இலங்கை

எரிபொருள் நெருக்கடி தீவிரம் உலக நாடுகளை விட இங்கு நிலைமை மோசம்

உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் எரிபொருள் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், எமது நாட்டில் நெருக்கடி நிலைமை அதிகரிப்பதற்கு முன்னர் அரசாங்கம் காலம் தாழ்த்தாது இது தொடர்பான உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பெரமுன அலுவலகத்தில்  நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள மற்றைய நாடுகள் ஏற்கனவெ தயாராகியுள்ளன. ஆனால் நாங்கள் இப்போதுதான் தயாராகின்றோம். காலம் தாழ்த்தியாவது இது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் நிலக்கரி இறக்குமதி நஷ்டத்தை ஈடு செய்வதற்காக எரிபொருள் விலைகளை அதிகரித்தனர். இது உலக சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியால் விலை அதிகரிக்கப்பட்டது அல்ல. இப்போது எரிபொருள் கியூஆர் முறைமை கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும்.

தற்போதைய நிலைமையில் மேலும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தக்கூடாது. பல்வேறு நாடுகள் வீட்டில் இருந்து பணியாற்றும் முறைமை, வீடுகளில் இருந்து கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றன. கொவிட்ட காலத்தில் இதுபோன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் ஆராய்ந்து தீர்மானிப்பதில் பலனில்லை. இந்த அரசாங்கம் காலம் தாழ்த்தாது உரிய காலத்தில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *