அம்பாறை மாவட்ட கரையோர கலைஞர்களுக்கு காசோலை வழங்கி வைப்பு!… செ.துஜியந்தன்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர்களுக்கான நலனோம்பு திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கான வருடாந்த உதவித் தொகை வழங்கும் நிகழ்வ கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இன்று(03) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டார். அத்துடன் மாவட்ட காலாசார உத்தியோகத்தர் ரி.எம்.ரின்ஸான், பிரதேச கலாசார உத்தியோகத்தர் ரி.பிரபாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.தயாஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பரிவில் தெரிவு செய்யப்பட்ட 07 கலைஞர்களுக்கான 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசனால் வழங்கி வைக்கப்ட்டது.
அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 74 கiலு!ர்களுக்கான காசோலைகள் தொடர்ச்சியாக பிரதேச செயலகங்களுடாக வழங்கப்பட்டுவருவதாகவும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் உள்ள 12 பிரதேச செயலகப்பிரிவுகளில் இருந்தும் 54 தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.ரின்ஸான் தெரிவித்தார்.