ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப்படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார்.
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.