பழைய டூத் பிரஷ்ஷை தூக்கி எறியாதீங்க- இதோ அசத்தலான வீட்டு உபயோகக் குறிப்புகள்!

பழைய டூத் பிரஷ் சிறியதாகத் தெரிந்தாலும், கை எட்டாத மூலைமுடுக்குகளைச் சுத்தம் செய்வதில் இது ஒரு “மினி சூப்பர் ஹீரோ” போலச் செயல்படும்.
சிறிது சோப்பு அல்லது கிளீனருடன் இதைப் பயன்படுத்தி உங்கள் வீட்டை எப்படி ஜொலிக்க வைக்கலாம் என்று பார்ப்போம்:
அழுக்கு படிந்த காலணிகளின் விளிம்புகள், தையல்கள் மற்றும் அடிப்பகுதியில் உள்ள கடினமான அழுக்குகளை அகற்ற டூத் பிரஷ் மிகச் சிறந்தது.
சிறிது லிக்விட் சோப்புடன் பிரஷ்ஷால் தேய்த்தால், பழைய காலணிகள் கூடப் புதியது போல மின்னும்.
அடுத்து ஜொலிக்கும் நகைகள் அதாவது நகைகளின் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்குள் புகுந்துள்ள தூசியைத் துணியால் அகற்ற முடியாது.
பழைய பிரஷ்ஷை வைத்து மெதுவாக தேய்த்தால், நகைகளின் இடுக்குகளில் உள்ள அழுக்கு நீங்கி மென்மையான பளபளப்பு மீண்டும் கிடைக்கும்.
அத்துடன் சமையலறை சிங்க், குழாய்களின் அடிப்பகுதி மற்றும் கேஸ் அடுப்பின் மூலைகளில் துணி கொண்டு சுத்தம் செய்வது கடினம்.
இந்தப் பகுதிகளில் சோப்பு கரைசலைத் தடவி டூத் பிரஷ்ஷால் தேய்த்தால், பிடிவாதமான எண்ணெய் பிசுக்குகள் மற்றும் அழுக்குகள் எளிதில் நீங்கும்.
வீட்டில் உள்ள மரச் சிலைகள் அல்லது கதவு நிலைகளில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளில் தூசி படிந்தால், அவற்றை அகற்ற டூத் பிரஷ் சிறந்த கருவி. இது மரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் தூசியை அப்புறப்படுத்தும்.
வீட்டு உபயோக மின் சாதனங்களான மிக்ஸி ஜார் பிளேடுகள், கிரைண்டர், காபி மேக்கர் மற்றும் கம்ப்யூட்டர் கீ-போர்டு போன்ற சாதனங்களில் உள்ள தூசியை அகற்ற டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்தலாம். இந்த சாதனங்களின் ஆயுளைக் கூட்டவும், அவற்றைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.
![]()