நேசம் நாடும் நெஞ்சங்கள்

ராசையா ராசபூபதி!… மானிப்பாய் .. யாழ்ப்பாணம்.

அன்பான புலம் பெயர்ந்து வாழும் உறவுகளே!
இந்த அம்மா இரண்டு கால்களும் இயங்காதவர்.கூடப்பிறந்தவர்கள் இருவர் அவர்களும் வறுமையின் காரணமாக இவருக்கு உதவ முடியாத நிலையில் இவரை கவணிப்பதில்லை. இவர் பல காலமாக அயலவர்களின் உதவியால் தனது அன்றாட வாழ்வை கழித்து வந்தார். தற்போது ஏற்பட்டுள்ள அவசர கால சூழலில் அயலவர்களும் உதவியும் கிடைக்காததால் அன்றாடம் ஒரு வேளை உணவுக்கே மிகவும் சிரமப்படுகிறார். வயது 72

இவரின் நிலமை மிகவும் பரிதாபத்தி;ற்குரியதாக இருப்பதாக அக்கினிக்குஞ்சு வாசகர் ஒருவர் அறியத்தந்தார். இவரின் பரிதாப நிலையை புரிந்து கொண்ட அக்கினிக்குஞ்சு நிர்வாகம் இவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்வதற்கான ஒழுங்குகளை அக்கினிக்குஞ்சு யாழ் நிருபர்கள் ஊடாக செய்துள்ளது.
எனவே இவருக்கு தொடர்ந்து உதவி தேவைப்படுவதால் உதவ விரும்பும் இரக்க உள்ளங்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் அவரை தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் அறியத்தரப்படும்.
பெயர் …. ராசையா ராசபூபதி
வயது … 72
வதிவிடம் … மானிப்பாய் .. யாழ்ப்பாணம்.
எம்முடன் தொடர்பு கொள்ள .. akkinikknchu@hot mail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.