படைப்பாளிகள்

கவிஞர் — இரா.இரவி.

கவிஞர் — இரா.இரவி.

படைப்பாற்றல் :
கவிதைச் சாரல் – 1997
ஹைக்கூ கவிதைகள் – 1998
விழிகளில் ஹைக்கூ – 2003
நெஞ்சத்தில் ஹைக்கூ – 2005
என்னவள் – 2005
இதயத்தில் ஹைக்கூ – 2007
கவிதை அல்ல விதை – 2007
மனதில் ஹைக்கூ – 2010
ஹைக்கூ ஆற்றுப்படை – 2010
சுட்டும் விழி – 2011
ஆயிரம் ஹைக்கூ – 2013
புத்தகம் போற்றுதும் – 2014
கவியமுதம் – 2014

சிறப்புக்கள் ;தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களை நடுவராக் கொண்டு விழிப்புணர்வு பட்டி மன்றங்களில் பேசி வருகிறார் .

கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தலைமையில் கவியரங்களில் கவிதை பாடி வருகிறார் .

26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்
.
சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.

புதுவை எழுத்தாளர் சங்கம் ஹைக்கூ கவிதை நூல் சிறந்த நூலாக தேர்வு செய்து பரிசும் பாராட்டுச் சான்றிதழும் புதுவைஆளுனர் முன்னிலையில் ஆளுனர் மாளிகையில் புதுவை துணைவேந்தர் வழங்கினார்.

லண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய ரீதியில் நடத்திய கவிதைப் போட்டி – இருதடவைகள் பரிசு பெற்றுள்ளார்.

மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடமிருந்துவளரும் கலைஞர் விருது பெற்றுள்ளார்.

கணித்தமிழ் சங்கம் மதுரையில் நடாத்திய கணிப்பொறித் திருவிழாவில் ‘ தமிழும் அறிவியலும் ‘ என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.

டில்லி ‘ மக்கள் காப்புரிமை ‘ மாத இதழ் நடாத்திய கட்டுரைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.

மனிதநேய் அறக்கட்டளையின் சார்பில் மனித ‘நேயப்படைப்பாளர் ‘ விருது பெற்றுள்ளார்.

கவியருவி, கவிச்சிங்கம், கவிச்சூரியன், ஹைக்கூ திலகம் எனப் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.

நகர் முரசு வார இதழின் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிஞர் விருது பெற்றுள்ளார்.

27.9.2014ல் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா கவிமுகில் அறக்கட்டளைமற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து சென்னையில் நடத்திய மாபெரும் விழாவில் எழுத்தோலை விருது சிலம்பொலிசெல்லப்பன் அவர்களால் கவிஞர் இரா. இரவிக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் உதவி சுற்றுலா அலுவலராக மதுரையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப்பணிகளும் செய்து வருகின்றார்.

அமெரிக்க மேரிலாண்டில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது .

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலில் இவரது 9 ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றிருக்கிறது.

மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன .

விருதுநகர்வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி பாட நூலில் இவரது 2 ஹைக்கூ இடம் பெற்றுள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலில் 2014 ஆண்டில் இரண்டாம் முறையாக இரண்டுஹைக்கூ இடம் பெற்றுள்ளன.

கவிதை உறவு மாநில அளவில் நடத்திய நூல்கள் போட்டியில் கவிஞர் இரா .இரவி எழுதிய கவியமுதம் நூலிற்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது

பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார் .

தினமலர் நாளிதழில் என் பார்வையில் தந்தை பெரியார் பற்றியும், ஆத்திசூடி பற்றியும் கட்டுரை எழுதி உள்ளார் .

இவரது நேர்முகம் பொதிகை ,ஜெயா , கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி உள்ளன .

.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.