பலதும் பத்தும்

வாழ்நாளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத விலங்கு

பொதுவாக, தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால், வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காத ஒரு விலங்கு இருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

அந்தவகையில், தன் வாழ்நாளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத விலங்கு கங்காரு எலி.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த வகை எலிகள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நேரடியாக தண்ணீர் குடிப்பதில்லை.

இந்த கங்காரு எலிகள் பெரும்பாலும் பாலைவன பகுதிகளில் வாழ்கின்றன.

பெரிய தலை, பெரிய கண்கள், குறுகிய முன்கைகள் மற்றும் மிகவும் நீண்ட பின்னங்கால்கள் ஆகியவை இதன் முக்கியமான உடல் அமைப்பாகும்.

மேலும், குளிர்காலத்தில் உணவை சேமித்து வைத்து அதையே பயன்படுத்தி வாழ்கின்றன என்று கூறப்படுகிறது.

இந்த எலிகளின் உடலில் உள்ள செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுவதால், தனியாக தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது.

நீண்ட பின்னங்கால்கள் இருப்பதால் இவை மிகவும் வேகமாக ஓடும் திறன் கொண்டவை. அதனால் தான் இந்த எலிக்கு கங்காரு எலி என்று பெயர் வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *