உலகம்

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான்

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமையை சவூதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரியாத்தில் நடைபெற்ற வளைகுடா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தநிலையில், ஈரான் ‘தவறான கணக்கீடுகளை’ மீளாய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரான் தனது எரிசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களைத் தாக்கப்போவதாக எச்சரித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *