார்த்தைகளை அளந்து பேசலாம் .உங்களின் மேல் இவளுக்கு பற்று உண்டு .கெளதமனை தூற்றாதீர்கள்நீங்க இதில் எப்படி சொல்லுரியலோ அதே மாதிரி தான்.தேவையான பதில்.சரியான பதிலை கொடுத்து விட்டீர்கள் எங்கள் அரசியலை இவங்கள் சாக்கடையாக்க பார்க்கிறாங்கள்உலகத்தமிழர்கள் ஒன்றானால் மட்டுமே கையில் கிடைக்கும் விடிவு ,ஒருத்தன் கொடு என்கிறான் ஒருவன் கொடுக்காதே என்கிறான் ..முதலில் ஒற்றுமைப் படுங்கோ
-
கௌதமன் எனும் ஆள்மாறாட்ட ஆரோக்கியராஜ்.தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு ஆங்கிலப் பெயர், அங்கு பிள்ளைகள் தமிழில் பேசினால் தண்டப்பணம், பொட்டு திருநீறு அணியத் தடை,தமிழ் பெயர் வைத்திருப்போருக்கு அதிக கட்டணம் தேவைப்பட்டால் அனுமதியும் மறுப்பு, இந்துப் பிள்ளை ஏசப்பாவை ஏற்று கிறிஸ்தவராக மாறினால் கல்விக்கட்டணம் இலவசம், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட மாட்டார்கள் இது எதனையும் இந்தமாதிரி ஆட்கள் கண்ணுக்கும் தெரியாது, காதுக்கும் எட்டாது யாரும் அறியப்படுத்தினாலும் தட்டி கேட்க மாட்டார்கள்…இதில் பழனி கோயிலில் தமிழில் குடமுழுக்கு பண்ணவில்லை…தஞ்சையில் தமிழில் குடமுழுக்கு என்று வேஷதாரி கோசம் போட வந்த அன்னிய மதக் கைக்கூலிகளில் ஒருத்தர்தான் இந்த கௌதமன் எனும் ஆரோக்கியராஜ் . ஏன் இந்த வேஷம்….இவர்தானே எங்கப்பன் முருகனையும் தென்னாடுடைய சிவனையும் வேண்டாம் என்று யேசப்பாதான் எங்கப்பா என்று அற்ப சலுகைக்கு ஆசைப்பட்டு போய் அங்கு போயும் கூட தனது வீட்டு மளிகைச் சாமான்கூட வாங்கப் பணம் இல்லாததால் ஓசிச் சோத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய எஜமானர்கள் மறைந்திருந்து போதிப்பதை எங்களுக்கு போதிக்கும் கைக்குலிக்கு வேலைசெய்யும் ஆரோக்கியராஜ் க்கு ஈழத்தில் என்ன வேலை?ஈழத்தமிழருக்காய் எத்தவித சுயநலமும் அற்றுக் குரல்கொடுத்த ஒரு உத்தமர் அவர் பெயர் ஐயா நெடுமாறன் மற்றும்போராட்டத்தில் நேரடிப் பங்கெடுத்து பெயர் சொல்ல முடியாது உயிர்நீத்த காவல் தெய்வங்கள் மற்றும் சிறையில் வாழும் தியாகிகள்.இந்தக்கருத்து ஏற்புடையதல்ல. கருத்துக்கூறும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஒருவருடைய கருத்தை வைத்துக்கொண்டு நாங்கள் வேறு நீங்கள் வேறு என்பது சரியல்ல. வேறு எந்த நாட்டவன்தான் எங்களுக்காக குரல் கொடுத்தான். எமக்குள்ளேயும் ஒரு நிலையான கருத்தில்லை. எங்கும் பிரிவுகள் பிளவுகள் அற்ப பொறுபுகளுக்காகவும் பதிவிகளுக்காகவும் ஒருவரை ஒருவர் இழுத்து விழுத்தி சுகம் காணும் இழிநிலை. தொடர்ந்து சிங்கள அரசியலாளர்களால் தமிழர்கள் துன்பப்பட்டும் துயரப்பட்டும் அடிமை நிலையில் இருந்தும் எங்களால் ஒரு நிலையில் ஒரு கொள்கைக்குள் ஒன்றாக முடியாதுள்ளது. தமிழகத்தில் எங்கோ ஒரு சில நல்லவர்கள் எமக்காக குரல் கொடுப்பதை வேதனைக்கொள்ளச் செய்யவதாக கருத்துகள் வந்தால் அது முறையா. அண்ணா தேசியம் தேசம் என்று வெறும் வார்த்தை பேசுபவர்களை இனம் கண்டு அதை வெளிக்கொணர வேண்டும். மற்றும்படி அது அவருடைய கருத்து என்று விட்டுவிட்டுப் போகவேண்டியதே நல்லது.——– ————– —————- ——————–ஏலையா க.முருகதாசன்.
அன்று திரு.S.J.V.செல்வநாயகம் அவர்களை வேதக்காரன் என்ற காரணத்துக்காக எதிர்த்தார்களோ அதே காரணத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு திரு.சம்பந்தர் இராசவரோதயம் அவர்களுக்குப் பிறகு திரு.சுமநதிரன் அவர்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்புக்குப் தலைமை தாங்கிடுவாரோ என்ற பயமே அவரைத் தோல்வியடையச் செய்ய எடுக்கும் நடவடிக்கையாகும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இளந்தலைமுறையினர் வரவேண்டும் என்பது நியாயமானதே.
தமிழத் தேசியக் கூட்டமைப்பிலிருப்பவர்களில் வயது கூடினவர்கள் என்று பார்த்தால் திரு.இரா.சம்பந்தர் அவர்களும் திரு.மாவை சேனாதிராசா அவர்களுமே.
ஆனால் ஒரு கண்ணை மூடிக் கொண்டு ஒரு கண்ணால் பார்ப்பது போலவும் கோடு போட்டு இவர்கள் தேவையில்லை என்பதற்குள் கோடு வளைந்து சென்று திரு.மாவை சேனாதிராசா அவர்களை இளநதலைமுறையினராகக் காட்ட முயற்சிப்பதிலிருந்தே தவறான அணுகுமுறைப் பார்வை தெரிகிறது..
திரு.சுமந்திரன் அவர்களின் வெளிப்படைத் தன்மையையும் நேர்மையையும் பாராட்டலாம்.
எங்களால் எது முடியுமோ அதை எம்மக்களுக்குச் செய்வோம் என்பதும்
போர்க்குற்ற விசாரணையை ஐக்கிநாடுகள் சபைக்கு கொண்டு போக மாட்டோம் என்று சொன்னதையும் நான் வன்முறையை ஆதரிக்கவில்லை என்று சொன்னதையும்
சிங்கள மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே எமது பிரச்சினையை சொல்ல வேண்டுமென்றதையும்
என்னால் இதுதான் முடியும் என்ற ஒரு அரசியல்வாதி எதைச் செய்ய முடியுமோ அதைச் சொல்வதுதான் அரசியல் அழகு என்பதை நேர்மையாகச் சொன்னதற்காக அவரைப் பாராட்டலாம்..
சுமந்திரனை எதிர்ப்பவர்கள் என்னவிதமான அரசியல் இயல்பைக் கற்று வருகிறார்கள் என்பது புரியவில்லை.
இதுவரையில் எதுவுமே நடக்கவில்லை என்பது போல கழுவின மீனிலை நழுவின மீன மாதிரி கண்டும் காணாமல் போவது எந்த விதத்தில் நியாயம் என்பதும் தெரியவில்லை.
தமிழ்மக்களுக்கு இலங்கை அரசியய் சூழ்நிலை புரிந்திருந்தாலும் எதிர்ப்பரசியல்வாதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவுமே செய்யவில்லையென்று சொல்வது மிகத் தவறு.
நூறு வீத எதிர்பார்ப்பில் 10 வீதத்தையாவது தமிழத் தேசியக் கூட்டமைப்பு செய்யவில்லையா .
பலரின் காணிகள் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்து விடுவிக்கப்படவில்லையா.
சரி ஒரு பரப்புக் காணியாவது விடுவிக்கப்படவில்லையா .
ஒரு விமர்சனத்தை வைக்கும் போது இது நடந்திருக்கு இது நடக்கவில்லையென்று சொல்வதுதானே நேர்மையான விமர்சனம்.
ஒரு நாடாளுமன்றம் என்றால் அங்கே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்களவர் தமிழர் என்ற பேதமில்லாமல் சிரித்துப் பழகக்கூடாது.தேநீர் விருந்தில் கலந்து கொள்ளக்கூடாதா?.
நாம் எந்த அரசியல் நாகரீகத்தை கற்று வைத்திருக்கிறோம்.
இலங்கை அரசிற்கு புலிகள் தேவையாகவிருக்கின்றது. தமிழ் அரசியல்வாதிகள் புலிகளை முன்னிறுத்தி அரசியல் செய்வதையும் தமிழர்கள் எந்தக் காலத்திலுமே புலிகளின் பெயரைச் சொல்லாமல் அரசியல் செய்யவே மாட்டார்கள் என்பதை நமுட்டுச சிரிப்புடன் கவனித்து புலிகளால் முழுத் தேசத்திற்குமே ஆபத்து என்று சிங்கள மக்களை மூளைச்சலவை செய்து தேர்தலில் வெற்றிவாகைசூட முயற்சிக்கிறார்கள்.அது அவர்களின் அரசியலை இலகுவாக்கின்றது.
எமது பக்கத்தில் பார்த்தால் புலிகளை வைத்து மறறவர்களை தேசிய உணர்வற்றவர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
புலிகளை மலினப்படுத்தி மக்களை கற்பனை மயப்படுத்தி அவர்களை இருதலைக் கொள்ளி எறும்பாக்கி அவர்களை குழப்பி குழம்பின குட்டையிலை மீன பிடிக்க முயற்சிக்கிறார்கள்.
இதற்கிடையிலை அபிவிருத்தி ஒன்றும் நடக்கவில்லையென்று தமிழத் தேசியக் கூட்டமைப்பைக் குறை சொல்கிறார்கள். வடக்கு மாகாண சபையை அபிவிருத்தி செய்ய வேண்டியது வடக்கு மாகாண சபையின் முதல்வர் உட்பட உறுப்பினர்களின் பொறுப்பு .
ஐந்து வருடங்களாக 600 அறிக்கைகளை முதல்வர் வாசித்ததுதான் கணட மிச்சம்.தன்னால் எதுவும் முடியவில்லையென்றால் முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகியிருக்க வேண்டும் அதை அவர் செய்யவில்லை.முதல்வர் நாற்காலியை அவர் விடவும் இல்லை.
ஒரு நீதிபதியாகவிருந்தவர் பெரும் கல்விமான் மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவர்.இலங்கைப் பரப்பளவில் இனங்களுக்கிடையில் சமூகங்களக்கிடையில் என்னென்ன நடைபெறுகிறது.தமிழரின் உரிமைப் பிரச்சனை சூடேறியதையும் மும்மொழிப் பத்திரிகைளில் வெளிவந்த செய்திகளைப் படிக்காதவர் போலவும் அதுவும் சம்பந்தி திரு.வாசுதேவநாணயக்காரவின் தமிழர் எதரிப்பு அரசியல் தெரியாதவர் போலவும் இப்பொழுதுதான் தமிழரின் அவலங்களை காண்கிறேன் என்று சொன்னது நம்பக்கூடியது மாதிரியா இருக்கின்றது.சொல்லுவார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி என்ன என்பது போலத்தான் இது இருக்கிறது.
திரு.சுமந்திரன் தனது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டு உங்களுக்கு விருப்பமில்லையென்றால் என்னைத் தோற்கடியுங்கள் என்று துணிச்சலாகச் சொல்கிறார்.
தேர்தலில் போட்டியிடும் திரு.கயேந்திரான் குமார் பொன்னம்பளத்தின் அணியாகட்டும் மாண்புமிகு முனனாள் நீதியரசரும் முன்னாள் முதல்வருமாகிய திரு.சி.வி.விக்கினேசுவரன் அவர்களாகட்டும் இதுதான் எங்கடை கொள்கை விரும்பினால் வாக்குப் போடுங்கள் என்று சொல்லும் துணிச்சல் இருக்கின்றதா இல்லையே.
இன்றைய சமகால அரசியல் நிலவரத்தின்படி சாத்தியமான அரசியலையே செய்ய முடியும் என்பது திரு.சுமந்திரனை எதிர்ப்பவர்களுக்கும் தெரியும் திரு.கயேந்திரன் குமார் பொன்னம்பலம் அணியினருக்கும் தெரியும் முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் அணியினருக்கும் தெரியும்.ஆனால் தமிழ்மக்களை உசுப்பேத்துவதற்காக எதையோவெல்லாம் சொல்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் பதவியேற்றவுடன் சிங்கள மக்களுக்குள் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று சொன்னவர் – செய்தாரா? இல்லையே.
வயது மூப்புக் காரணமாக தமிழத் தேசியக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்க தகுதியற்றவரெனின் வயதான திரு.மாவை சேனாதிராசாவும் வயதடிப்படையில் தமிழரசுக் கட்சிக்கு தலைமை தாங்க தகுதியற்றவரே .
தமிழரசக் கட்சிக்கு மும்மொழியிலும் புலமைமிக்க அரசியல் விஞ்ஞானம் உட்பட பொருளாதாரம் – குடிமை – மானிடவியல் – சமூகவியல் – இனங்கள் பற்றிய அறிவியல் – உள்ள ஒரு பல்கலைக் கழக முதுமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்த இளைஞரைத் தெரிவு செய்யுங்களேன்.
தமிழ்த் தேசிய்க் கூட்மைப்பை அழிக்க நினைப்பது எளிய உதாரணமான நுனிக் கொப்பிலிருந்து அடிமரத்தை வெட்டுவதற்குச் சமன்.
-
-
-
-