கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முல்லைதீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்திற்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மீனவர்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து கவனயீப்பு போராட்டம் ஒன்றினை அந்தப் பகுதியில் மேற்கொண்டனர்.
தனிநபர் ஒருவனால் இரண்டு வாரங்களாக பிரதேச மக்களுக்கு சொந்தமான வயல் காணிகளை ஆக்கிரமித்து உப்பளம் நிர்மாணிக்கம் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கடல் நீரானது நீர் பம்பிகள் மூலம் பாத்திகளில் பாய்ச்சுகின்ற நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த உப்பளம் அமைக்கப்பட்டால் கொக்கிகுளாய் கடல் நீரி மீன்வளம் அழிவதுடன் பிரதேச வயல் நிலங்களும் உவராகின்ற நிலைமை ஏற்படும் என பிரதேச விவசாயிகளும் மீனவர்களும் கவலை வெளியிடுகின்றனர் கொக்கிளாய் கடல் நீரேரியே சூழ உள்ள மூன்று இன மக்களும் இந்த உப்பளம் அமைக்கும் வேலை திட்டத்திற்கு எதிராக தமது எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர் இதில் சுமார் 300 வரையிலான மீனவர்களும் விவசாயிகளும் பங்கேற்றத்துடன் செல்வராஜ் கையேந்திரன் அவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்.
![]()