முகநூல்
கிணறு!… படித்ததில் பிடித்தது.
கா்நாடககாரா் ஒருவரிடம்,
தமிழர் ஒருவர் கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார்.
மறுநாள் கடைத்தெருவில் தமிழர் போய்க் கொண்டிருந்த போது கர்நாடககாரா்”அவரை சந்தித்தார். “அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான்.
அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
அப்ப தமிழர் தயங்காமல் “நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் தண்ணீர் வேண்டாம். ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்” என்றாரே பார்க்கலாம்.