கம்யூனிசத்தின்மறுபெயர்_மனிதாபிமானமே!
உலகத்திற்கே போலீஸ்காரனாக தன்னை நினைத்து கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு இன்று வரை கண்ணில் விரல்விட்டு ஆட்டம் காட்டும் நாடு எதுவென்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்,அந்த நாடு அமெரிக்கா வின் வெகு அருகில் இருக்கும் சின்னஞ் சிறு நாடான #பிடல்_காஸ்ட்ரோ_தலைமையில்
#கம்யூனிஸ்டுகள்_ஆட்சி_செய்த_கியூபா என்று.
ஈரான்,ஈராக்கில் பெட்ரோலியம் போல உலகின் சக்கரை கிண்ணம் என்று அழைக்கப்பட்ட கியூபாவின் சக்கரை வளம் அமெரிக்காவின் கண்ணை உறுத்த,அடிபணிய மாட்டோம் என கியூபா வீரம் காட்டியது.
தனக்கு கட்டளைக்கு கீழ் படியாத நாடுகளின் மீது போர் தொடுப்பது,அந்த நாடுகளின் பிற்போக்கு வாதிகளுக்கு எல்லா ஆதரவும் அளித்து அரசை கவிழ்ப்பது, பொம்மை ஆட்சியாளர்களை அமர வைப்பது, தனது கொள்கைகளுக்கு பிடிக்காத நாட்டு தலைவர்களை படுகொலை செய்வது என உலக நாடுகளில் அமெரிக்கா ஏகாதிபாத்தியம் நிகழ்த்திய படுகொலைகளும் அட்டூழியங்களும் ஏராளம்!அந்த வகையில்”#கியூபாவில்_தோழர்
#பிடல்_காஸ்ட்ரோவை_கொல்வதற்கு“நூற்றுக்கும் மேலான முயற்சிகளை #அமெரிக்கா_CIA செய்தது.
கியூபா என்னும் சின்னஞ்சிறு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் உட்பட அரசு ரீதியான தடைகள் அனைத்தையும் ஏவி,மற்ற நாடுகளை யும் அதற்காக நிர்பந்தித்து கியூபாவை உலகில் இருந்து தனிமைபடுத்தியது அமெரிக்கா.
இன்று கொரானா போல 1980 ல் கியூபாவில் மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்!
“உலக நாடுகளே! எங்கள் மக்களின் சாவை தடுத்து நிறுத்துங்கள்! மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்களை அனுப்பி உதவி செய்யுங்கள்”,என #பிடல்_காஸ்ட்ரோ கெஞ்சினார்!
அமெரிக்காவுக்கு பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை.
பெரும் இழப்பிற்கு பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப்பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன!
அமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர், ஐரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில், கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையை பிடல் உருவாக்கினார்.
உலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது.அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாய் மருத்துவச் சுற்றுலா செல்ல தொடங்கினார்கள்.
இவ்வளவு மருத்துவப் புரட்சியை செய்த பிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்!
உலக நாடுகளே!உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள்”, என்று அறிவித்தார்.
அவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 இலட்சம் மருத்துவர்களை கியூபா அனுப்பி உள்ளது.
இன்றைக்கு ‘கொரோனா’ வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ, அப்படி 60 ஆண்டுகளாக இந்த கியூபா என்ற சின்னஞ் சிறு நாட்டை அமெரிக்கா தனிமைப் படுத்தி வைத்தி இருக்கிறது!
அவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்த கியூபா!
கியூபா கொரோனாவுக்கு மருந்து தயாரித்து சீனாவிற்கு அனுப்பி வைத்து விட்டு உலகம் முழுவதும் தன்னுடைய மருத்துவ சேவையை தொடங்கியுள்ளது.
39 வருடங்களுக்கு முன்பு கியூபா என்ற நாடு கண்டுபிடித்த மருந்தை W.H.O தடை செய்தது. ஆனால் அதே மருந்தால் தான் இன்று சீனா தங்கள் நாட்டு கொரோணா நோயாளிகளை கட்டுப்படுத்துகிறார்கள்! அது அன்று கியூபா கண்டுபிடிச்ச #Interferon_Alpha_2b என்ற மருந்தே !!
இப்போதாவது புரிகின்றதா பொருளாதார தடை ஏன் விதிக்கப்படுகின்றது என்று!
எல்லா நாடும், தனது நாட்டு எல்லையை மூடி சொந்த நாட்டு மக்களைக்கூட உள்ள விடமாட் டேன்னு சொல்லுறான்.ஆனால், கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி அனுப்பிய போது,கியூபா தனது துறைமுகத்தில் அனுமதித்து அவர்களுக்கு தஞ்சம் கொடுத்து உள்ளது.அவர்கள் அனைவருக்கும் மருத்துவம் வழங்கி குணப்படுத்த முன்வந்துள்ளது.
அதற்கு வித்திட்டது #கம்யூனிசம் என்னும் பேரன்பு…!
Thiyagarajan Rangaswamy நன்றிகள்!