Featureமுகநூல்

வேதனையுடன் யதார்த்தவாதி வெகுஜனவிரோதி!

புலிகள் போராட்டத்திற்கு வீட்டுக்கு ஒரு ஆள் வரவேண்டும் என்றவுடன் ஒடியவர்கள்….

புலிகள் வவுனியாவை கடக்க வயது கட்டுப்பாடு போட்டபோது ஆள்பிணை வைத்து தப்பியோடி அபராதம் கட்டியவர்கள்….

வவுனியாவில் பாஸ் காசு ….கொழும்பு போக காசு …..கொழும்பில் பொலிஸ் ரீப்போட் காசு…. லொஜ் காசு…. இப்படி, எப்படி எல்லாம் காசை கொடுக்க முடியுமோ அப்படி எல்லாம் செலவழித்து ஏஜன்சிகாரர் மூலம் வெளி நாட்டுக்கு தப்பி Sorry புலம்பெயர்ந்து போனவர்கள்….

இப்ப இவர்கள் தான் பெரும் புலிகள் …

கேட்டால் பிரபாகரனுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என்பார்கள். புலிகளால் செலவழித்த காசை புலி பெயரில் பல மடங்காக உழைத்தார்கள்.

ஆனால், இங்கு களத்தில் நின்றவர்கள் தமது உயிரை கொடுத்து போராடினார்கள். நல்லது கெட்டது தெரியாமல் தலைமைகள் முடிவு என்ன …? இந்த போராட்டத்திற்கு என்ன தீர்வு….? இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமா…. ?

ஏன் பேச்சுவார்த்தைகள் குழம்புகிறது….? என்று எதுவும் அறியாமலேயே இறந்தார்கள்.

ஆனால், இன்று 2009 முதல் புலிக்கும் போராட்டத்திற்கும் பயந்து ஒடியவர்கள். புலிகளை பெயரளவில் வாழவைத்து கல்லா கட்டுகிறார்கள். தம் குடும்பத்தை செல்வ செழிப்புடன் பிள்ளைகளுக்கு தமிழே தெரியாமல் வேறு மொழி படிப்பித்து வெளி நாட்டு மோகத்தில் திளைக்கிறார்கள்.

களத்தில் நின்றவர்கள் இன்று இங்கு ஊனமாகவும் விதவைகளாகவும் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கை எந்தும் நிலையில்…. தமிழுக்காக போராடி தமிழை பிள்ளைகளுக்கு படிப்பிக்க வசதி இல்லாமல் வாழ்கிறார்கள்…. முன்னாள் போராளி எனும் பட்டப்பெயருடன்…

தப்பி ஒடியவர்கள் வெளி நாட்டில் புலிகளுக்கான நிகழ்ச்சிகள் …. மாவீரர் தின கொண்டாட்டம் ….எல்லாம் கோடி கணக்கில் செலவு செய்து நடத்துகிறார்கள்…. வாழ்த்துக்கள்…..

பிரபாகரன் பெயரில் வியாபாரம் அமோகமாக நடை பெறுகிறது….

இந்த முறை லண்டனில் தமிழ் வரலாற்று மையம் என்று இடம் பெற்ற கொண்டாட்டம் …

அந்த நிகழ்வுக்கு போறவர்கள் அங்கு விற்பனை செய்யும் பூ விளக்கு தொடக்கம் குடிக்கிற தண்ணீர் வரை வாங்க வேண்டும்…இதுக்கு என்று ஒரு குழு வேறு .. எப்படி எல்லாம் உழைக்கிறார்கள். இறந்தவர்களை வைத்து….

இது புலத்தில், புலன்பெயர்ந்த புலி வியாபாரிகளுக்கு மட்டுமே மற்றவர்கள். தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்.

வேதனையுடன்

யதார்த்தவாதி வெகுஜனவிரோதி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.