Featureகட்டுரைகள்

நம்பிக்கைதான் வாழ்க்கை!… சங்கர சுப்பிரமணியன்.

கடந்த நூற்றாண்டில் உலகம் முழுக்க பரவிய தொற்று தோய்தான் மிகவும் கடுமையானது. பறவைகள் மூலம் H1N1 கிருமி வாயிலாக தோன்றிய இந்நோய் எங்கிருந்து தோன்றியது என்று தெரியாதிருந்தாலும் முதன்முதலில் அமெரிக்க இராணுவத்தினரிடையே கண்டறியப்பட்டு 1918-1919ல் உலகம் முழுவதும் பரவியது. 1918ல் உலகில் மூன்றில் ஒருபங்கு பரவியிருந்த இந்த தொற்றுநோய் அன்றைய கணக்குப்படி ஐம்பது கோடி மக்களுக்கு பரவியிருந்தது.

இந்த நோயால் உலகம் முழுக்க அப்போது ஐந்து கோடி மக்கள் இறந்தனர். இதில் அமெரிக்காவில் மட்டும் இறந்தவர்கள் ஆறு இலட்சத்து எழபத்தையாயிரம் ஆகும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் இருபதுலிருந்து நாற்பது வயதிற்குட்பட்டவர்களையும் மற்றும் அறபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களையும் இந்நோய் அதிகமாக பலிகொண்டிருந்தது. ஆரோக்கியமானவர்களையும் அதுவும் இருபதிலிருந்து நாற்பது வயதுக்குள் உள்ளவர்களையும் இந்நோய் பலிவாங்கியிருந்ததே இதில் மிக முக்கியம். இந்த 1918 H1N1 கிருமியின் உட்கூறுகள் அறியப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் எதனால் அத்தகைய பேரழிவு ஏற்பட்டது என்பதை அறிய முடியவில்லை.

தொற்றுநோயை தடுக்கும் மருந்து இல்லாததாலும்
காய்ச்சல் கிருமிகளைக் கட்டுக்குள் கொண்டுவர மருந்து இல்லாமலும் இருந்ததால் அதைக் கட்டுப்படுத்துவதென்பது
உலக அளவில் மிகவும் குறைவாகவே இருந்தது. அதனால் நோயுற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதோடு வெளியிலிருந்து வருபவர்களை கண்காணிப்பது கிருமிநாசினியை பயன்படுத்தி ஆரோக்கியத்தை பாதுகாப்பது அதிகமாக மக்கள் கூடாதிருப்பது போன்றவைகளில் சீராக கவனம் செலுத்தி வந்தனர்.

இருபதாம் நூற்றாண்டில் H1N1 என்ற இத்தொற்றுநோய் மிகவும் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது. பயங்கரமான இந்நோயை கண்டறிய ஆய்வாளர்களின் வல்லுநர் குழுவும் தொற்றுநோய் பற்றி அறியவிரும்புபவர்களும் இணந்த அமைப்பு இக்கிருமி, அதைச்சார்ந்து தொடரும் மரபணுக்கள், மிகவும் பாதுகாப்பான பரிசோதனைக் கூடத்தில் மறபடியும் இக்கிருமியை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தது.

அமெரிக்காவிலிருந்து செயல்படும் CDC என்ற நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கிருமிகளைப் பற்றி முழுமையாகக் கண்டறியவும் வருங்காலத்தில் எதிர்கொள்ளும் தொற்றநோய்க் கிருமிகளுக்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ளவும் முயன்று வருகிறது.

இந்த அமைப்பு கரோனா என்ற COVID-19 என்ற தொற்றுநோய்க் கிருமிக்கும் கூடிய விரைவில் ஒரு வழி கண்டபிடிப்பார்கள் என்று நம்புவோம். பயமோ பதட்டமோ இன்றி இருப்போம்.

-சங்கர சுப்பிரமணியன்.

நன்றி: CDC

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *