வீழ்வேன் என்று நினைத்தாயோ!
வாழ்க்கை என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள ஒரு இடைவெளிதான். இந்த இடைவெளியில் அந்த வாழக்கையை மகிழ்ச்சியாக வாழப்பாருங்கள்.அதேநேரம் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தப் பாருங்கள். வாழும் காலத்தின் ஒவ்வொரு தருணத்தையும் இன்பமாக அனுபவியுங்கள்.
இங்கிருந்து எவரும் எதையும் கொண்டுபோகப் போவதில்லை. “காதற்றஊசியும் வாராது காணும் கடைவழிக்கே” என்றார் பட்டினத்தார். உலகத்தையே வென்ற மகா வீரன் அலக்ஸ்சாந்தர் தான் இறந்தபின் தனது உடலை பிரேதப்பெட்டியில் கிடத்தி இரண்டு கைகளையும் வெளியில் நீட்டி வைத்துக்கொண்டு செல்லுங்கள் என்றான். ஏனென்றால் தான் தன்னோடு எதையும் கொண்டுபோகப்போவதில்லை என்பதை அறிந்துகொண்டேன் என்றான். சாதி,சமயம், தாழ்ந்தவன்,உயர்ந்தவன், படித்தவன்,படிக்காதவன்,ஆற்றல்படைத்தவன், அறிவுமிக்கவன் என்பனவற்றுக்கெல்லாம் தாண்டி அன்பு என்ற ஒன்று இருக்கிறது. அன்புதான் இன்ப ஊற்று என்று சொல்வார்கள். அன்பே சிவம். அன்பே உலகமகா சக்தி.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.” என்று கூறுகிறது தமிழ்மறை. அன்போடு இருந்து வாழ்வை அனுபவிப்போம்.
நம்மை நாமே நம்புவோம். நம்கைகள் நமக்கு மட்டுமல்ல அவை பிறருக்கும் உதவட்டும்.
“தேடிச் சோறு நிதம் தின்று-பல
சின்னஞ் சிறுகதைகள்பேசி -மனம்
வாடி துன்பமிக உழன்று-பிறர்
வாட பலசெயல்கள் செய்து-நரை
கூடி கிழப்பருவமெய்தி-கொடுங்
கூற்றுக்கு இரையாகிப் பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப்போலே -நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ
நின்னை சில வரங்கள் கேட்பேன்-அவை
நேரேஇன்றெனக்கு தருவாய்-என்றன்
முன்னை தீயவினைப்பயன்கள் -இன்னும்
மூளாதழித்திடுதல் வேண்டும்-இனி
என்னை புதியவுயிராக்கி-எனக்
கேதும் கவலையறச் செய்து-மதி
தன்னை மிகத்தெளிவு செய்து-என்றும்
சந்தோசம் கொண்டிருக்கச்செய்வாய்.”
Koviloor Selvarajan