முச்சந்தி

2025 ஒக்டோபர் 30 ஆம்திகதி முதல் இன்று வரை 4520 கிலோ கஞ்சா, 1066 கிலோ ஹெரோயின், 1930 கிலோ ஐஸ் , 270 கிலோ கொக்கைன் மீட்பு

போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில்ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாதகமானது அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக’தேசிய செயற்பாட்டு சபை நேற்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் அவ்வப்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் உருவானபோதிலும், எந்தவொரு சவாலுக்கும் மத்தியில் போதைப்பொருள் அச்சுறுத்தலைஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முடங்கக் கூடாது என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

போதைப்பொருள் விநியோகம் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடித்தல்,புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை வேகமாகவும் கைவிடாமலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து சமூகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களைப் பேணி, இந்த தேசிய வேலைத் திட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதிஆரம்பிக்கப்பட்ட ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் இதுவரையிலானமுன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக்கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த வேலைத்திட்டம் தற்போதையஅரசாங்கம் குறித்து மக்கள் நம்பிக்கை கொள்வதில் முக்கியமானதொரு காரணியாக அமைந்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் அளவுபெருமளவில் அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரிவினர் புள்ளிவிவரங்களின்அடிப்படையில் இங்கு சுட்டிக்காட்டினர்.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 30 ஆம்திகதி முதல் இன்று வரை 124,412 கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 4520 கிலோ கிராம் கஞ்சா, 1066 கிலோ 352 கிராம் ஹெரோயின், 558,300 சட்டவிரோதசிகரெட்டுகள், 1930 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 270 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 983,143 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இங்குசுட்டிக்காட்டப்பட்டது.

கைப்பற்றப்பட்ட இந்த கொக்கைன் தொகையானது வரலாற்றில் அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய கொக்கைன் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் தொடர்பானதகவல்கள் 1818 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அதிகளவில் கிடைத்து வருவதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்துதொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்கள் உள்ளதாகவும், அவர்களில்1772 சிறுவர்களும் 81 சிறுமிகளும் அடங்குவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சந்தேக நபர்கள் 196பேரும், தடுப்புக் காவலில் 2268 பேரும் உள்ளதோடு, தற்போது 1840 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு அளிப்பதில் நிலவும் சட்ட ரீதியான பலவீனங்களால் அந்தப் பணிகள்தாமதமான போதிலும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது குறித்து கலந்துரையாடிஎதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதேபோல், அமுலில் உள்ள புனர்வாழ்வு சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள்காரணமாக போதைக்கு அடிமையானவர்களை முறையாக சமூகமயப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அந்த மையங்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லாமை குறித்தும்இங்கு கலந்துரையாடப்பட்டது.

புனர்வாழ்வு சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக திருத்தம் செய்வதற்கும், அதற்கான முன்மொழிவுகளை மிக விரைவாகப் பெற்றுநிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருள் மாதிரிகளைப் பரிசோதித்து அறிக்கைபெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவது குறித்தும், அது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பாகசுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பலவேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் அடிப்படை சிகிச்சைகளைப்பெறுவதற்கான சூழலை உருவாக்குதல், மனநல மருத்துவ சிகிச்சைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தங்குமிட சிகிச்சை அளித்தல் மற்றும் சமூகஅடிப்படையிலான புனர்வாழ்வு, மீளாய்வு போன்ற 6 பிரதான உத்திகளின் ஊடாக அந்தவேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகச் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

அதேபோல், போதைக்கு அடிமையான இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப்பெண்களுக்காகத் தனித்தனியான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *