Featureமுகநூல்

தேர்தலுக்கான ஆரம்பமாக இருக்குமோ?

12000 போராளிகளை விடுதலை செய்த மகிந்தவுக்கு 100 பேரை விடுவிப்பது பெரிய விடயம் இல்லை!

12000 போராளிகளை விடுதலை செய்த மகிந்தவுக்கு 100 பேரை விடுவிப்பது பெரிய விடயம் இல்லை என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்

வவுனியா சிவபுரம் கிராமத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் நீண்ட நெடிய ஒரு போரை கடந்து வந்தவர்கள். இந்த போரில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான போராளிகள் மடிந்திருக்கிறார்கள்.

இதற்குமப்பால் இறுதிக்கட்ட யுத்தத்தில் தங்களுடைய கணவன்மார் பிள்ளைகளை கையெழுத்து போட்டு ஓமந்தை மற்றும் வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் கிட்டத்தட்ட இருபத்து மூவாயிரம் பேரை ஒப்படைத்தார்கள்.

இன்று பதினொரு வருடமாக தம் உறவுகள் உயிரோட இருக்கிறார்களா? இல்லையா? என்று தெரியாமல் வவுனியாவில் ஒரு கொட்டகை அமைத்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கௌரவமாகவும், சுதந்தரமாகவும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று தமிழ் இனத்திற்காக ஆயுதம் தூக்கி சுதந்திரத்திற்காக போராடின இளைஞர்கள் சிறையில் 11 தொடக்கம் 27 வருடமாக வாடி கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இப்படிப்பட்ட பாரிய இழப்பை சந்தித்து வந்த இனம்தான் நாங்கள்.

ஆகவே இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்ற எத்தனை வேட்பாளர்களுக்கு எங்கள் இனத்தின் வலி தெரியும். வேட்பாளர்கள் எல்லோரும் கிராம மக்களுக்கு ஏதாவது கொடுத்துவிட்டால் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நினைக்கின்றார்கள். எங்கள் வாக்குகளின் பெறுமதி என்ன?

இந்த தேர்தலில் ஆறு பேர் தான் தெரிவு செய்யப்பட போகிறோம். ஆனால் 405 பேர் போட்டியிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் எங்கள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியில் இருப்பவர்களுக்கு எப்படி பதவிகள், பட்டங்களை, அந்தஸ்தை வழங்கலாம்? இப்படித்தான் சிந்தித்தார்களே தவிர தமிழ் மக்களுடைய பிரச்சினை எதுவுமே தெரியவில்லை.

செல்வநாயகம் , அமுர்தலிங்கம் ஐயாவின் ஆட்சிகாலத்தில் கூட யாருக்குமே இப்படி ஒரு தொடர்ச்சியான சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் கொடுக்கவில்லை.

ஆனால் 20 வருடகாலமாக சம்மந்தன் ஐயாவுக்கு தமிழ் மக்கள் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஆகவே அவர் தோற்றுப் போன ஒரு கட்சி முதுகெலும்பில்லாத அந்த கட்சியில் இருக்கிறவர்களுக்கும் தொடர்ந்து வாக்களிக்க முடியாது என்பதை நீங்கள் இந்த தேர்தலிலே காட்ட வேண்டும்.

அதனால் தான் ஒரு நீதியரசராக இருந்த விக்னேஷ்வரன் ஐயா அவர்கள் தலைமையின் கீழ் இருக்கக்கூடிய எங்களுடைய கட்சிக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இந்த தேர்தலுக்கு பிற்பாடு இவர்கள் விட்ட அதே தவறை நாங்க விடப்போவதில்லை.

தேர்தல் முடிந்த பின்பாக அரசாங்கத்தோடு வெளிப்படையாக பேச்சு நடத்துவோம். கூட்டமைப்பை போல் பின்கதவால் பேசமாட்டோம்.

போரால் பாதிக்கப்பட்டு இருக்கிறவர்களுக்கு நீதியை பெற்று கொடுப்பது தான் எங்களுடைய முதலாவது வேலை. சிறையில் இருக்கின்றவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுக்கவேண்டும்.

இதே மகிந்த ராஜபக்ஷ தான் 12000 முன்னாள் போராளிகளிற்கு புனர்வாழ்வு அளித்து ஒரு வருடத்தில் விடுதலை செய்தார்.

மைத்திரிபால சிறிசேன, ரணில், சம்பந்தன் ஜயாவும் நான்கு வருடமாக 100 பேரை விடுதலை செய்யாமல் இருக்கின்றார்கள்.

12000 பேரை விடுதலை செய்த மகிந்த ராஜபக்ஷவுக்கு 100 பேரை விடுவிப்பது பெரிய விடயம் இல்லை.

இவற்றுக்காகவே நீதியரசருடைய தலைமையிலே நாங்கள் நேர்மையாக இந்த பணிகளை செய்ய போகிறோம் அதற்கு உங்களுடைய அங்கீகாரம் எங்களுக்கு தேவை.

எதையுமே மக்களுக்காக செய்யாதவர்களுக்கு நாங்கள் ஏன் ஆணையை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

மதன் சிவா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.