பிரிட்டானியாவில் கொரோனா COVID 19
தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும்.நடவடிக்கையும்.பொருளாதார தாக்கத்தாலும்.குடும்பத்தில்.ஏற்ப்பட்ட சண்டை இரண்டு குஞ்சுகள் பலியானது.
வேதனை தருகிறது.🌹🌹
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
° கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக மனைவி. கணவனை வேலைக்கு செல்லவேண்டாம் என்று கூறி, மனைவி அடிக்கடி சண்டை பிடித்த வந்துள்ளார் ஒரு சந்தர்ப்பத்தில். தாங்க முடியாமல் வெறித்தனமாக மாறி தனது 2 பிள்ளைகளையும் கத்தியால் குத்திவிட்டு,தன்னையும் கத்தியால் காயப்படுத்திக் கொண்டுள்ளார் 40 வயது தமிழ் குடும்பத்தலைவர்.
° ஞாயிற்றுக்கிழமை லண்டன் இல்பேட்டில் உள்ள அல்பரோ வீதியில், நடந்த கொலை சம்பவம் பற்றி எல்லோரும் அறிந்திருப்போம். விநாயகா கடைக்கு மேலே வாடகைக்கு இருந்த தம்பதிகளுக்கு.இரண்டு பிள்ளைகள் 1 வயதில் பெண் குழந்தை மற்றும் 3 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளார்கள். மனைவியின் சகோதரர் ஒருவர் கடந்த நாள்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்ததால், மனைவி மிகவும் பாதிப்படைந்து இருந்துள்ளார்.இவரின் மனைவி இதேவேளை 2 மாதமாக நிலவி வரும் லாக் டவுன் காரணமாக வேலைக்கு செல்லாமல், வீட்டில் பணமும் இல்லாமல் கஷ்டத்தில் கணவர் இருந்துள்ளார். வீட்டை எப்படி கொண்டு நடத்துவது என்ற கஷ்டத்தில் அவர் இருந்துள்ளார். இன் நிலையில் மனைவி அடிக்கடி கணவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி, வாய் தர்கத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
° இது நேற்றைய தினம் முற்றி, பெரும் சண்டையாக வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கணவன் பிள்ளைகளை கத்தியால் குத்தி. தன்னையும் மாய்த்துக் கொள்ள முனைந்துள்ளார். தற்போது 2 பிள்ளைகளும் இறந்த நிலையில் கணவனும் உயிருக்கு போராடிக் கொண்டு வைத்தியசாலையில் இருக்கிறார் என்ற மிக மிக சோகமான செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது லண்டனில் இது போல பல குடும்பங்கள் கஷ்டத்தில் உள்ளார்கள்.ஆனால் அது இல்லாமல் களவாக வேலை செய்து வந்த நபர்களுக்கு, எந்த ஒரு கொடுப்பனவும் இல்லை. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது பெரும் கேள்விக் குறியான விடையமாக பிரிட்டானியாவில் பல மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.
° தமிழர்கள் லாக் டவுன் நிலையில் பல விடையங்களை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க கற்றுக் கொள்வது நல்லது. வீணான சண்டைகள் பெரும் இழப்பில் கொண்டு போய் சேர்க்கும். உங்களுக்கு மன நிம்மதி தரும் செயல்களை செய்யுங்கள். சிலவற்றை நீங்கள் காது கொடுத்து கேட்க்காமல் இருப்பதே நல்லது. அரசாங்கம் எப்படி பண உதவிகளை செய்கிறது? அதனை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பாக அராயவும். உதவியை நாடவும். வாழ்க்கை வாழ்வதற்கே.சாகடிக்கவோ.சாவதர்கோ.அல்ல.விழிப்பாக இருங்கள் உங்கள் அன்புக்குரியவர்களை.பாதுகாத்துக்கொள்ளுங்கள்.👏👏
{இறந்துபோன குழந்தைகள் பெயர்கள் கிடைத்துள்ளது }
மாமுனையை பிறப்பிடமாகவும் பிரித்தானியா, லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நிதின்குமார், நிஷா தம்பதிகளின் பாசமிகு பிள்ளைகளான
நிதின்குமார் நிகீஸ் – வயது 3 🌹
நிதின்குமார் பவின்யா – வயது 1🌹
இரண்டு குழந்தைகளுக்கும்.எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்
மதன் சிவா
.🌹🌹