உலகம்

இஸ்ரேல் தாக்குதல் – லெபனானில் 912 பேர் பலி!

இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் இதுவரை 912 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் 67 பேர் பெண்கள், 111 குழந்தைகள், 38 சுகாதாரப் பணியாளர்கள் (வைத்தியர்கள், செவிலியர்கள்) அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,221 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி வரை பலி எண்ணிக்கை 886 ஆக இருந்த நிலையில், நேற்று (17) அது 912 ஆக அதிகரித்துள்ளது. பெய்ரூட் உட்பட லெபனானின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வைத்திய நிறுவனங்கள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பிப்.28 அன்று இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவுபெற்ற ஹெல்பொல்லா அமைப்பு, மார்ச் 2 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *