படைப்பாளிகள்

பிரம்மஸ்ரீ மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா!

பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் இலங்கை கல்வி நிர்வாகப் பட்டத்தையும் பெற்றவர்.கல்வித் திணைக் களத்தில் தமிழ் மொழிக் கல்விப்பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்

,இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன்

இந்துசாதனம்,மெல்லினம்,உதயம், வல்லமை, அக்கினிக்குஞ்சு, உதயசூரியன், அவுஸ்திரேலிய தமிழ் முரசு, தடாகம், காலைக்கதிர், பதிவுகள், நடு, எதிரொலி, மாலைத் தமிழகம், பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை, சிறுகதை,விமர்சனம்,ஆகியவற்றை எழுதியுள்ளார்.15 க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும், 10க்கு மேற்பட்டவில்லுப்பாட்டுக்களையும்,20க்கு

மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும்,எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும்குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்துள்ளார்.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்திரேலியாபேர்த் மாநகரில் கோவில் கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் கலைஇலக்கியச் சங்கத்தின் முன்னாள் தலைவர், மெல்பேண் தமிழ்ச்சங்கம் , விக்டோரியா இந்துக்கல்வி மையம், ஆகியவற்றின் ஆலோசகர் சிட்னி உதயசூரியன் சஞ்சிகையின் பிரதம ஆலோசகர் , அக்கினிக்குஞ்சு மின்னிதழின் இலக்கிய ஆலோசகர் குழுவின் தலைவர், தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் பன்னாட்டு ஆலோசகர், தமிழக அரசின் உலகத் தமிழ்ச் சங்கத்தின்

” உலகத்தமிழ் ” மின்னிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர் மேற்கு அவுஸ்திரேலியா நர்த்தனாலயா நடனப் பள்ளி , மெல்பேணில் தன் இசைப்பள்ளி ஆகியவற்றின் பிரதம ஆலோசகர்

தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ்ச்சங்க “மொழியியல் விருது” , கம்பன்கழக “சான்றோர் விருது”, மலாயா பல்கலைகழக “சாதனை விருது” அக்கினிக்குஞ்சு “வாழ்நாள் சாதனையாளர்” விருது, கிழக்கிலங்கை “முத்துமீரான் விருது”, தடாகம் கலை இலக்கியவட்டத்தின் ” தமிழ்ச்சுடர் விருது ” உலகத் தொல்காப்பிய மன்றம் புதுச்சேரியின் ” மரபுப்பாமணி விருது ” தடாகத்தின் ” கவியருவி விருது ” எனப்பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். பல சர்வதேச மாநாடுகளில் கலந்து

ஆராய்சிக்கட்டுரைகள் சமர்ப்பித்தும் உரைகளும் ஆற்றிக் கொண்டும் ஆற்றியும் வருகிறார்.

” ஆஸ்திரேலியத் தமிழ்ப் படைப்புக்களில் தமிழ்ச் சமூகம் ” என்னும் ஆராய்ச்சி நூல் தமிழக அரசின் உலகத் தமிழ்ச் சங்கத்தால் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியக் கல்விசார் ஆய்வாளர்கள் அமைப்பின்

” வாழ்நாள் சாதனையாளர் ” விருதினையும் அண்மையில் பெற்றிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *