முகநூல் குழுமங்களுக்கு/இலக்கிய அமைப்புகளுக்கு அன்பான வேண்டுகோள்!….
தற்போதைய கொரோனா வைரஸ் தாக்குதல் மூன்றாம் உலகப்போர் போல நடக்கிறது. இந்திய நாட்டில் அதுவும் தமிழகத்தில் உள்ள சூழல் தன்மையால் வைரஸ் பரவுதல் குறைவாக உள்ளது. இதனை சாதகமாக எடுத்துக்கொண்டு யாரும் பயணித்தல் வேண்டாம்.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட உயிரிழப்பால் 20 மாகாணங்கள் அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ளன. பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
ஐபிஎல் கிரிக்கெட், ஒலிம்பிக் போட்டிகளும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்தது.
இன்று நமது மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. வடமாநிலங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே….
* முகநூல் குழுமங்கள் ஏப்ரல் இறுதிவரை கவியரங்குகள், ஆண்டுவிழாக்கள் போன்றவற்றை தவிர்த்திடுங்கள்.
* ஏப்ரல் / மே மாதங்களில் இந்த தாக்கம் தணிய வாய்ப்புள்ளது. எனவே ஜூன் மாதம் முதற்கொண்டு விழாக்களை நடத்தலாம்.
* வீட்டிலிருந்தபடியே கவிதை மற்றும் மற்றப் போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
* நூல் தயாரிப்புக்கு உண்டான வேலைகளை செய்யலாம்
* சிறப்பாக இலக்கியப்பணிகளை இணையம் வழி பதிவிட்டு நேரத்தை பயனுள்ளதாக்கலாம்.
* குழுமங்கள் தங்களது ஆண்டுவிழாக்களை ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்த சிறப்பான திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.
* இலக்கிய அமைப்புகள் போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களை இந்த இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.
* பள்ளிக்கூடங்கள் விடுமுறை அறிவித்ததால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுடன் நேரம் செலவழித்து அவர்களுக்கு கதைசொல்லியாக இருக்கலாம்.
* கொரோனா குறித்து மீம்ஸ், கேலி கிண்டலுடன் பதிவுகள், கவிதைகள் போடுவதை தவிர்த்து இளைய தலைமுறைக்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
இது ஒரு பீதி ஏற்படுத்தும் நோக்கமல்ல….வரும் முன் காக்கவேண்டும் என்ற எனது வேண்டுகோள் மட்டுமே.
நன்றியுடன்….
…..கா.ந.கல்யாணசுந்தரம்