உலகம்

அவசரகால எரிபொருள் கையிருப்பை விடுவித்தது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அந்நாட்டு அரசு தனது இருப்பு வைப்புத் தொகையிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை சந்தையில் வெளியிடத் தொடங்கியுள்ளது.

ஈரானில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் உலகளவில் விலை உயர்ந்துள்ள நிலையில், தட்டுப்பாட்டைக் குறைக்க சுமார் 762 மில்லியன் லிட்டர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைச் சேமித்து வருவதால், பல இடங்களில் இருப்பு தீர்ந்து போகும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அளவு மட்டும் கொள்வனவு செய்யுமாறு ஆஸ்திரேலிய எரிசக்தித் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *